Thursday, June 19, 2014

Fwd: ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் ,மயிலாப்பூர் , சென்னை

 ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில்

                           ,மயிலாப்பூர் ,

 இறைவன் : ஸ்ரீகபாலீஷ்வரர் 

அம்பிகை :கற்பகாம்பாள் 


 தமிழகத்தின் தேவாரப் புகழ் பெற்ற
திருத்தலங்களில் திருமயிலையில் அமைந்துள்ள ஸ்ரீ கபாலீஷ்வரர்
திருக்கோவிலும் ஒன்று .

திருக்கோவில் ஸ்தலமரமாக புன்னை மரமும் கோவில்
முன்னே அழகிய கபாலி தீர்த்தமும் அழகே அமைந்துள்ளன . சுமார் 2000
வருடங்கள் பழமையான கபாலீச்சரம் என்றும் ,திரு மயிலாப்பூர் எனஅழைக்கபடும் கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக
அருள்பாலிக்கிறார் .

 திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் ,சுந்தரர்
ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் . தேவாரப் புகழ் பெற்ற தொண்டை
நாட்டின் சிவஸ்தலங்களில் 34 ஸ்தலமாக போற்றப்படுகிறது .

 திருக்கோவில்
திறப்பு காலை 05.00 மணிமுதல் 12. 30வரையிலும் ,
மாலை 04.00மணி முதல் இரவு
09.00மணி வரையிலும் திறந்திருக்கிறது .

 இங்குள்ள நர்த்தன விநாயகரும்
சிங்கார வேலரும் தரிசிக்க வேண்டிய சன்னதிகளாகும் .

 மூலவராகிய
சிவபெருமானை வணங்கினால் பிறப்பற்ற நிலை ஏற்படுமென்பது ஐதீகம் .

மானிடருக்கு மனநிம்மதி அளிப்பவராக சிவபெருமானும் , உடல் நோய்
நீக்குபவராக அம்பிகையும் விளங்குகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு
சிவனை பூஜித்த ஸ்தலமாகாகவும் ,முருகப்பெருமான் வேல் பெற்ற ஸ்தலமாகவும் ,பிரம்மா படைக்கும் ஆற்றல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குவது தனிச்சிறப்பாகும்'.

 2000ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த கிரேக்கர் தாலமி மல்லிதர்பா
என்றும் மயில் ஆர்க்கின்ற இடம் மயிலாப்பூர் என குறிப்பிடுவதிலேயே
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மேன்மை நமக்கு புரிகிறது . இறந்த பூம்பாவையை
திருஞானசம்பந்தர் உயிருடன் எழுப்பினார் என்பது வரவாறு.

 முடிவுரை :


மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது .1000 சிவனை வழிபடுவதற்கு சமமாகும் ,அவ்வகையில் திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் அருள்பெற்று உய்யுங்கள் ,நன்றி

Wednesday, June 18, 2014

ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்

அன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளாக்கில் இல்லாததால் நிறைய பேர்க்கு தெரியாமல் போய்விடுகிறது .


ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அருகில் அலைவாய்மலை அடிவாரத்தில் ஸ்ரீ கொங்கணசித்தருக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது . ராசிபுரம் அடுத்த பொன்மலை .உலைவாய்மலை .அலைவாய் மலையில் ஸ்ரீ சித்தேஸ்வரர் திருக்கோவில் ஒன்றும் அதில் உள்ள சித்தர்சுவாமிக்கு 4 கரங்கள் உள்ளதாம். இத்திருக்கோவில் கொங்கணசித்தர் ,போகரால் உருவாக்கப்பட்டதாக வரலாறு .


இதன் அருகே கூனவேலம் பட்டி அருகில் இராவணன் சகோதரி சூர்பனகைக்கு
திருக்கோவில் உலகிலேயே ஒரே கோவில் தனிக்கோவிலாக அமையப்பெற்றுள்ளதென அப்பகுதி நன்பர் சொன்ன தகவல் ஆச்சர்யத்தின் உச்சம் , ஸ்ரீ கொங்கணர் சித்தர் கோவில் இராசிபுரம் வெண்ணந்தூர் சாலையிலேயே இருப்பதால் எளிதில்
தரிசிக்கலாம் .

 மூலவராக ஸ்ரீ கொங்கணசித்தர் இருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு ஸ்ரீ கொங்கணரின் அருள் முழுமையாக கிட்டும் . 



திருக்கோவில் சுற்றி போகர் ,அகத்தியர் சிலைகளும் அமைந்துள்ளது . ஸ்ரீ கொங்கணர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அலைவாய் மலை என ஸ்ரீ கொங்கணரின் வாழ்வியல் தொடர்ச்சி தமிழகத்தில் கொங்கணர் பலகாலம் வாழ்ந்து ,சித்தமருத்துவம்
,பாஷாணக்கட்டுகள்,ரசவாதம் ஆகிய துறைகளில் உயர்ந்து நின்று திருப்பதி
திருமலையில் ஜீவசமாதியாகியுள்ளார் என்பது புலானாகிறது .

 மேலும் இங்கு உலைவைத்து ஊதியதிற்கான சான்றுகளும் சித்தர்கள் குகைகளும் உள்ளதாக கூறுவது ஆய்வுக்குரியது . அதனாலேயே உலைவாய்மலை என அழைக்கப்படுகிறதாம் .எப்படியோ புதிய சித்தர் ஆலயம் கண்டதில் மகிழ்ச்சியே . அப்பகுதிக்கு செல்லும் வாய்பிருப்பின் ஸ்ரீ கொங்கண சித்தர் அருள் பெற்றுச்செவ்லுங்கள். நன்றி

 முடிவுரை : 


அலைவாய் மலை ராசிபுரம் பகுதிகள் நமக்கு புதிது ,குறை
இருப்பின் சுட்டிக்காட்டவும் . இப்பகுதி சித்தர் ஆலயங்கள் ,பதிவுகள்
இருப்பின் லிங்க் கொடுங்கள் , மறுபடியும் ஓர் புதிய பதிவுகளுடன்
சந்திக்கிறேன் .நன்றி

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி கொல்லிமலை

கொல்லிமலை ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் நேர் எதிரே சுமார் 720
படிக்கட்டுகள் செங்குத்தாக இறங்கிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை
தரிசிக்கலாம் .திருக்கோவில் வடபுறத்தில் 5 நதிகள் ஒன்றாக கூடி வருவதால்
பஞ்ச நதி என அழைக்கப்படுகிறது .

 பின் ஆகாய கங்கையாக மாறி 150 அடி
உயரத்திலிருந்து அழகாக நீர்வீழ்ச்சியாக விழுகிறது . அறப்பளீஸ்வர் மீன்
உருவமாக உள்ளார் என்பது புராணம் உணர்த்தும் உண்மையாகும் . ஆடி 18 அன்றுபெருங்கூட்டம் இங்கே வந்து சந்தோஷமாக குளித்து ஸ்ரீ அறப்பளிஸ்வரரை வணங்கி
மகிழ்கிறார்கள் .

ஏப்ரல் மே ,ஜீன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது
. ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது .ஆகாயகங்கைநீர்வீழ்ச்சி துறையூர் முசிறி சென்று காவிரியுடன் கலக்கிறது . 5 ரூபாய்டிக்கெட் கொடுத்து படிகளில் செங்குத்தாக இறங்கி சென்றால் பல மூலிகைகள்,இதமான குளிர்ச்சி , நீண்டு உயர்ந்த சுற்றிலும் மலை என ஏதோ குகைக்குள்செல்வது போன்ற உணர்வு நமக்கு .

 இங்குள்ள 720 படிகள் தாண்டியதும் உயர்ந்த இடத்திலிருந்து அருவி கொட்டுவது காணற்கரிய காட்சி . இங்குள்ள பாறைகளில் வழுக்கி விழுபவர் பலருண்டு , ஆகவே குளிக்க செல்பவர்கள் ஆல்கஹால்களை அளவே உபயோகிப்பது நன்று . இரண்டு நாள் பயணமாக வருவது நல்லது. இங்கே சில ரிசார்ட்டுகள் தங்கவும் அமைந்துள்ளது .

 படகு இல்லம் ,மூலிகைப்பண்ணை என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மலையில் விளையும்தாணியங்கள் இரண்டு இடங்களில் விற்கப்படுகிறது . திடிரென வரும் வாகனங்கள்
70 கொண்டை ஊசி வளைவுகள் என சில ஆபத்தும் உள்ள இடம் கவனமாக செல்வது நலம். சீசன் உள்ள நாட்களில் சென்றால் குளித்து மகிழ உகந்த இடமாககொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .

 பார்க்க வேண்டிய இடம். ரசித்து கருத்திடுங்கள். நன்றி

ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு

"அடியவர்கு அமுதமே ! மோழை பூபதி பெற்ற அதிபன் ,
 எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைத்தரு
சதுரகிரி வளர் அறப்பளிஸ்வர தேவனே !

                                                                                                          (அறப்பளிஸ்வர சதகம் )


 ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் அறப்பளிஸ்வரர்                                              திருக்கோவில் ஸ்தலம் ,


            பெரிய கயிலூர் ,வளப்பூர் நாடு , கொல்லிமலை ,



அழகிய இத்திருக்கோவில் நாமக்கல் வட்டம் ,நாமக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ளது .


 மூலவர் : 

ஸ்ரீ அறப்பளீஷ்வரர் (சுயம்பு )

 அம்பிகை :

அறம் வளர்த்த நாயகி

 வழி :


சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90கி.மீ
தொலைவிலும் நாமக்கல்லில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள்ளது .சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகள கொண்ட ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக அமைப்பெற்றது கொல்லி மலையாகும் . இராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் 17மைல் நீளம் உடையதாக பரந்து விரிந்த பரப்பளவில் அமையப்பெற்ற மலையாகும் .


2000ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திய புலவர்களால் பாடல் பெற்ற
ஸ்தலம்."கொல்லி ஆண்ட குடவர் கோவே " என சிலப்பதிகார வரிகளால் இது சேரர்கள் வம்சத்திய காலத்திலேயே புகழ் பெற்றதென அறியலாம்.

அறப்பளிஸ்வரர் :

 வள்ளல்வல்வில் ஓரி ஆண்ட கொல்லிமலையின் ஒர் பகுதியே அறப்பள்ளி என்பதாகும் .அறப்பள்ளியில் சுயம்புவாக எழுந்தருளிய சிவபெருமானுக்கு அறப்பளிஸ்வரர்எனப்பெயர் பெற்றது .

 1300ஆண்டுகளுக்கு முன்னர் தேவாரத்தில்
திருஞானசம்பந்தரும் ,திருநாவூக்கரசர் பெருமானும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். அறப்பள்ளி என்கிற தேவாரத்தில் காணலாம்.

புராணப்பெருமை : 


அறைப்பள்ளி திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் விவசாயி
ஒருவர் கலப்பையினால் உழுதபோது சிவலிங்கம் சுயம்புவாக தோன்ற பின்
திருக்கோவில் கட்டி பூஜைகள் ஆரம்பிக்கபட்டதாக வரலாறு . தற்போதும்
சிவலிங்கத்தின் உச்சியில் காயம்பட்ட தழும்பு உள்ளது . ஆலயத்தின்
அருகிலுள்ள பஞ்சநதியில் மீனைப்பிடித்து மூக்கு குத்தி விளையாடுகிறனர்
அதற்கு ஓர் பழங்கால கதையும் உண்டு .

 ஒருவர் மீன் சமைக்கும் போது கொதிக்கிற குழம்பிலிருந்து உயிருடன் மீன்கள் தாவி ஓடியதாக குறிப்புகளுண்டு " அறுத்த மீனைப் பொருத்தி உயிர்பித்த அறப்பளீஷ்வரர் என பெயர் வழங்கப்படுகிறது .

 அம்பிகையும் தலச்சிறப்பும் : 


 தாயம்மை என்றும்,அறம் வளர்த்த நாயகி என்றும் அம்பிகைக்கு பெயருண்டு . மூர்த்தி,ஸ்தலம்,தீர்த்தச்சிறப்புகளை கொண்ட ஸ்தலமாகும் . ஓர் அழகிய சிவாலய அமைப்புடன்விளங்குகிற ஸ்ரீ கொல்லிமலை அறப்பளிஸ்வரரை இராஜராஜ சோழனின் பாட்டியார்செம்பியன் மாதேவியார் ,கண்டராத்தித சோழர் ஆகியோர் வந்து வணக்கியதாககல்வெட்டு குறிப்புள்ளது .

 ஆடி 17,18,19 ஆகிய 3 நாட்களும் ஆண்டு
திருவிழாவாக கொண்டாடப்படுகிறது .

 திருக்கோவில் திறப்பு நேரம் : 


காலை 7.00மணி முதல் மதியம் 1.00மணிவரை
 பிற்பகல் 2.30மணி முதல் இரவு 7.00மணி
வரை திறந்திருக்கும் . திருவிழா காலங்களில் காலை 6.00மணி முதல் இரவு
10.00மணி வரை திறந்திருக்கும் .

 முடிவுரை : 


 அருணகிரி நாதர் ,திருநாவுக்கரசர் ,திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்றதேவாரத்திருத்தலங்களில் ஒன்று .பல்வேறு மூலிகைகளை கொண்ட அற்புத மலை ,உடன் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி என எங்கும் பசுமையை போர்த்திக்கிடக்கிற கொல்லிமலை ஓர் அரிய பொக்கிசம் , சுயம்புவான அறப்பளீஷ்வரரை வணங்கி இன்புருங்கள் .நன்றி

Sunday, April 13, 2014

ஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,

                                    ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில்    



அமைவிடம் :

 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .

 கொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .



சங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை
சாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு
திருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .

பழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த
திருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து
சென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .
திருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .

திருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என
திருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .

 திருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

முடிவரை :

பழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி

Friday, April 11, 2014

சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்

பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்
எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .

 சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு !


தயாரிப்பு முறை :

 முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்
சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து
சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா
இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .

 வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்
எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .

பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்

ஆண்கள் :புதன் ,சனி

 பெண்கள்  :செவ்வாய் ,வெள்ளி

 எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்
, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..

சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?

 சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .

 எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :

உள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .

யார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :

சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த
மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

முடிவுரை :

சித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்
அறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு
இருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்
கருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .

எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி

Tuesday, January 28, 2014

அழகிய கொடிவேரி

                                                    kodiveri dam 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் அழகிய
அணைக்கட்டாக கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது .

 அமைப்பு :

பவானி ஆறுபவானி சாகர் அணைக்கட்டில் இருந்து வருகிற ஆற்றின் தடுப்பணையே பவானி சாகர் அணைக்கட்டாகும் .

 ஈரோட்டில் இருந்து சத்திய மங்கலம் செல்லும்
வழியில் 45 வது கி.மீ தொலைவிலும் கோபி செட்டிபாளையத்திலிருந்து 15 கி.மீ
தொலைவிலும் கொடிவேரி அமைந்துள்ளது . 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதடுப்பணையாகும் .

 அணையின் முகப்பில் நுழைவுச்சீட்டை வாங்கி பின் உள்ளே சென்றால் கிளை வாய்க்காலும் அழகிய மரங்களும் ரசித்து சென்றால் ஸ்ரீ அணை முனியப்பன் திருக்கோவிலை தரிசித்து அருகே சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோபுரம் உள்ளது அதில் மேல் ஏறி கொடிவேரி அணையின் முழு அழகும் கரும்பு தோட்டங்கள் நெல் வயல்கள் எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கிறது இயற்கை .

அங்கே அணைக்குள் உள்ளே கூட்டிச்செல்ல பரிசல்கள் தயாராக உள்ளது . சிலர்அதில் ஏறி உலா வருகிறார்கள் . அங்கே இருந்து சற்றே கீழ் இறங்கி சுற்றி
வந்தால் சிறிய பூங்காவும் குளிக்குமிடம் வருகிறது . ஆனந்த மான குளியல்
ஆர்பரிக்கும் நீர் என கண்கவர் காட்சியாக கொடிவேரி அணை அமைந்துள்ளது

பாதுகாப்பு தடுப்பு கம்பி தாண்டி செல்வது விபரீதம், சேட்டை செய்யாமல்
அமைதியாக குளித்து வருதல் நல்லது . கொடிவேரி அணைக்கட்டில் பிடிக்கிற
மீன்கள் இங்கேயே வறுத்தும் ,பொறித்தும் கொடுக்கிறார்கள் . அசைவ
பிரியர்களுக்கு கொண்டாட்டமான இடம் .

 அழகிய அணைக்கட்டும் ஆனந்தக்குளியலும் அனுபவிக்க வேண்டுமெனில் கொடிவேரி வந்தால் கிட்டும் .பவானி ஆறு பவானி கூடுதுறை வந்து காவிரியுடன் இணைத்துக் கொள்கிறது .வாய்ப்பு கிடைக்கும் போது வந்து மனதை இதமாக்கி செல்லுங்கள் .

 நன்றி

Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

Friday, January 3, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

பழைய வருடங்கள் அனுபவமாகவும்
 புது வருடம் கற்றுக்கொடுப்பதாகவும்
புதுப்புது உயர்வுகள் கிடைப்பனவாகவும்
புத்தாண்டு அமையட்டும் .

 இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014



 பேஸ்புக் ,
டிவிட்டர் ,
பிளாக் ,
 எஸ் எம் எஸ்

என எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்
சிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென

சித்தர்கள் சிவனின் ஆசிர்வாதம்

வேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, December 31, 2013

பெண் சித்தர் தரிசனம்

எம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார்         அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்தில்ஈரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நன்பருடன் பயணத்தை துவங்கினேன் .


சுமார் 50கி.மீட்டர் தாண்டி கொடுமுடி தாண்டி சாலைப்புதூர் வழியாக
சென்றால் நொய்யல் ஆற்றுப்பாலம் கடந்து சென்றால் சரவணபவன் ஹோட்டல்வருகிறது . அந்த ஊருக்கு வேட்டை மங்கலம் என்று பெயர் .சரவண பவன் எதிர்புறம் உள்ள ரோட்டில் பயணித்தால் 1 கி.மீ தூரத்தில் இடதுபுறம்   செல்லும் மண் ரோட்டில் பயணித்தால் பெண் சித்தர் தங்கியுள்ள வீடுஅமைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் வீட்டில் இந்த
பெண்சித்தர் பராமரிக்கப்பட்டு வருகிறார் .

 நாங்கள் சென்றபோது 10பேருக்கு மேலாக தரிசனம் பெற்று வந்தனர் . சித்தர் பித்தர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் பித்தர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல. ஆனால் பெண் சித்தர் தெளிந்த முகம் . வாடா மகனே என அழைக்கின்ற பாங்கு . வயதில் முதிர்ந்தாலும் அன்பால் தடவுகின்ற கரங்கள் என பெண் சித்தர் பார்வைவித்தியாசமானது .

 முதலாக நான் சென்று வணங்கினேன் , முதுகை தொட்டு
ஆசிர்வாதம் செய்தார்கள் . தோல்பட்டை இரண்டு தட்டு தட்டி போக சொன்னார்கள். நான் வந்து உட்கார்ந்து கொண்டேன் .பின் என் நன்பர் சென்றார் ! அவருக்கு அங்கே இருந்த உணவுகளை ஊட்டி விட்டார் . 6 கவளம் ஊட்டி பின் ஆசிர்வாதம்செய்து அனுப்பினார் .

பின் குடும்ப சகிதமாக வந்து உணவு ,கேக், புகையிலை என
பக்தர்கள் வரிசையாக கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள் . அந்த பெண்
சித்தரை பார்த்தது புது வித அனுபவம் . பெண் சித்தர் அருகில் நகைகள்
அணியாமல் தான் செல்ல வேண்டும் என அறிக்கையுடன் முன்னே போர்டில்
அறிவிப்புடன் இருக்கிறது .

ஒருமணி நேரமாக தரிசனம் செய்த பின் கிளம்ப வணங்க வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட கேக் கொடுத்து வாழ்தினார்கள் . பெண்
சித்தரை தரிசிக்க செல்பவர்களை சில நேரம் சரமாரியாக கெட்டவார்த்தைகளில்திட்டுகிறார் . சில நேரத்தில் கோபப்பட்டு அடித்தும் விடுவாரம் . அப்படிஅடிபட்டு திட்டு வாங்கியவர்கள் கூட மறுபடி அம்மையை தரினசம் செய்யவருகிறார்கள் .


பழனி கணக்கன்பட்டி மூட்டை சித்தரே ஒரு பக்தரிடம் என் அக்கா கருர் பக்கமாகஇருக்கிறார் என கூறியதாக கூட தகவல் உண்டு . பலன் பெற்ற பல பக்தர்கள் வருகிறார்கள் முடிந்தால் சென்று தரிசியுங்கள் . சில பக்தர்கள் திட்டு
வாங்கிவிட்டு சித்தர்களின் பரிபாஷையை அறிய முடியவில்லையென
வியக்கிறார்கள் . சில தொலைக்காட்சிகளில் இவரைப்பற்றிய பதிவுகளை
ஒளிபரப்பி இருக்கிறது .

 நாம் அறிந்த தகவல் அவ்வளவே , அளப்பதற்கரிய
சக்தியை அளக்க அளவிட முடியாத சக்தி வேண்டும் . நம்மால் உணர முடிந்ததுகொஞ்சமே , வாய்ப்பு கிடைப்பின் சந்தியுங்கள் . உங்கள் வாழ்வில்
மாற்றமும் ஏற்றமும் நிகழும் .நன்றி

Sunday, November 3, 2013

தீபாவளிப் பயணம்

தீபாவளிக்காக மனைவியை பார்க்க பயணத்தை ஓர் குக்கிராம ரோட்டில்
துவக்கினேன் . 40 கி.மீட்டர் செல்ல மெதுவாக இருசக்கர வாகனத்தில்
பயணித்துக்கொண்டிருந்தேன் .

 ஆங்காங்கே பட்டாசு வெடிச்சத்தம் பயமுறுத்திக்கொண்டிருக்க காலை 7 மணிக்கு துவங்கிய பயணமது . கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் பயணித்த பின் லிப்ட் கேட்டபடி ஒரு 14 வயது பையன் நின்றிருக்கு ஆள் அரவமற்ற ரோட்டில் இருசக்கர வாகனத்தில் அந்த பையனையும் ஏற்றிக்கொண்டு பயணம் தொடர்ந்தது .

 வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் இருந்த  அந்த பையன் கைரேகை பார்க்கிற சிறுவனாகத்தான் இருக்குமென கணித்து ஜோதிடம்
பார்ப்பாயா ? என கேட்டு ஆரம்பித்தேன் . ஆமாம் அண்ணா ஸ்கூல் லீவு அதான் கிளம்பிட்டேன் .

அப்பா நம்ப கணிப்பு கரெக்ட்தான் . தம்பி இன்னைக்கு தீபாவளி இன்னிக்குமா என்றவாறு எங்கிருந்து நடந்து வருகிறாய் எனக்கேட்க அண்ணா அப்பாவுக்கு போன வருஷம் விபத்து ஆயிடுச்சி நல்லா ஜோதிடம்
பார்த்திட்டிருந்த அப்பா படுத்திட்டார் .

 1 லட்சம் செலவாயிடுச்சி . அண்ணா வெளியூர்ல படிக்கிறான் . அக்கா வீட்ல இருக்காங்க , நான் லீவ்ல கேரளா போய் எங்க குல குருகிட்ட முறைப்படி ஜோதிடம் கத்துகிட்டேன் ஊரு கவுந்தப்பாடி பக்கத்துல சலங்க பாளையம் ஸ்கூல்ல +1 படிச்சிட்டிருக்கேன் .

நேத்து மதியம் 2 மணிக்கு கிளம்பினேன் எங்க மாமா கூட வந்து குருநாதசாமி
கோவில்ல தங்கிட்டேன் . நைட் சாப்பிடல குருநாதசாமி கோவில தங்கிட்டேன் .காலையில கிளம்பிட்டேன் 5 கி.மீ நடந்துட்டேன் அண்ணா . ! யாரும் கைரேகை பார்க்க கூப்பிடல .

பேசிக் கொண்டே வந்தான் .

 மனம் சிவ சிவா என கதறிக்கொண்டே வந்தது . ஏழ்மை கொடிது அதுவும் இளமையில் வறுமை மிகக்கொடியதென அவ்வையார் வரை வந்நு விட்டு சென்றார்கள் . தீபாவளி அன்று கூட புதுத்துணி இல்லாமல் பட்டாசு இல்லாமல் இனிப்பில்லாமல் இச்சிறுவனைப் போல் எத்தனை பேரோ?

கனத்த இதயத்துடன் தீபாவளிப்பயணம் கடந்து கொண்டிருந்தது
. சோறில்லாமல் தீபாவளி அன்று ஓர் சிறுவனா ? வழியெங்கும் ஹோட்டல் கடையை தேடி பவானி வந்து விட்டது .

 பவானி வந்ததும் பர்சில் கிடந்த ஐம்பது ரூபாயை எடுத்து சாப்பிட்டு விட்டு ஊருக்கு செல் எனக்கூறி செல்லும் வழியில் லட்டு வாங்கி தந்து சுவைக்கச்சொல்லி மேலும் பணம் வேண்டுமா எனக்கேட்க

மறுத்து கவுந்தப்பாடி செல்லுகிற பஸ்ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதுமென நன்றி கூறி பயந்த கலந்த விழிகளுடன் கிளம்ப, நானும்
உன்னைப்போலிருந்து வந்தவன்தான் உயர்ந்த நிலைக்கு வருவாயென வாழ்த்தி குமாரபாளையம் கிளம்பி விட்டேன் .

இறைவா இக்குழந்தையை காப்பாற்று மனம் இறைஞ்சி வேண்டிக்கொண்டிருக்கிறது . அச்சிறுவனைப்பார்த்து இரண்டு
நாளாகியும் அவன் சொன்ன வாசகம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது
அச்சிறுவன் சொன்னது

 " அப்பாக்கு மட்டும் ஏக்சிடென்ட் ஆகலேன்னா ஊர்ல புது
துணி போட்டுட்டு பட்டாசு வெடிச்சிட்டிருப்பேன்."

 அப்போதைக்கு என்னால்
உதவ முடிந்தது . ஓர் வேளை உணவோ அல்லது கண்டீப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பான் .

மனம் வலித்தாலும் பின் சந்தோஷப்பட்ட தருணம் இது .
சரியான மனிதர்க்கு போய் சேர்ந்ததில் தீபாவளி கொண்டாடின திருப்தி .

எத்தனையோ தீபாவளிகள் கொண்டாடி இருப்பினும் கூட இது மறக்க முடியாத தீபாவளி

தலை தீபாவளியும் கூட

நன்றி

அன்பில் கரைத்த பயணம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல பயணத்தை துவங்கினேன் .

பேஸ்புக்கில் பகிர்ந்ததைப்போல ஏதேனும் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் பண்டிகை நாளில் கழிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தீபாவளிக்கு முந்தைய நாள் மதியம் பயணித்து 2 கிலோ ஜிலேபியுடன்

 கொமராபாளையத்தில் இருந்து எடப்பாடி வழியில் அமைந்துள்ள கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் சென்று அவர்களுக்கு இனிப்பைக் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னது நெகிழ்வான நிமிடங்கள்.

 பெரிய அளவில் 25 வருடமாக நடந்து வருகிற இந்த மையம் 165 மனித இதயங்களுடன் நடந்து வருகிறது . ஆறு விதமான பிரிவினர்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறார்கள் ,


 உதவ விரும்புகிறவர்கள்=


 k.கோவிந்தராஜன் 1/285
பரிசல்துறை ,புளியம்பட்டி ,
புள்ளாக்கவுண்டன்பட்டி அக்ரஹாரம் அஞ்சல்
சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம்

 தொடர்புக்கு : 04288260157 ,
9362060157, 9842295560
 web :www.bfdc-trust.in

mait i.d : bftc.trusu@gamail.com

என்ற தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 மன நிறைவான சிறு உதவி . முதல் தடவையாக இப்படி ஓர் இடத்தில் நேரம் கழித்ததும் இனிப்பு தந்ததும் அவர்களுக்கு வாழ்வில் உறவுகளாக யாரோ ஒருவர் இருக்கிறார்களென்ற அர்த்தம் புரிய வைத்திருக்கும்,
 நமக்கும் கூட

முடிவுரை :

நீண்ட பயணத்தில் முக்கிய தருணமாக இதைக் கருதுகிறேன் , இனி
இவ்விடம் அடிக்கடி செல்வேன் .

 வாய்ப்பும் வளமையும் கிட்டும் வரை

நன்றி

Friday, November 1, 2013

மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருக்கோவில் இறைவன் ஆட்கொண்ட ஸ்தலம்

பட்டினத்தார் திருக்கோவில் சென்னையில் உள்ள திருவெற்றியூரில் இறங்கி
அருகே மார்க்கெட் வழியாக சிறிது தூரம் நடைப்பயணத்தில் அடையலாம் .


பட்டினத்தாரின் இயற்பெயர் சுவேதரண்யர்

 தந்தை பெயர் சிவநேசன்

 தாய் ஞானக்கலை


 பிறப்பு காவிரி பூம்பட்டினம் பூம்புகார் மயிலாடுதுறை
திருக்கடையூர் ஆகும் . மக்களால் அழைக்கப்பட்ட பெயரே பட்டினத்தார்
என்பதாகும் . பட்டினத்தாரின் மனைவி சிவகலை என்பதாகும் . 10ஆம்
நூற்றாண்டில் மருதவானர் சிவனாக வந்து ஆட்கொண்டதாக வரலாறு . இவர் சீடர் பத்ரகிரியார் .

சிவனிடம் திருவிடைமருதூர் பேய்கரும்பு பெற்ற இடமாகும்
.அக்கரும்பு இனித்த இடமே திருவெற்றியூராகும் .

 இறைவனுடன் கலத்தல் :

ஆடிமாதம் உத்திர நட்ஷத்திர திருநாளில் சென்னை அருகேயுள்ள
திருவெற்றியூரில் சிவனிடம் இரண்டறக்கலந்தார் . அவ்வாறு கலந்த இடமே
திருவெற்றியூராகும் . பட்டினத்தார் வள்ளலார் ஆகியோர்களுக்கு ஜீவசமாதி
கிடையாது . இவர்கள் இருவரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சிவபெருமானுடன் கலந்தவர்கள்.

பட்டினத்தார் திருவாரூரில் பாடிய பாடல் :

 ஆருரார்இங்கிருக்க அவ்வூர் திருநாளென்று
 ஊருர்கள் தோறும் உழல்வீர் -நேரே ,
உளக்குறிப்பை நாடாத ஊர்மக்காள் நீவீர்,
விளக்கிருக்க தீத்தேடுவீர் .


பொருள் :

திருவாருர் உடையாரகிய சிவன் இங்கிருக்க அந்த ஊரில் திருநாள்
என்று ஊர்கள் தோறும் அலைவோரே நேராக மனக்கருத்தை ஆராயத மூடர்களே நீங்கள் தீபமிருக்க நெருப்பை தேடுகிறீர்கள் .

 பொன்மொழி :

 "காதற்ற ஊசியும்வாராது கடைவழிக்கே "
இறந்த பின் காது உடைந்த ஊசியை கூட எடுத்துச்செல்ல
முடியாது அப்படியிருக்க பொன் ,
பொருள் மேல் ஆசை விலக்கி துறவறம் பூண்டவர்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் ஆவார் .

 பட்டினத்தார் பற்றி பதிவை நீண்டதாக
எழுதலாம் . மகா சித்தர் .

 முடிவுரை :

இறைவன் பட்டினத்தாரை ஆட்கொண்ட
இடமான திருவெற்றியூர் வந்து வணங்குங்கள் .
 மிக அருமையான இடமாகும்.
தரிசியுங்கள் நன்றி.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...