Monday, December 19, 2011

Arulmigu SRI MAGUDESWARAR temple KODUMUDI ,erode ,




அருள்மிகு கொடிமுடி நாதர் ஸ்ரீ மகுடேஷ்வரர் திருக்கோவில்


ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால சிவத்தலங்களில் ஒன்றாகும் .

மூர்த்திகள் :

ஸ்ரீ மகுடேஸ்வரர் (கொடுமுடி நாதர் ) ,
ஸ்ரீ வடிவுடைநாயகி ,
ஸ்ரீவீரநாராயணப்பெருமாள் ,
பிரம்மா ,
சனீஸ்வரர்

தீர்த்தம் :

தேவதீர்த்தம் காவிரிதீர்த்தம், பிரம்மதீர்த்தம் பரத்வாசதீர்த்தம்

திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் சிறப்புகள் :

சுமார் 2000ஆண்டுகள் பழமையான சிவத்தலம் .
சிவபெருமான் சுயம்பு மூர்த்த்தியாக உள்ள ஸ்தலம் .
கொங்கு நாட்டில் புகழ்பெற்ற 7 சிவத்தலங்கள் ஒன்று .
நால்வர்களில் அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம்,
காவிரி நதிக்கரையின் படுக்கையில் அமைந்த அழகிய திருத்தலம் ,
பிரம்மா விஷ்ணு.சிவன் மூவரும் ஒருங்கே அமைந்த ஸ்தலம் என பல வகையான சிறப்புகள் பெற்ற கொடிமுடி நாதர் , திருபாண்டிக்கொடுமுடி என்றெல்லாம் அழைக்கப்படும் சிவாலயத்தை பார்த்து அறிய வேண்டியது ஏராளம் .

பிரம்மா ,விஷ்ணு ,அகத்தியர் பரத்வாசர் வழிபட்ட ஸ்தலம் . மேருவின் சிகரமே லிங்கமாய் விளங்குவாதால் கொடுமுடி என பெயர் பெற்றதாக வரலாறு.

ஆலயம் உருவாக்கிய அரசர்களும்

அக்காலத்திய கல்வெட்டும் கி.பி 2 இம் நூற்றாண்டில் கோமவர்மரும் , தேர்மாறன் நரசிம்ம பல்லவன் 7ஆம் நூற்றாண்டிலும் ,சுந்தரபாண்டிய கேசரிவர்மன் 13 நூற்றாண்டிலும் , தண்டிகை காளியண்ணன் 17 ஆம் நூற்றாண்டிலும் திருக்கோவில் திருப்பணி செய்ததாக திருக்கோவில் வரலாறும் கல்வெட்டுகளும் இயம்புகிறது.

5காலப்புஜைகள் நடைபெறுகிறது . பிரமோற்சவம் ,சிவராத்திரி,பிரதோஷம் , ஆகிய விஷேச காலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

7 சன்னதிகள் கொண்ட 1 ஆம் சன்னதியாக அருள்மிகு ஸ்ரீ மகுடேஷ்வரர் ஸ்ரீதிருக்கோவில் சுயம்புவாக அழகாக அமைந்துள்ளார் . தட்சிணாமூர்த்தி ,காவிரிகண்ட விநாயகர் , சோமஸ்கந்தர் , அகஸ்தீஷ்வரர் ,கஜலட்சுமி ,ஸ்ரீசுப்பிரமணியர் ,சண்டிகேஷ்வரர், துர்க்கை ஆகியோர்களை திருக்கோவிலில் தரிசிக்கலாம் .

2ஆம் சன்னதியாக வடிவுடை அம்மன் அமைந்துள்ளார் .அழகான அம்பாள் சன்னதி நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது .திருக்கோவில உள் பிரகாரத்தில் வல்லப கணேசர் ,சோழிச்சரர் ,விசுவேசுவர் ,காசி விஷ்வநாதர் , விசாலட்சி ,சரஷ்வதி, சப்தமாதக்கள் சிலைகள் ரசிக்கவேண்டியனவாகும் .

3 ஆம் சன்னதியாக ஸ்ரீ பிரம்மாவின் சன்னதியாகும் . பிரம்மா தனியாக சன்னதிகொண்ட பெருமை மிக்க இடம் . 2000 வருடங்கள் கடந்த பழமையான வன்னி மரத்தடியில் அமர்ந்த பிரம்மாவின் சிலை அழகே உருவானதாகும் .

4 ஆம் சன்னதியாக ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் சன்னதியாக அமைந்துள்ளது. திருக்கோவில் கொடிமரமும் கருடாள்வார் சன்னதியும் அழகானதாகும் . திருக்கோவில் மூலவர் பள்ளிகொண்டுள்ள அழகு தரிசனத்திற்குரியது. திருமங்கையாள்வார் ,கருடாள்வார் , தொண்டரடிப் பொடியாள்வார் , திருமங்கையாள்வார் , குலசேகராள்வார் , பொய்கையாள்வார் , திருப்பாணாள்வார், பூதத்தாள்வார் ,பெரியாள்வார் ,மதுரகவி , பேயாள்வார் ,நம்மாள்வார் ,பிரம்ம நாதர் என அழகான சிலைகள் வணங்கத்தக்கது.

5.வது சன்னதியாக ஸ்ரீ லட்சுமி தாயார் ( ஸ்ரீமகாலட்சுமி) அழகான சன்னதியாகும் .
6 வதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியாகும் 7வது சன்னதியாக உள்ள ஸ்ரீசனிஸ்வரர் சன்னதி காக வாகனத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சனிஷ்வரருக்கு தனிச்சன்னியும் ,நவகிரக பீடத்தில் இருப்பது போன்று மேற்கு நோக்கி அமைந்திருப்பது விஷேசமான ஒன்றாகும் .

திருக்கோவில் வந்து செல்ல கொடுமுடியில் ரயில் நிலையம் .பழங்காலத்திலும் ,இப்பொழுதும் ,எப்பொழுதும் உயர்ந்து நிற்கிற காவிரிக்கரையில் அழகில் அமைந்துள்ள கொங்குநாட்டிலுள்ள 7 சிவஸ்தலங்களின் ஒன்றான ஸ்ரீ மகுடேஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி இறையருள் பெற்றுச்செல்லுங்கள் .

ஓம் சிவாய நமஹ

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...