Wednesday, September 12, 2012

ஸ்ரீ வாடாமுலையம்மை உடனமர் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் திருமயானம் .திருக்கடவூர்


திருக்கடவூர் மயானம்

மூலவர் : ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர்
அம்பாள் : ஸ்ரீ வாடா முலையாள்

திருக்கோவில் அமைவிடம் : நாகை மாவட்டம் தரங்கம்பாடிவட்டம் திருக்கடவூருக்கு அருகே திருமயானம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது

.அபிராமி பட்டர் பாடிய புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோவிலுக்கு பின்புறமாக 1 கி.மீட்டர் தூரத்தில் ஆட்டோ பயணத்தில் அமைந்துள்ளது. நடந்தும் செல்லலாம் . திருக்கடவூர் வந்து அம்பிகையை தரிசனம் செய்து அருகே உள்ள திருக்கடவூர் மயானத்திற்கு சென்று வரலாம் .

சைவ சமயத்தில் உள்ள மயானங்கள் ஐந்து ஆகும்

1 .காசிமயானம்
2.கச்சி
3.காழி
4.நாலூர்

5. கடவூர் மயானம் ( இதில் ஐந்தாவது திருத்தலமாக திருமயானம் அழைக்கப்படுகிறது ).

பெயர்காரணம் :

பிரம்மதேவரை எரித்து நீராக்கி மீண்டும் சிவபெருமான் உயிர்பித்த ஸ்தலம் .அதனால் இங்குள்ள சிவபெருமானுக்கு பிரம்மபுரிஷ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

திருமயானத்தின் சிறப்புகள் :
திருஞானசம்பந்தர் ,திருநாவூக்கரசர் , சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

மார்க்கண்டேயருக்கு காசி தீர்த்தத்தை வரவழைத்து அருளிய ஸ்தலம் .
அன்று இருந்து இன்று வரை திருமயானத்தில் இருந்து தான் திருக்கடையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஷ்வரருக்கு தினமும் புனிதநீர் எடுத்து சென்று அபிஷேகிக்கப்படுகிறது.

இங்கு தனிசன்னதியில் சிங்காரவேலர் . 3 ஆம் நூற்றாண்டில் மெளரியர் படைக்கு சிங்கார வேலர் தலைமைதாங்கி அழித்தார் . அதனால் மெளரிய அரசன் சிங்காரவேலி எனும் 53ஏக்கர் நிலத்தை காணிக்கையாக்கியதாக வரலாறு.

சேக்கிழார் திருக்கடவூர் மயான சிறப்பை

" காசியினும் மீறிய சீர் மண்ணு திருக்கடையூர் மயானம் வணங்கி"

என வர்ணிக்கையில் திருக்கடவூர் மயானச்சிறப்பை அழைக்கிறார் .1928 ல் கடைசியாக குடமுழுக்கு நடந்து 83 ஆண்டுகள் ஆகிறது . திருக்கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முடிந்தால் நேரில் சென்று தரிசித்து உதவுங்கள்

முடிவுரை :

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாயங்களில் புகழ்பெற்ற திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் மிக நுட்பமானது திருக்கடவூர் மயானமாகும் . நல்லதோர் சிவாலயம் ஏதோ ஓர் காரணத்தால் மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது .

திருக்கோவில் சென்று ஸ்ரீ வாடாமுலையாள் உடனமர் பிரம்ம புரிஷ்வரரை சென்று வணங்குங்கள். ஸ்ரீபிரம்மபுரிஷ்வரர் திருமேனியில் அபிஷேகித்த திருநீற்றை தருகிறார்கள் . அற்புதமணம் . திருக்கடவூர் திருமயானம் வந்து இறைவன் இறைவியை தரிசித்து நலன்கள் பெறுங்கள்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...