Tuesday, December 1, 2015

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி


தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.                         ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

Wednesday, July 22, 2015

அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி

சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் .               சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில்  திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி  அமைந்துள்ளது.                                                சுவாமிகள் பற்றி.    :     கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859  ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000  ஜீவசமாதி:   தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி

Monday, June 22, 2015

அம்பிகை மாயம்மா ஜீவசமாதி


சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம்.                                                                                                                                                                                                                                           மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள்  செய்தவர் என்பதை அறிந்தேன்.                                                                                                                                செல்லும் வழி   :                                                    சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில்,  சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும்.                                                                                                                                                                                        பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில்  அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Friday, May 15, 2015

கிச்சி குத்து மாரியம்மன் திருக்கோயில்

அண்மையில் ஓர் சிறப்பான ஓர் ஆலயத்தை தரிசித்து வந்தேன்.சக்தி அம்சமான
இந்த அழகிய திருக்கோயில் மூலவராக கிச்சி குத்து மாரியம்மன்
அடைந்துள்ளார். இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்
கொள்ளேகால் வட்டம் மாட்டெலி அருகில் சுள்ளுவாடி கிராமத்தில்
அமைந்துள்ளது.இது அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி - கொள்ளேகால் வழியில்
கர்கேகண்டீ 4 ரோட்டில் இருந்து 3கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.தரிசித்து வாருங்கள்.நன்றி

Thursday, November 20, 2014

சைவ உணவின் மேன்மை

சித்தர்களும் மகான்களும் , உயிர்கொலையை அறவே வெறுத்தார்கள் . ஓர்
உயிரைக்கொன்று தின்பதால் அதன் உயிர்வலி அதை சாப்பிடும் மனிதர்களுக்கு
நோயாக தாக்குவதும் உண்மையே . உயிரைக்கொல்லாது சைவ உணவு சாப்பிடுபவர் பலர் நீண்ட ஆரோக்கியத்துடன் காண முடிகிறது . ஆனால் இன்றோ குடியும் அசைவ உணவும் மனிதனின் அன்றாட தேவையாகிவிட்டது .

45 வயதிற்குள்ளாகவே கொடிய நோய்கள் தாக்குவதற்கு அசைவ உணவை அதிகம் புசிப்பதே காரணமாகும் . அப்ப சைவம் சாப்பிட்டால் நோயே வராதா என விதண்டாவாதம் பேசக்கூடாது .சித்தர்கள் உப்பை வறுத்தும் புளியை சுட்டும் சாப்பிட சொன்னார்கள் . நவநாகரீக உலகில் நுழைந்து பழையன எல்லாம் தொலைத்து விட்டோம் .

 உண்ணும் உணவே விஷமென எல்லோரும் பேசுவதை கேட்க முடிகிறது . இன்றைய சூழலில்எல்லாமும் விஷமாகிவிட்டதென பழமையை தேடி ஓடுகிறார்கள் மக்கள் . இது நல்ல விஷயம் கி.பி 1500 முன் தொலைத்த நம் பாரம்பரியத்தை சித்தர்கள் எழுதிய புத்தகங்கள் , சித்தர்கள் தேடல் என இன்றைய மக்களின் சித்தர்களின் தேடல்மிக நல்ல விஷயம் .

 சித்தர்கள் கலையில் ஜோதிடம் ,மாந்திரிகம் ,மருத்துவம்
என எதைப்பயின்றாலும் அசைவ உணவு தவிர்த்தால் சித்தர்கள் கலையில்
மேன்மையுறுவது எளிது.




 கங்கையில் படிந்திட்டாலும் கடவுளை பூசித்தாலும்
மங்குற்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கினாலும்.
சங்கையில்லாத ஞானசாத்திர முணர்ந்திட்டாலும் .
பொங்குறும் புலால் புசிப்போன் போய்நரகடைவானானன்றே .

 கலையொலாமுணர்ந்தானேனும் கரிசற தெரிந்தானேனும் ,
மலையெனஉயர்ந்தானேனும் மன இயல் அகன்றானேனும் ,
 உலகமெலாம் புகழ்ப் பல்லோர்க்குகுதவிய கையனேனும் ,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகடைவானற்றே ,


இத்திரனருள் கைப்பற்றி உயிர்க்கெலாம் இதத்தைச்செய்க ,
 சத்திய இரக்கம்இன்றேல் முத்தியை சார்கிலார் - சற் , பக்தியால்
 யோகம்சாரும் யோகத்தால் பரம் ஞானம் சித்தியாம் ,
 இதற்காதாரம் ஜீவகாருண்யம் அன்றே ,

                   
                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி

                                                               பஞ்சாட்சர பதி பசு பாச விளக்கம்


 பொல்லாப் புலாலை நுகரும் புலையரை,
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் ,
செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தின்
மல்லாகத் தள்ளி மறித்து வைப்பாரே

                                                                        திருமூலர் திருமந்திரம்

 இந்த
பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை ! இரண்டாம் பாடலில் அசைவம் தின்போரைபுலையன் என திட்டுகிற திருமூலர் மாமிசம் உண்போரை எமன் தூதுவர் வந்து அழைத்துச்செல்வர் என்கிறார் . இந்த காலத்தில் உண்மையான நரகம் என்பதுநோய்தான் ,

அசைவ உணவு , மசாலா உணவுகள் அஜினோ மோட்டா உணவுகள் ,
செரிக்காத புரோட்டா உணவுகள் தவிர்த்து காய்கறி ,கீரைகள் சாப்பிடுதல்
நலம் . அதே போல மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாமென திருமூலர் சொல்கிறார் .

 மனம் செம்மையாக முதல் படியே அசைவ உணவு
தவிர்ப்பதுதான் . மிருகத்தை தின்றால் மிருக உணர்ச்சியே வரும் . மானிட
உணர்வும், மனம் செம்மையாக ஆகவேண்டுமெனில் சைவத்தில் இருங்கள் .


உயிரைக்கொல்லக்கூடாது , அதை சாப்பிடக்கூடாது என விரும்பிய மகான்
திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லமை என இரு அதிகாரங்கள் திருக்குறளில்எழுதினார் .

 தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம்ஆளும் அருள்

                                                                26 அதிகாரம் புலால் மறுத்தல் 251

 தன் உடம்பைபெருக்க அசைவ உணவு உண்பவர்க்கு அருள் எங்கிருந்து கிட்டும் , அருள்என்பது இறையருளாகவும் அது அசைவ உணவு உண்போர்க்கு கிட்டாது என்றும்வினவுகிறார் 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
 எல்லா உயிரும் தொழும் .

                                                         குறள் 260ல் 26வது அதிகாரம் புலால் மறுத்தல்

 பொருள்உயிர்க்கொலை செய்யாமல் , அதை கொன்று உண்ணாதவனை கை கூப்பி எல்லா உயிரும்தொழும் என்கிறார் . எல்லா உயிரும் தொழுமென்றால் உயர்ந்த யோகியாய் மனிதன் அசைவத்தை விட்டதும் மாறுகிறான் என்றே தோணுகிறது . திருவள்ளுவர் 33 வது அதிகாரத்தில் கொல்லாமை யின் அவசியத்தை பாடி இருக்கிறார் .

 ஓன்றாகநல்லது கொல்லாமை மற்றதன்
 பின்சாரப் பொய்யாமை நன்று

                                                                                                    குறள் 323

உயிரைக்கொல்லாது இருத்தலே உயர்ந்த அறம் இரண்டவதாக உண்மை பேசுதல் நல்அறம் என்கிறார் . உயர்ந்த அறம் உயிர் கொல்லாமை என்கிறார் .




தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
 தின்னுயிர் நீக்கும் வினை

                                                                                                  குறள் 327

பொருள் : தன் உயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிரை போக்குதல் கூடாது அது கொடும் பாவம் என்கிறார் .


 இப்படி பல மேற்கோள்கள் சித்தர்
பெருமக்கள் பாடியுள்ளார்கள் . அதையெல்லாம் விட்டு அசைவத்தை உண்பதால் பல நோய்கள் உருவாகிறது .


 முடிவுரை :

 எல்லாவற்றிக்கும் ஓர் அதிகாரம் எழுதிய திருவள்ளுவரே 2 அதிகாரம் எழுதியுள்ளார் எனில் சைவத்தின் மேன்மையை
உணருங்கள் . கடைசியா வாழ்ந்த வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்
பயணியுங்கள் . நோயில்லாமல் வாழலாம் , அசைவம் உண்பதில்லை என மன உறுதிகொள்ளுங்கள் .

பல ஆலயங்கள் தரிசித்தும் ஒன்றும் ஜெயிக்க முடியவில்லை
என்பதற்கு காரணம் அசைவ உணவு உண்பதே . இது என் தனிப்பட்ட ஆய்வே தவிரவேதவாக்கு அல்ல . இறைவன் படைத்தது எல்லாம் சாப்பிடதானே என்கிறசமாதானத்தை ஏற்க முடியாது .

முட்டை அசைவமே 40நாளில் குஞ்சு பொறிக்கிற
ஒன்று எப்படி சைவமாகும் . சைவமாக மாறுவதெனில் முழுக்க மாறுங்கள் . அது தவிர்த்து அசைவம் உண்டு விட்டு யோக பள்ளிக்கு செல்கிறார்கள் .தியானம்கற்கிறேன் என்கிறார்கள் . தன்னை தானே ஏமாற்றி கொள்வது இது ..
உயிர்கொலை புரியாது , புலால் உண்ணாது சைவத்தில் இருங்கள் .

இறையருளும கிரகங்களும் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்பது என் கருத்து .சித்தர்கள் சொல்லிவிட்டு சென்ற சைவ உணவை உண்ணுங்கள் . மனம் செம்மையாகி மேன்மை அடைவீர்கள் . இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .

 கடந்த 1 வருமாக அடியேன் அசைவத்தை விட்டு
விட்டேன் . மனது தெளிவாக உள்ளது . நல்ல விஷயமென உங்களுக்கு தோன்றினால்சைவத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் . ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

. நன்றி .

 ஒம் சிவ சிவ ஓம் .

Monday, November 10, 2014

G.P இராஜன் எனும் விருட்ஷம்

என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத வெளியே வர வழியின்றி மிகக் கொடுரமான தருணத்தில் நிற்கிறேன் . 2014 ஆம் வருடம் மார்ச் மாத துவக்கத்தில் எனது அண்ணன் G.pஇராஜன் போன் செய்து எனக்கு இரத்தப்புற்று நோய் தாக்கியிருக்கிறது என சொன்ன நாளில் இருந்து இன்று வரை நடைப்பிணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

 எனது அண்ணன் எல்.ஐ.சி முகவராக பவானி கிளையில் கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்தார் . எனது குடும்பத்தின்
மூத்த சகோதரனாக என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்திய ஆசான் .
அண்ணனின் நன்பர்கள் சென்னை ,கேரளம் ,வேலூர் , கர்நாடக என பல ஊர்
கூட்டிப்போய் ஆயுர்வேதம் முதல் அலோபதிவரை பார்த்தார்கள் .

 சென்னையிலுள்ள ஒர் தனியார் மருத்துவமனை 40லட்சம் செலவாகுமென பேசியது ! அடையாரில் 25லட்சம் செலவாகும் என்றார்கள் ! எங்கே போவது ? ஏழை எங்கே போவான் ?

எப்படியும் இந்த உயிரைக்காப்பாற்றி விட வேண்டுமென சென்னையிலுள்ள ஓர்மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிட்சை கொடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில்வீட்டிற்கு வந்தார் . அடுத்த இரண்டு நாளில் முகம் வீங்கிய நிலையில் வாய் உட்பகுதியில் புண் ஏற்பட எது சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட வாந்திநிற்காமல் வரவும் என்ன செய்வதென புரியவில்லை !

 இந்த சூழலில் சத்தியமங்கலம் அருகில் புற்று நோய்க்கு ஒர் வைத்தியர் மருந்து கொடுப்பதாக கேள்விப்பட்டு கிளம்பினோம் . அத்தாணியில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் வழியில் காளியூர் பிரிவு என்ற இடத்தில் சரவணா
சித்தவைத்திய சாலை கேள்விப்பட்டு அந்த வைத்தியரிடம் அனுப்பி வைத்தேன் .


எந்த மருந்திலும் 25 நாளாக நிற்காத வாந்தியை அந்த சித்த வைத்தியர்
1நாளில் நாளில் நிறுத்தி சாப்பிட வைத்தார் . 25 நாட்களாக சாப்பிடாத என்
அண்ணன் G.p இராஜன் அன்று முதல் 3 வேளை உணவு சாப்பிட்டார் .படிப்படியாக மருந்தும் சாப்பிட்டு படிப்படியாக குணமாக ஆரம்பித்தார் .

அந்தவைத்தியர்க்கு எனது நன்றிகள் . 


 பின் 6 மாதம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அந்த சித்த மருந்து சாப்பிட படிப்படியாக இரத்த வெள்ளணுக்கள் குறைந்து என குணமாக ஆரம்பித்தார் . ஹீமோதெரபில் கொட்டிய முடி வளர்ந்தது . அவரைப்பார்த்து ஆச்சர்யர்ப்பட்ட நன்பர்கள் பலரும் அப்போது உண்டு .மறுபடி தன் வேலையாக வெளியே கிளம்ப அக்டோபர் முதல் வாரத்தில் நோயின்தாக்கம் ஆரம்பித்தது .

முதல் உள்நாக்கில் புண் வந்து சாப்பிட முடியாமல்
செய்தது . மறுபடி உணவு சாப்பிட முடியாமல் போக சிவப்பணுக்கள் குறைந்து
வெள்ளையணுக்கள் மறுபடி அதிகமாக ஆரம்பிக்க பின் சித்த மருந்து கொடுத்து கேட்காமல் கடைசியாக 15 நாட்கள் சென்னை சென்று ஆங்கில வைத்தியம்பார்த்தும் சிகிட்சை பலன் இன்றி

கடந்த 18.10.14 அன்று காலை 4.15 மணிக்கூ

எனது அண்ணன் G.p இராஜன் இறைவனுடன் கலந்து விட்டார் .


 இரத்த புற்று நோயில் 40வகை இருப்பதாக சொல்கிறார்கள் . எனது அண்ணாவுக்கு இருந்தது அதிகம் பாதிக்ககூடிய புற்று நோய் வகையாம் . ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மஜ்சை ஆப்ரேசன் செய்து மாற்றுவதே சிகிட்சை என்கிறார்கள் . அந்த ஆப்ரேசன் செய்தாலும் சிலகாலமே உயிர்வாழ வாய்ப்பு உள்ளதாம் .


எப்படியாயினும் இரத்தப்புற்று நோயை தற்காலிகமாக தள்ளிப்போடவே மருந்து இருக்கிறது என் வாழ்வில் நேர்ந்த உண்மை . இந்த பதிவின் நோக்கமே
யாரையும் குறை சொல்ல அல்ல . என் வாழ்வில் என் அண்ணாவிற்கு
நேர்ந்தவற்றை உங்களுக்கு தெரிந்து கொள்ளவே இந்த பதிவு . இது போன்ற
குணப்படுத்த முடியாத நோய்களில் பலரும் தினம் செத்துப்போவது ஏற்க முடியாது


இதற்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்க யாரேனும் இந்த பூமியில் அவதரிக்கவேண்டும் . பல ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டு மருந்தில்லா நோய்களைகுணப்படுத்த பல உயர்ந்த மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கவேண்டும் .நான்அன்றாடம் வேண்டி இறஞ்சுகிற சிவபெருமானும் , ஸ்ரீ வெங்கடாசலபதியும்சித்தர்களூம் இதைச்செய்யவேண்டும் .


வாழ்வின் எந்த சுகமும் அனுபவிக்காது, தினமும் காலையில் எழுந்து ஸ்ரீ செல்வ விநாயகரையும் ,ஸ்ரீ கக்குவாய்மாரியம்மனையும் வணங்கிவிட்டே சாப்பிட செல்கிற என் அண்ணன் ,புகை மது பழக்கம் இல்லாதவர் எப்படி இந்த நோய் தாக்கியது என ஆற்றாமை இன்று  வரை தொடர்கிறது . எப்படியும் என் தம்பி என்னைக்காப்பாற்றி விடுவான் என நம்பிய என் அண்ணாவின் ஆத்மாவிற்கு பதில் சொல்ல வழியின்றி வலியில்
தவித்துக்கொண்டிருக்கிறேன் .

 என் இப்போதைய வேண்டுதல் எல்லாம் அவர்விரும்பிச்செல்கிற திருப்பதியிலோ திருவண்ணாமலையிலோ இறைவனின் நிழலில் இளைப்பாறவேண்டும் என்பதே !

 இந்த முக்கிய தருணத்தில் எனக்கும் என்

குடும்பத்தினருக்கும் தோள் கொடுத்த நன்பர்கள் பலருக்கும் நன்றி.

 1.முதலில் திரு. செந்தில்குமார் M.S ராணிமருத்துவமனை ,அந்தியூர் 

 வேண்டும் போது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி அண்ணாவிற்கு பலமுறை இரத்தம் செலுத்தியும் வாழ வைத்தவர் அவர்க்கு என் நன்றிகள்

 2.
அண்ணாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றதும் ஒடி வந்து உதவிய அவரின்
நெருங்கிய நன்பர்கள்

 Tr. Murugan, Devolopment Officer, bhavani branch

Tr,palanisamy lic agent bhavani branch  

Tr,perumal lic agent bhavani branch 

Tr.kulandaisamy siddavaithiyar ,saravana sidda hospital ,kaliyur pirivu,sathyamamangalam,

உட்பட பல நன்பர்கள் பல்வேறு உதவிகள்

செய்தார்கள் ,

எனது நன்பர்கள் பார்த்திபன் நடராஜ் சீனிவாசன் என ஓர் பெரிய
பட்டியலே உள்ளது. அவர்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . இந்த
பதிவை படித்ததும் இந்த பதிவு அவசியமா என பல நட்புகள் கேட்கக்கூடும் .
இரத்தப்புற்று நோய் எந்த அளவு ஓர் குடும்பத்தை பாதிக்குமென
விளக்கியிருக்கிறேன் .

 இன்றைய காலத்தில் புற்றுநோய் ஒர் கொடிய எமனாக
உருவாகி வருகிறது . மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் , அடுத்த வரும்
பதிவுகளில் நோயில்லாமல் மனிதன் வாழ புற்றுநோய் பற்றியும் ஆய்வு செய்துசமர்பிக்கிறேன்.

 இந்த பதிவை படிக்கும் நட்புகள் எனது அண்ணன் G.pஇராஜனுக்காக அவர் ஆத்மா இறையருளுடன் கலக்க ஓர் நொடி வேண்டி கொள்ளுங்கள்.

. நன்றி

Wednesday, September 24, 2014

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் ஜீவசமாதி

திருவண்ணாமலை சித்தர்கள் மகான் அடங்கிய புண்ணிய பூமி அத்தகைய
பெரியோர்களில் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரும் ஒருவர் . அவர் வாழ்ந்த காலம்
1750முதல் 1829 வரையாகும் . திருவண்ணாமலை ஈசான்ய திசையில் நெடுங்காலம் தங்கி இருந்து வாழ்ந்ததால் ஈசான்ய ஞான தேசிகர் என பெயர் பெற்றார் .


ஈசான்ய லிங்க குளக்கரை அருகில் ஈசான்ய ஞான தேசிகர் மடத்தில் சித்தரின்
ஜீவசமாதி அமைந்துள்ளது . ஈசான்ய ஞானதேசிகரின் தந்தையார் திருநீலகண்டர்என்பவராவார் . ராய வேலூரில் இளமைக்காலத்தில் கந்தப்பன் என்ற பெயரில்வாழ்ந்த ஞானதேசிகருக்கு 7வது வயதில் சிவதீட்சை செய்யபட்டு பின் தேசிகர் என பட்டம் சூட்டி மகிழ்ந்தனர் .

பின்னாளில் திருமண ஆசை விடுத்து
சிவாலயங்கள் மனம் தேடலில் ஈடுபட்டு தில்லையம்பதிலில் சிவபெருமானின் தரிசனம் ஞானதேசிகருக்கு கிட்டியது .அங்கு மெளனகுரு சுவாமிகளின் ஆசியும் குருவருளும் ஈசான்ய ஞானதேசிகருக்கு கிட்டியது .
பின் மெளனகுரு சுவாமிகள் மேல் குருபக்தி கொண்டு பஞ்சரத்தினம் என்ற பாமாலைபாடினார்,

குருவிடம் யோக ஞானம் கற்ற கந்தப்ப தேசிகர் யோகபட்டை .யோகதண்டு
ஆகியற்றை பெற்று ஜடாமுடி தரித்து ஸ்ரீ மெளனகுரு சுவாமிகளிடம்
விடைபெற்றுச்சென்றார் . பின் தில்லையம்பதி விட்டு புறப்பட்டு திருவாருர்
தியாகராஜசுவாமிகளை தரிசித்து பின் மடப்புறம் குரு தட்சணாமூர்த்தி
சுவாமிகளுடன் சிலகாலம் வாழ்ந்தார் கந்தப்பர் எனும் ஈசான்ய ஞான தேசிகர் .


பின் வடதிசை நோக்கி திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்து அருகில்
பாக்காத்துமலையில் ஒரு குகையில் தங்கி தவம் புரியத்தொடங்கினார் .
ஞானதேசிகர் தவம் செய்வதை கண்ணுற்ற முத்துச்சாமி உடையார் தினம் தனது பசுமாடுகளின் பாலை தேசிகருக்கு கொடுத்து வந்தார் . உடையார் வீடு கட்டும் போது புதையல் கிட்ட உடையார் திடிரென பெரும் செல்வந்தராய் உயர்ந்தார் .


இதைக்கேள்விப்பட்ட மக்கள் தேசிகரிடம் பொருள் வேண்டி நிற்க மக்களின்
அறியாமை தொல்லையிலிருந்து விலகி,அங்கிருந்து கிளம்பி அண்ணாமலையில் கோரக்கநாதர் குளக்கரைக்கு வந்து தவமிருந்தார் . அருணாசலம் செட்டியார் என்பவர் குழந்தைப்பேருக்காக வந்து வேண்ட ஈசான்ய ஞான தேசிகர் அருளால்குழந்தைப்பேறு கிட்டியது .

 அக்குழந்தைக்கு முருகப்பர் என பெயர் சூட்டி
திருநீற்றுப்பையை கொடுத்து விட்டதாகவும் , அதை இன்று வரை வம்சாவழியாக வழிபட்டு வருகின்றனர் .

 ஞானதேசிகர் எங்கு சென்றார் பல பக்தர்கள் தேட அவர்களுக்கு அண்ணாமலையாரே காட்சி தந்து ஞானதேசிகரை திருவண்ணாமலை ஈசான்ய திசைக்கு வந்து பாருங்கள் . என கனவில் சொல்ல பின் ஞானதேசிகரிடம்

உம்பக்தர்களை ஈசான்ய திசைக்கு வரச்செய்துள்ளோம் நீவிரும் அங்கு செல்க என அண்ணாமலையார் சொல்ல ஞான தேசிகர் ஈசான்ய திசை வந்து தம்மை நாடிவருபவர்களுக்கு அருளாசி வழங்கினார் . 



 பின் அண்ணாமலையார் கருணையை வியந்து
ஞானதேசிகர் தோத்திரப்பாமாலை பாடினாராம் . ஈசான்ய திசையில் ஈசான்ய
குளத்தின் தென்கரையில் பெரிய ஆலமரத்தின் கீழ் சிவயோக சீடராய்
சமாதிநிலையில் அமர்ந்து தவமியற்றினார் .தேசிகரின் தவம் செய்யும் போது
இரண்டு புலிகள் எப்போதும் காவல் காக்குமாம் .


 தேசிகர் நிஷ்ட்டை கலைந்து அண்ணாமலையாரே நம்மை காத்து வருகிறார் என நினைத்து புலிகளை அண்ணாமலை அரசே என தடவி மகிழ்வாராம் . பக்தர்கள் வரும்போது புலிகள் வேறிடம் சென்று விடுமாம் . ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜடன் துரை என்ற ஆட்சியர் கடும்
காசநோயினால் பாதிக்கப்பட ஞானதேசிகரின் விபரம் கேள்விப்பட்டு வந்து வணங்கி ஜடன் துரை குணமாகினாராம் .

 ஜடன்துரை உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென
கேட்க

 "அப்பா எனக்கு எதுவும் வேண்டாம் . அதோ இரண்டு குழந்தைகளுடன் ஒர்குடும்பஸ்தர் இருக்கிறார் ,அவருக்கு எழுதி வையுங்கள் என அண்ணாமலையாரைநோக்கி கை நீட்டினாராம


'நான் யோகி எனக்கு எதுவும் வேண்டாமென சொல்ல .
அதன்படி அண்ணாமலையார்க்கு ஜடன்துரை நிலபுலன்கள் எழுதிக்க கொடுத்ததாக வரலாறு . இப்படி பல அற்புதங்கள் நிகழ்தியவர் ஈசான்ய ஞானதேசிகர். பக்தர்கள் ஞானக்கட்டளை என்ற நூலை இயற்றி அதனைப்பாடமாக நடத்தினர் . பின்ஈசான்ய குளக்கரையில் பர்ணசாலை அமைத்து அதுவே இன்று ஈசான்ய மடமாக
சமயத்தொண்டு புரிகிறது .

 ஈசான்ய ஞான தேசிகர் அண்ணாமலையார் தரிசனம்
பெற்று பிற்காலத்தில் அருளிய
 தோத்திரப்பாமாலை .
அண்ணாமலைவெண்பா ,
அண்ணாமலையார் வெண்பா ,
அண்ணாமலையார் கன்றி ஆகிய பாக்களை இயற்றினார் .


ஜீவசமாதி : 


தம் சீடர்கள் பலருக்கும் வேதபாடங்கள் கற்றுத்தந்து தம்
இறுதிகாலம் உணர்ந்து தாம் பரிபூரணமாகும் காலத்தை ஓலையில் எழுதி தமது ஆசனத்தின் கீழ் வைத்திருந்தாராம் .

குறித்த நாளில் ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் தமது சீடர்களை அழைத்து ஸ்ரீ நடராஜப்பெருமானின் அறைக்கட்டுக்கு செல்கிறார் ,யாமும் அங்கு செல்ல வேண்டுமென முகமலர்ச்சியுடன் கூறினார் .பின் தேசிகர் பத்மாஷனத்தில் சின்முத்திரை தரித்து உட்கார முதன்மை சீடரான முத்துச்சாம் உடையார் சுவாமி அடியேன்களின் கதியோதோ என கேட்க

 உங்கள்குடும்பமே பழுத்த பழமாகி விட்டதே என திருவாய் மலந்தருளி பரிபூரணம்அடைந்தார் .

 ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிக சுவாமிகள் பரிபூரண பக்குவ காலம்
கலியுகம் 4930. சரியான சாலிவாகன சகாப்தம் 1751 கி.பி1829 விரோதி வருடம்
மார்கழி மாதம் 26 ஆம் நாள் குருவாரம் மிருக சீரிட நட்சத்திர நன்நாளாகும்


. ஈசான்ய ஞானதேசிகர் தினமும் ஆசிரமம் பக்கத்திலுள்ள வில்வமரத்தடி நின்றுஅண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம் . சுவாமிகளை அதே இடத்தில் சமாதி வைத்தனர் . விவ்வமரத்தடியில் ஞானதேசிகர் சாமாதி கொண்ட இடமே ஜீவசமாதியாக தற்போதும் வழிபட்டு வரப்படுகிறது . தினந்தோறும் காலை முதல் இரவு வரை பூஜை வழிபாடுகள் காண ஆயிரக்கணக்காண பக்தர்கள் வருகிறார்கள் .

 முடிவுரை :


வேண்டுவோர் வேண்டும் வண்ணம் வழங்கும் வள்ளலாக ஞான தேசிகர் விளங்கி வருகிறார் . கோவிலூர் முத்துராமலிங்க சுவாமிகள் ஞானதேசிகர் சமாதியை அனைவரும் வழிபட விரும்பி ஈசான்ய மடாலயம் தோன்ற ஆவண செய்தார்கள் . ஈசான்ய மடம் 150 வருடம் கழித்து பிரமாண்டமாய் நிற்கிறது . திருவண்ணாமலை வந்து ஈசான்ய ஞான தேசிகரின் அருள் பெற்று செல்லுங்கள் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...