Thursday, May 5, 2011

மேட்டூர் அணை,பூங்கா mettur dam & park






மேட்டூர் அணை பூங்கா (stanely dam mettur )

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தின் ஒர் முக்கிய சுற்றுலா தலமாகும். ஸ்டான்லி என்பவரால் கட்டப்பட்டதால் இது ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மேட்டூர் அணைப்பூங்கா கோடை விடுமுறையில் வந்து பார்க்க வேண்டிய பகுதியாகும் .

அண்மையில் நானும் எனது நண்பர்களுடன் சென்று வந்தேன். மிகக்குறைந்த டிக்கெட்டில் தற்போது அழகிய நீர் ஊற்றுகளுடன் அழகு படுத்தி இருக்கிறார்கள். பூங்கா முகப்பின் வலது புறம் பிரசித்தி பெற்ற அணை முனியப்பன் கோவில் உள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை தமிழ் நாட்டின் முக்கிய அணைக்கட்டாகும்.

பூங்காவின் முகப்பில் நீருற்றுகள் நம்மை ஜில்லென கூல் செய்ய உள்ளே செல்ல அழகாக செதுக்கப்பட்ட புல் வெளிகள் அழகான மரங்கள் பூச்செடிகள் உள்ளன.குழந்தைகள் விளையாட சறுக்கிகள்,உஞ்சல்கள் உள்ளன.மான்கள் கம்பி கட்டி சிறு மிருககாட்சி சாலைபோல மேய்கின்றன . மேட்டூர் அணை பூங்காவில் ஒர் குடிலுக்குள் நாகன்,சாரை போன்ற பாம்புகள் நீளமாய் பார்ப்பவர்களை திகிழூட்டுகிறது. மற்றொரு குடிலில் மலைப்பாம்பு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பாம்புகளை பார்க்க கூட்டம் அதிகமாக வருகிறது.

டேம் அருகிலோ,மேலே செல்லவோ,பூங்காவில் குடிக்கவோ பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை.மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் அரசால் அங்கு விற்கப்படுகிறது. குடும்பத்துடன் வரும் மக்கள் மீன்கள் வாங்கி பாத்திரங்கள் வாடகைக்கு பெற்று பூங்காவின் வெளியில் சமைத்து உள்ளே கொண்டு சென்று சாப்பிடுகிறார்கள்.

மேட்டூரில் இருந்து மைசூர்,மாதேஷ்வரன் மலை செல்லும் வழியில் உள்ள மேட்டூர் அணையும் பூங்காவும் ஓர் நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். காவிரியின் உபரிநீர் மேட்டூர் 16 கண் பாலத்தின் வழியாக திறந்துவிடப்படும். அணையின் கொள்ளளவு 120 அடி நிரம்பியதும் உபரிநீர் இப்பாலம் வழியாக திறக்கப்படும்.

நீங்களும் வந்து பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துரைகளை அனுப்புங்கள் நன்றி.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...