Saturday, March 16, 2013

பங்குனி உத்திரம் வழிபாடு

மகேசனால் உண்டான மாதங்கள் பல வந்தாலும் பங்குனியில் வரும்
உத்திரநட்சத்திரம் மகத்துவம் வாய்ந்த இந்துக்களுக்குரிய அற்புத
திருநாளாகும்.ஏனெனில் இந்த அற்புத நாளில்தான் சிவன் பார்வதி திருமண
கயிலாயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் உரைக்கின்றன.

 தமிழ் கடவுளாம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர திருநாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

மங்கலகரமான பங்குனி உத்திர திருநாளில்தான்

முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணமும்,
 ரங்கநாதர் ஆண்டாள் திருமணம்,
தேவேந்திரன் இந்திராணி திருமணம் ,
பிரம்மா சரஸ்வதி திருமணம்
,தசரதபுதல்வர்கள் திருமணம்

ஆகிய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இறைவனுக்கே திருமணம் நடந்த பங்குனி உத்திர திருநாள் இந்த
வகையில் விஷேசமானது. மற்றொரு வகையில் சில தெய்வ அவதாரங்கள் இந்த இனியநாளில் அவதரிதிருக்கிறனர் .

அவர்கள் வள்ளி,ஐயப்பன்,அர்ஜுனர் ஆகியோராவர்  திருமுருகப்பெருமானின் திருக்கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று மிகுந்த விஷேசமான நாளாக கொண்டாடப்படுகிறது.

 திருச்செந்தூர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் , மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஆகிய
திருத்தலங்களில் விஷேச நிகழ்வுகள் நடைபெறும் .

ரதியின் வேண்டுதலுக்காக சிவபெருமான் மன்மதனை உயிர்பித்த நாளாகவும் பங்குனி உத்திரத்தை புராணம் போற்றுகிறது ,இந்த அரிய நிகழ்வையே வடமாநிலத்தோர் ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது..

 விஷேசபலன்கள் :

 திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும்
விரதமிருந்து ஏதேனும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ,சிவாலயங்களில் வழிபட திருமணம் ,குழந்தைப்பேறு போன்ற மங்கலங்கள் உங்கள் வாழ்வில் நடைபெறும் .

முடிவுரை :

வருகிற 26.3.13 முருகருக்குரிய செவ்வாய்கிழமை
நாளில் பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அடுத்த நாள் பெளர்ணமி திதியும்
வருகிறது. தமிழ் கடவுளாம் முருப்பெருமானையும் சிவனையும் வணங்கி உங்கள் வீட்டில் மங்கலங்கள் உண்டாக வாழ்த்துக்கள் .

 மறவாமல் முருகபெருமானுக்கு  பிடித்த செவ்வரளி மாலை., நெய் தீபத்துடன் சென்று முருகப்பெருமான் அருள்
பெறுங்கள் .நன்றி

Tuesday, March 5, 2013

மங்கலங்கள் உண்டாக்கும் மகாசிவராத்திரி வழிபாடு 10.3.13

மாசிமாதம் என்றாலே சிவராத்திரி சைவ பெருமக்களால் விரும்பி
வணங்கப்படுகின்ற வழிபாடாகும் . சற்றே பின் நோக்கி புராணத்திற்கு
செல்வோம் .

 பார்வதி ஒரு முறை சிவனின் கண்களை விளையாட்டாக தம்
திருக்கரங்களால் மறைக்க உலகமே இருண்டு விட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து உலகத்திற்கே ஒளி கொடுத்த இனிய நாளே மகா சிவராத்திரியாகும் .

ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரிகள் வந்தாலும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

 அன்றைய தினம் சிவனை மனதில் வைத்து தியானித்தால் நம் துன்பங்கள் தூர ஓடிவிடுமென்பது உறுதி. அந்த வகையில் வருகிற 10.03.2013 ஆம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது.

 இந்த இனிய நாளில்  விரதமிருந்து அன்றைய இரவில் கண்விழித்து சிவாலயங்களில் இறைவனுக்காக நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வோர்க்கு தரித்திரம் நீங்கி செல்வவளம் மங்கலம் உண்டாகும்.

 மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரியில் சிவனை வணங்குவது வருடம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதற்கு நிகரானதாக கருதப்படுகிறது.

 சிவராத்திரி விரதமென்பது மாலை 6.00மணிமுதல் அடுத்த நாள்
காலை 6.00மணி வரை சிவாலயத்தில் நடைபெறும் 4 கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம்நமச்சிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து விரதமிருப்பதே ஆகும் .,,,

 சிவராத்திரியில் மிக விஷேசமான நேரமாக இரவு 11.30 மணி முதல்
நள்ளிரவு 1.00 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும் . நம்மிடம் பணம்
இல்லையே அன்னதானம் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் .


10 ரூபாயில் வாங்கி அன்றைய தினம் அளிக்கிற வில்வத்திலும் ,1 லிட்டர்
பசும்பால் அபிஷேகத்திலேயே சிவபெருமான் மிகுந்த திருப்தி கொள்வார் .அவர்  நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல.

 ஆழ்ந்த பக்தியை மட்டுமே .

முடிவுரை :

 இன்றைய நாட்களில் மக்கள் பக்தியுடன் மட்டுமே கலிகாலத்தை
கடத்தியாக வேண்டுமென்பது வாரியார் பெருமானின் வாக்கு . ஆன்மீக வழிபாடுகள் எல்லோர்க்கும் வர எங்கும் அமைதி நீடிக்கும் .

 ஆதலால் ஆழ்ந்த சிவபக்தியை
மேற்கொள்வோம் . மறவாது 10.3.13 ஏதேனும் ஓர் சிவாலயத்தில்
சிவபெருமானுடன் கலந்திருப்போம் .
'' ஓம் நமச்சிவாய"

 பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன் நன்றி.

Monday, March 4, 2013

பர்வதமலை ஸ்ரீ மல்கார்ஜீனேஷ்வரர் தரிசனம் பாகம் 3

ஓர் வழியாக பர்வத மலையுச்சியை அடைந்தோம் . முகப்பில் ஸ்ரீ மகான் மௌனயோகி விட்டோபானந்தா சிவகுகை அன்னதானமடம் அமைந்துள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருக்கோவில் அருகே இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

 மூன்று சன்னதிகள் கொண்ட திருக்கோவிலின் முதல் சன்னதியில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான்  உள்ளனர் . இரண்டாவது சன்னதியில் ஸ்ரீமல்லிகார்ஜீனர் சிறிய லிங்க வடிவில் அழகே காட்சி அளிக்கிறார் .

பர்வதமலையின் சிறப்பே இங்கு வரும் பக்தர்கள் தாங்களே ஸ்ரீ மல்லிகார்ஜீனருக்கு அபிஷேகம் செய்யலாம் .பூஜை செய்யலாம்
என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்வுடன் இங்கு வந்து இறைவனை தொட்டு
வணங்குகிறார்கள் .

கயிலாயத்தில் இருந்து சிவன் திருவண்ணாமலையில் இறங்க
முதல் அடியை பர்வத மலையில் வைக்க பர்வதமலை சிவனைத்தாங்காது கீழே இறங்க அடித்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாக புராணம் இயம்புகிறது.

அதனால் இப்பதி தென் கயிலாயம் என போற்றப்படுகிறது. மூன்றாவதாக பிரம்மராம்பிகைஅம்பாள் சன்னதியாகும் . அம்பிகை அழகே உருக்கொண்டு காட்சி அளிக்கிறார் . இங்கு பூஜை செய்ய யாரும் இல்லை .

ஆதலால் நாமே பூஜிக்கலாம் . பர்வதமலை
செல்பவர்கள் செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் : 2 வேளை உணவு பாக்கெட் ,போதிய அளவு தண்ணீர் .குளுக்கோஸ் , இரவு தங்க வேண்டி இருப்பின்போர்வை, பூஜைக்கு தேவையான பொருட்கள் போதுமானதாகும் .

 இங்கு கொடியவிலங்குகள் ஏதும் இல்லை .தூரத்தில் இருந்து பார்த்தால் நந்தி
படுத்திருப்பதை போலவும் அதன் கொம்புகளுக்கு இடையில் திருக்கோவில்
அமைந்திருப்பதைப் போல பர்வதமலை அமைந்துள்ளது.

 காஞ்சி மகான் ஒருமுறை பர்வத மலை தரிசிக்கவந்த மலையே சிவனாக இருப்பதால் பர்வதமலை ஏறாமல் மலையை
சுற்றி வந்து வணங்கியதாக வரலாறு.பூண்டிமகான் தரிசித்த இடம் பர்வதமலை


சித்தர்கள் :

பல சித்தர்கள் வாழ்ந்து வரும் அற்புத சிவதலமாக பர்வதமலை
விளங்குகிறது. மானிட உருவிலும் பல பக்தர்களுக்கு ஆசிகள்
வழங்கியுள்ளார்கள் .

 நமது நன்பர் தேன் பூச்சிகள் வடிவிலும் , பருந்து
வடிவிலும் , ஏதேனும் சிறிய மிருகங்கள் வடிவிலும் , பைரவர் வடிவிலும்
காட்சி அளிப்பதாக கூற ஆச்சர்யப்பட்டு மேலே செல்ல வண்டுகளின் ரீங்காரம் நம்மை தொடர்ந்து வருகிறது.

மலை உச்சியில் பைரவர் அம்சமான நாய் மற்றும்
பருந்து ரீங்காரத்தையும் தரிசித்தோம் . மதியம் 12 மணிக்கு உச்சிகால
பூஜைக்கு வில்வத்தால் அர்சித்து ஸ்ரீ மல்லிகார்ஜீனரை தரிசித்து வரும்
வழியெல்லாம் சித்தர்களை மேற்கண்ட உருவில் கண்ட திருப்தியுடன் கீழே
இறங்கினாம் .

எளிதான மலை காலை 9 மணிக்கு துவங்கி 12 மணிக்கு தரிசித்து
மாலை 4மணி அளவில் பர்வதமலை கடலாடி அடிவாரத்தை அடைந்தோம் . யாரோ வைத்த காட்டுத்தீ மெளன குரு ஆசிரமம் எதிரே உள்ள மலையின் துவக்கத்தில் எரிந்து கொண்டிருக்க பயணம் சற்றே வித்தியாசமாக முடிந்தது.

முடிவுரை:

சிவனையும் சித்தர்கள் பற்றிய தேடல் இருப்பவர்கள் பெளர்ணமி ,அமாவசை, பிரதோஷ நாட்களில் ஸ்ரீ மல்கார்ஜீனரை வந்து வணங்குங்கள் . தேடலுடன் செல்பவர்கள்  கூட்டமில்லாத நாட்களில் பகலில் செல்வது நலம் .

பிடிக்கொரு லிங்கமாக கருதப்படும் பர்வதமலை பல சூட்சமங்கள் கொண்டது. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் . திருவல்லிக்கேணி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் பர்வதமலையில் திருப்பணிகள் நடைபெறுகிறது. வாழ்த்துக்கள்


அடிவாரத்தில் இருந்து 1 செங்கல் சுமந்து கோவில் திருப்பணிக்கு உதவலாம்
.திருக்கோவில் கமிட்டியிடம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் செய்யுங்கள். உடலில் தெம்பு உள்ளபோதே பர்வதமலை செல்லுங்கள் .

திருவண்ணாமலை பேளூர் தென்மாதிமங்கலம் வழியாக சென்று பர்வதமலை ஸ்ரீபிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீர்னர் வந்து தரிசித்து நலமும் வளமும் பெறுங்கள்.நன்றி

Sunday, March 3, 2013

பர்வதமலை தரிசனம் பாகம் 2

ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனர் திருக்கோவில் பருவதமலை
அமைப்பை முந்தைய பதிவில் பார்த்தோம் . சென்ற வாரம் பர்வதமலை செல்லாம் என நன்பர்களுடன் திருவண்ணாமலை சென்று ஸ்ரீ அருணாசலேஷ்வரரை தரிசனம் செய்ய,,

 சனிபிரதோஷமான 23.2.13 மாலையில் 5.30 மணிக்கு உள்ளே சென்று நந்தீசர் அபிஷேகம் பார்த்து வழிபட்டு அருணாசலேஷ்வரரை சிறப்பு தரிசனம் செய்ய சென்று சிவநாமம் சொல்லிய படியே 2 வருடம் கழித்து சிவபெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு மூலஷ்தானத்தை அடைந்து நிற்க,,

 எதிரே யாரோ முக்கியஸ்தர்  வர நான் என் நண்பர் குழுவுடன் நேராக அருணாசலீஷ்வரர் முன்பு சில நிமிடங்கள் நிற்க வைத்து தரிசனம் காட்டினார் .நீண்ட நாட்களுக்கு பின் பெரும் மனநிறைவுடன்விடுதி வந்து சேர்ந்தோம்.


இரவு பர்வதமலை பற்றி அறியாத மூவரும் எப்படி
செல்வதென யோசித்துக்கொண்டிருக்க அங்கே நன்பர் வாங்கி வந்த ஆன்மீக இதழில்  பர்வதமலை பற்றி கட்டுரையை படிக்க அடுத்த நாள் காலை திருவண்ணாமலையில்  இருந்து பர்வதமலை பயணத்தை கிளப்பினோம்

 சரியான வழிகாட்டுதல் அறியாததால் செங்கம் பஸ் ஏறி ஓர் வழியாக கடலாடி வந்து சேர்ந்தோம். இந்த வழியாக நடந்து பர்வதமலை அடிவாரத்தை அடைந்தோம் . இங்கே மெளன குரு  ஆசிரமம் அமைந்துள்ளது.

இங்கே குளிக்க சிறிய அளவில் குளியறை ஒன்று
உண்டு.நாங்கள் சென்றபோது மலை ஏற உதவியாக கஞ்சி ஊற்றினார்கள். அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் . மலையின் தொடக்கத்தில் இந்த வழியாக சென்றால் 7  கி.மீ பயணித்தால் உச்சியில் மல்லிகார்ஜீனரை தரிசிக்கலாம் என ஒரு பெண்மணி  சொன்னார் .

 பர்வதமலையில் புற்றுமண் அதிகமாக உள்ளது. கடலாடி வழியாக   சென்றால் பல பாம்பு புற்றுகளை காணலாம் . தூரத்தில் மலையுச்சியை   பார்த்தவாறே சென்றோம் . ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்
பூத்துக்குழுங்குகின்ற மலர்கள் நீலப்புல்கள் என காட்சி அளித்தன.

இங்கு
விஷேச மூலிகைகள் இருக்கிறதாக நன்பர் சொன்னார் . ஆங்காங்கே சிறிய கடைகள்பணியாரக்கடைகள் மட்டுமே உண்டு.சற்று தூரம் நடந்தால் தென் மாதிமங்கலம்  இணையும் வழி வருகிறது. இரு வழியில் செல்பவர்களும் இங்கே இணைந்து சென்றால்  கடைசிமலையை அடைந்துவிடலாம் .


 செங்குத்தான பர்வதமலையின் கடைசிமலையில்
கடப்பாறைப்படி இதில் கடப்பாறையை பாறையில் துளையிட்டு இறுக்கி

இருக்கிறார்கள் .

அதைத் தொடர்ந்து தண்டவாளப்படி ஏணிப்படி ஆகாயப்படி என  திரிலிங்கான மலைப்பாதையில் கீழே பார்த்தால் தலை சுற்றும் சற்றே
சிரமமானதே என்றாலும் மலைகள் ஏறி பழக்கமுள்ளதால் எளிதாகவே இருந்தது.அடிவாரத்திலிருந்து 3மணி நேரத்தில் திருக்கோவிலை அடைந்தோம் .

வயதானவர்கள்
பெண்கள் குழந்தைகளுடன் 4மணி நேரத்தில் கடக்கலாம் . பெளர்ணமி இரவுகளில் கூட்டமான நாட்களில் 5 மணி நேரம் கூட ஆகுமாம் . தென்கயிலாயம் ,திரிசூலகிரி நவிரமலை என பர்வதமலைக்கு வேறுபெயர்களுண்டு.

வழியில் கல்லால்ஆன குன்று, பாறை இடுக்கில் கிணறு, அண்ணாமலையார் பாதம் என பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

அடுத்த பாகம் 3 ஆம் பதிவில் பர்வதமலை தரிசனம் தொடரும்

Saturday, March 2, 2013

பர்வத மலையின் அமைப்பு பாகம் 1

பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனேஷ்வரர் திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் வட்டம் பர்வதமலை எனும் அழகிய மலையில் குடிகொண்டு மக்களை காத்து வருகிறார்..

 திருவண்ணாமலை மாவட்டம் பேளூரில் இருந்து 20கி.மீட்டர்
தொலைவிலும், செங்கத்திலிருந்து 30கி.மீட்டர் தொலைவிலும் ,
திருவண்ணாமலையில் இருந்து 30கி.மீ தொலைவிலும் பர்வதமலை அமைந்துள்ளது.



4560அடிஉயரத்திலும் 5500ஏக்கர் பரப்பளவில் 26 கி.மீட்டர் சுற்றளவில்
அமைந்த மலையின் உச்சியில் திருக்கோவில் அமைந்துள்ளது. போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் தென்மாதிமங்கலம் வழியாக மலைக்கு செல்லும்வழியாகும் .

மற்றொரு வழி கடலாடி சென்று அங்கிருந்து அடிவார மெளனகுரு
ஆசிரமம் சென்று அடிவாரத்தில் இருந்து மலை ஏறுவது இதில் பக்தர்கள் அதிகம்பயன்படுத்துவது தென்மாதி மங்கலம் வழியாகும் .

தென் கயிலாயம் என போற்றப்படும் பர்வதமலை புராணகாலத்திய திருக்கோவிலாகும் .தென்மாதி மங்கலம்  வழியாக சென்றால் 1கி.மீ அடிவாரத்தை அடைந்து 7 முனிஷ்வரர்களை தரிசித்து


பின் பச்சியம்மன்,வீரபத்திரர்,ஆஞ்சநேயர் தரிசித்து 1250படிக்கட்டுபாதைகள்
கடந்து சென்றால் மலைப்பாதையின் கடலாடி வழியாக வரும்பாதையும் இணைந்து  திருக்கோவில் செல்லலாம் .

சுமார் 2000ஆண்டுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நன்னன் என்ற மன்னரால் கட்டப்பட்ட அழகிய திருக்கோவிலாகும் பாகம் 2 ல்
காண்க

Friday, February 22, 2013

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி தரிசனம் (4 ஆம் படைவீடு)

குருவாய் அரற்கு உபதேசம் வைத்த , குகனே
குறத்தி மணவாளா .! குளிர்கா மிகுந்த வளர்புக மெத்த,
 குடகாவிரிக்கு வடபாலார்,
திருவேரகத்தில் உரைவாய்.! உமைக்கோர்,
சிறுவா .! கரிக்கும் இளையோனே.!

 -அருணகிரி நாதர்

 அமைவிடம்
: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் உள்ளன.

தமிழகத்தின் ஆறுபடை வீடுகளில் நான்காவது வீடாகவூம் திருவேரகம் எனஅழைக்கப்படும் சுவாமி மலை பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளக்குகின்றது.

சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பிரணவ உபதேசம் வழங்கிய அற்புத திருத்தலமாக கருதப்படுகிறது. ஆதலால் சுவாமி மலை வந்து வழிபட ஞானம் கிட்டுமென்பது பெரியோர்கள் வாக்கு.

புராணம் விளக்கும் உண்மை :

பிரம்மா படைப்புத்தொழில் புரிவதால் ஆணவம் முற்றி இருந்த தருணத்தில்
முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரணவமந்திரத்தின் பொருளை பிரம்மாவிடம் முருகர் கேட்க நான்முகனால் விளக்கமுடியவில்லை.

 அப்போது பிரம்மாவின் தலையில் குட்டி பிரணவமந்திரப்பொருள் அறியாத நீவீர் படைப்புத்தொழில் புரியக்கூடாதென பிரம்மாவை சிறையில் அடைத்தார்.  பின்  முருகரே படைக்கும் தொழிலை செய்து வந்தார் .

 பிரம்மா சிறையில் வாடுவதை அறிந்த திருமால் சிவனிடம் தோன்றி பிரம்மாவை சிறையிலிருந்து விடுவிக்க  வேண்ட முதலில் நந்தியை தூதுக்கு அனுப்பினார் சிவன் ,அப்போதும் முருகரின் கோபம் தணியவில்லை.நந்தி திரும்பி வந்தார் .

பின் சிவனே முருகரின் முன்
தோன்றி பிரம்மாவை சிறையிலடைப்பது தவறென கூறி முருகரை சமாதானம் செய்தார் .தந்தை சொல்மிக்க மந்திரமில்லையென பிரம்மாவை விடுவித்தார் .

 அப்போது பிரம்மா என் ஆணவம் அடங்கியது எனக்கூற மகிழ்ந்த சிவன் முருகப்பெருமானை மடியில் உட்கார வைத்து பிரணவமந்திரப்பொருளை எமக்கு கூறு என முருகரிடம் கேட்க பிரணவமந்திரத்தின் பொருளை சிவனின் திருச்செவியில் முருகர் உரைத்தார் .

 இந்த அரிய நிகழ்வு நடைபெற்ற இடமே சோழ நாட்டில் ஆறுபடை  வீடுகளில் ஒன்றான திருவேரகம் என புராண காலத்தில் அழைக்கப்படும் சுவாமி
மலையாகும் . இந்நிகழ்வால் முருகர் சுவாமிநாதன் என்றும் குருநாதன்
என்றும் அழைக்கப்படுகிறார் .

 திருக்கோவில் அமைப்பு :

 மூன்று சுற்றுகள் கொண்ட சுவாமிமலை உருவாக்கபெற்ற குன்றாகும் .60படிகள் கொண்ட திருக்கோவில் ஏறிச்சென்றால் மூலவர் ஸ்ரீ சுவாமிநாதரின் தரிசனம் கிட்டுகிறது.

 தெற்குபார்த்ததாக அமைந்த இராஜகோபுரம் 5 மாடங்களுடன் அழகே அமைந்துள்ளது.


நிகழ்வுகள் :

அருணகிரிநாதர் சுவாமிநாதரை தரிசித்து அவர் பாதங்களை
தரிசித்ததாக வரலாறு.பூமாதேவி பார்வதின் சாபத்திற்குள்ளானதால்
இத்தலத்தில் வந்து சாபம் நீக்கியதாக புராண வரலாறு.

 பின் பூமாதேவி
இத்தலத்திலிருந்து செல்லாமல் நெல்லிமரமாக அமர்ந்ததாக கூறப்படுகிறது.
மீனாட்சி சன்னதின் கிழக்கே நோய்களை தீர்க்கும் வச்சிர தீர்ததமென்ற கிணறு
அமைந்துள்ளது.

ஷ்தல தீர்த்தம் :

நேத்திர புஸ்கரணி ஆகும் . இது கிழக்கே
கீழவீதியில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் :நெல்லி மரம்

 சுவாமிமலையின்
வேறுபெயர்கள் :சுந்தராசலம் ,திருவேரகம் ,குருமலை,சிரகிரி ,சிவகிரி
ஆகியனவாகும் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :


விசுவரூப தரிசனம் காலை 6மணிக்கும்
உஷாக்காலம் 7மணி க்கும்
 காலைசந்தி 9 மணிக்கும்
 உச்சிகாலபூஜை:நன்பகல் 12 மணிக்கும்
 சந்தியாகாலபூஜை:05.30மணிக்கும் ,
இரண்டாம் காலபூஜை: இரவு 7மணிக்கும் ,
அர்த்த யாமபூஜை இரவு 9 மணிக்கும்
நடைபெறுகிறது.

விஷேசகாலங்களில் பூஜைநேரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

பாடிவர்கள் :

சுவாமிமலை திருக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நக்கீரர்
திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்ற பல
நூல்கள் சுவாமிமலை புராணத்தை உரைக்கின்றது.

திருக்கோவில் காலம் :
பழங்காலத்தில் அமைந்த திருக்கோவிலாயினும் விக்கிரம சோழன் 1120 -1136
காலக்கல்வெட்டுகளினால் இது 1000 வருடத்திற்கு முந்தைய திருக்கோவிலாகும்


. முடிவுரை :

குன்றே இல்லாத இடத்தில் குன்றை உருவாக்கி அழகான குன்றாக
அமர்ந்த ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை வந்து வணங்கி அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

தரிசித்து கருத்துரையிடுங்கள்
.நன்றி

ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில். வட்டமலை ,குமாரபாளையம்

குன்று தோறும் குமரன் இருக்குமிடம் என்ற பெரியோர்களின் வாக்கிற்க்கு
இணங்க குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 4
கி.மீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலை அருகிலேயே வட்டமலை அமைந்துள்ளது.


ஜே.கே.கே நடராஜா கலை அறிவியல் கல்லூரி பஸ்ஸ்டாப் எதிரே சிறிது தூரம் நடந்து சென்றால் சிறிய குன்றில் திருக்கோவில் அமைந்துள்ளது. 75படிகள் கொண்ட சிறிய குன்றில் படி ஏறி சென்றால் திருக்கோவிலை அடையலாம் .


புதிதாக திருக்கோவில் வேலைப்பாடுகள் நடந்து அழகே அமையப்பெற்றுள்ளது. வட்டமலையில்
முருகர் வேலாயுதசாமியாக மூலவர் வீற்றிருக்கிறார் .

 திருக்கோவில் மேலே செல்ல கார் பைக் வாகனங்கள் பாதையும் உண்டு. பளிங்கு கற்களால் அழகாக அமைக்கப்பட்ட திருக்கோவில் ,கணபதி காசி விஸ்வநாதர் ,நவகிரகங்கள் என  தனிச்சன்னதிகள் அமைந்துள்ளது .

 குமாரபாளையத்தில் பார்க்க வேண்டிய
ஆலயங்களில் வட்டமலை முருகர் திருக்கோவிலும் ஒன்று . திருக்கோவில்
வளாகத்தில் ஆங்காங்கே மயில்கள் விளையாடுகின்றது.

புதுப்புது முருகர்
ஆலயங்கள் தரிசிக்க வேண்டுபவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வட்டமலை, முருகருக்குரிய செவ்வாய்கிழமை, கிருத்திகை ,தைப்பூசம் ஆகிய நாட்கள் கூட்டம் வருகிறது.

வட்டமலை திருக்கோவில் ஆண்டவர் மலை எனவும் மக்கள்
அழைக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது வந்து வணங்கிச்செல்லுங்கள்


.ஓம் முருகா சரணம் முருகா

Friday, February 15, 2013

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் வெண்ணெய்மலை,கரூர்

அமரர் இடம் தீர அமர்ந்த
 குமரனடி நெஞ்சே குறி                                        முருகர் துதி

 கரூர் வெண்ணெய்மலையில் முருகர் ஸ்ரீபாலசுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத திருக்கோவிலாகும் . அண்மையில் வெண்ணைமலை செல்லும் அருமையானதோர் வாய்ப்புகிட்டியது.

 சுமார் 60படிக்கட்டுகள் ஏறினாலே ஸ்ரீபாலசுப்பிரமணியரைதரிசித்து விடலாம் . பாலயோகி பகவன் என்பர் இங்கு தவமிருந்த போது முருகர் காட்சி கொடுத்து இங்கே எம் அருட்சக்தி நிறைந்துள்ளது .

 இதை மக்களுக்குஅறிவிக்க கூற பகவன் அப்போது கரூரை ஆண்ட அரசரிடம் விபரம் கூறதிருக்கோவில் அழகே அமைக்கப்பட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் பிரதிஷ்டைசெய்யப்பட்டதாக வரலாறு.

திருக்கோவில் 1000ஆண்டுகள் பழமையாளதாகும் .
ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் சித்தர்க்கு தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில் மற்றும்


கருவூரில் அமைந்துள்ள பசுபதீஷ்வரர் திருக்கோவில் மற்றும் வெண்ணெய்மலை முருகர் திருக்கோவில் ஆகியவற்றில் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பாகும் .


 காமதேனுவால் அமைக்கப்பட்ட
தேனுதீர்த்தம் இங்கு குளிப்பவர்களுக்கு குழந்தை வரம் கிட்டுமென்பது
ஐதீகம். இங்கு நடைபெறும் தைப்பூசத் தேர் திருவிழா மிக விஷேசமான
ஒன்றாகும் .

திருக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4மணி
முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. கருவூரார் சித்தரை தரிசிக்க
விரும்பும் சித்தர் தேடல் விரும்பும் நண்பர்கள் அவசியம் செல்ல வேண்டிய
திருக்கோவில் .

கருவூராரின் பாதம் பட்ட அற்புத இடம் . ஸ்ரீமுருகப்பெருமான் குன்று தோறும் குடியிருந்து அருள்பாலிக்க வெண்ணெய்மலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணியராக அருள் செய்கிறார் . வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள் .நலங்கள் நாள் தேறும் பெறுங்கள் .

ஓம் முருகா சரணம் முருகா . நன்றி

Monday, February 11, 2013

திருப்பங்கள் தரும் திருவிடைமருதூர் திருத்தலம்

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்(து)
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.


                                                                                       தேவாரம் -திருஞானசம்பந்தர்.

 மூலவர் : ஸ்ரீ மகாலிங்கப்பெருமான்
(இடைமருதன் ,மருதவாணர்)

அம்பிகை :

பெருநலமா முலையம்மை திருக்கோவில்

அமைவிடம் :

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை
செல்லும் வழியில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி
ஸ்தலம் ,தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய அழகிய திருக்கோவில் திருவிடை
மருதூர் ஆகும் .

பாடல் பெற்ற திருத்தலம் பாடியவர்கள்:அப்பர் ,சுந்தரர்
,திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் , கருவூர்த்தேவர் ,பட்டினத்தார் ,
அருணகிரிநாதர் , கவிகாளமேகம் , ஆகியோர் பாடிய ஸ்தலமாகும்


 நான்குபுறமும் சிவாலயம் இருக்க நடுவே ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத்தலம் என போற்றப்படுகிறது.காவிரியின் தென்கரையில் உள்ள  காசிக்கு நிகரான பதினோரு ஸ்தலங்களில் திருவிடைமருதூரும் ஒன்றென்பதே மிக விஷேசமான விஷயமாகும் .

 திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கியதிருத்தலம் .திருக்கோவில் அருகே காருண்யாமிர்தத் தீர்த்தம் எனும்திருக்குளம் அமைந்துள்ளது. ஏழு கோபுரம் ஏழு பிரகாரங்களை கொண்ட பெரியபரப்பளவில் அமைந்த பிரமாண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த திருக்கோவில்ஆகும் .            பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

 புராணச்சிறப்பு:

அகத்தியரும் பல முனிவர்களும் அம்பிகையை நேரில் தரிசிக்க தவம் இருந்தனர் .பல நாட்கள் அம்பிகைக்கு தவமிருந்தும் காட்சி அளிக்காததால் வருத்தமுற்று இருந்தனர் .

கயிலாயத்தில் இருந்து இதை கவனித்த அம்பிகை சிவனிடம் நமக்காக நெடுநாட்கள் அகத்தியர் தவமிருக்கிறார் . அவர்க்கு நாம் காட்சி அருளவேண்டுமென கேட்டுக்கொண்டார் .

 சிவன் அம்பிகையை முன்னமே செல்லச் சொல்லி விட்டு சிவன் அவர்க்கு முன்னமே திருவிடைமருதூர் வந்து தங்கினார்
அகத்தியர் முன் அம்பிகை காட்சி அளித்தார் .

அம்பிகை கண்டது மகிழ்ச்சி சிவனேயும் நாங்கள் தரிசிக்க வேண்டும் என ஆர்வமாக அகத்தியர் கேட்க சரி நானும் உங்களுடன் தவமிருக்கிறேன் என தவமிருத்தார் .

 சிவபெருமான் முதலில் சோதி வடிவாக பின் லிங்கவடிவாக அதன் பின்   மான் மழுவுடன் தலையில் பிறையணிந்து சிவபெருமான் முழு உடலாக காட்சி தந்து " இத்தலத்தில் லிங்கத்தை தரிசிப்பவருக்கு பெருஞ்செல்வங்கள் மற்றும் பாவங்களை போக்குவேன் என்றருளி தம்மை தாமே பூசித்த அற்புத ஸ்தலமாக திருவிடைமருதூர் இருப்பது பெரும் சிறப்பாகும் ,

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை வரை சிறப்புற நடக்கிறது.89 அடி உயர தேர்தமிழகத்தின் உயரமான தேர்களில் திருவிடைமருதூர் தேரும் ஒன்றாகும் .

திருவாடுதுறை ஆதினம் அவர்களால் திருக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது


 முடிவுரை :

 அம்பிகைக்கும் அகத்தியருக்கும் பல
முனிவர்களுக்கும் நேரில் காட்சி கொடுத்த அற்புதஸ்தலமான காசிக்கு நிகரான ஸ்தலமாக

அருள் தரும் பெருதலமாமுலையம்மை உடனமர் ஸ்ரீமகாலிங்கப்பெருமான வணங்கி பாவங்கள் போக்கி பல அற்புதங்களை அருளும் திருவிடை மருதூர் திருத்தலம் அற்புத ஆலயம் .

தரிசித்து அருள் பெறுங்கள் .
ஓம் சிவ சிவ ஓம்

Monday, February 4, 2013

அருள்மிகு பெருங்கருணைநாயகி உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஷ்வரர் திருக்கோவில்

" இதுவோ அவிநாசி..? இவ்வாறே நள்ளா(று)..?,
 இதுவோ திருப்புக்கொளியூர்..?-இதுவோதான் ,
 மூவாண்டு சென்று முதலை வாய்ப்பிள்ளை தனை,
 வாவென அழைத்த மண்

. -பழம் பாடல்



 மூலவர் -அவினாசி லிங்கேஸ்வரர்

அம்பிகை: அருள்மிகு
பெருங்கருணை நாயகி

 ஸ்தல விருட்ஷம் - பாதிரி மரம்

 பாடல் பாடியது ; ஸ்ரீ
சுந்தரமூர்த்தி நாயனார் . குமரகுருபரர் ஆகியோராவர் .

திருக்கோவில் காலம்
: திருக்கோவில் காலம் மிகப்பழமையானது . 5 ஆம் நூற்றாண்டில் இருந்து
கல்வெட்டுக்குறிப்புகள் கிடைத்துள்ளன. கூன் பாண்டியன் என்பவரால் கோவில் நிர்மாணப் பணிகள் துவங்கப்பட்டது.

கொங்கு நாட்டிலுள்ள முக்கிய
சிவாலயங்களில் சுமார் 1500ஆண்டுகள் பழமையான சிவாலயமாக ஸ்ரீ அவிநாசிலிங்கேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது


 அமைவிடம் : சேலத்தில் இருந்து
கோவை செல்லும் வழியில் அவிநாசி என்னும் ஊரில் பழைய பேருந்து நிலையத்தின்அருகே அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில்
தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது .


 முகப்பில் அழகிய அரசமரமும் அதனடியில்
ஸ்ரீ விநாயகப்பெருமானையும் தொழுது சென்றால் இடப்பக்கத்தில் குளமும்
முகப்பில் இராஜகோபுரம் பின் கொடிமரமும் வணங்கி உள்ளே சென்றால் மூலவர்ஸ்ரீ அவினாசி லிங்கேஸ்வரரை தரிசிக்கலாம் .


 திருக்கோவில் ஸ்தல வரலாறு :


சேரநாட்டிற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தந்தபோது தற்போது
அவிநாசி அக்காலத்தில் திருப்புக்கொளியூர் என்ற ஊரின் அருகில் வந்த போது
இரண்டு வீடுகளில் ஓர் வீட்டில் சந்தோஸத்தையும் ஓர் வீட்டில் ஓர் வீட்டில்
துக்கமாய் இருப்பதையும் கண்டார் .

அதை பார்த்த சுந்தரர் விசாரிக்க ஓர்
குழந்தை பிறந்த நாள் விழா கொண்டாடுவதாகவும் , ஒரு குழந்தை குளத்தில்
கவ்விச்சென்றதால் இறந்து போனதால் சோகமாய் இருப்பதாக கூறப்பட்டது.
உடனே ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் இறந்தபோன குழந்தையின் பெற்றோரை
அழைத்துச் சென்று தேவாரம் பாட குளத்தில் நீரும் முதலையும் வந்தது.

"
கரைக்கால் முதலை பிள்ளை தரச் சொல்லு காலனையே"

 எனப்பாட 7ஆண்டு கால
வளர்ச்சி பெற்ற குழந்தையை முதலை வாயில் இருந்து வந்ததது. அதைப்பெற்றகுழந்தையின் பெற்றோர் சந்தோஷமடைந்தனர் .

பாடல் பெற்ற ஸ்தலம் .நால்வரில் ஒருவரான சுந்தரர் தேவாரம் பாடி முதலையின் வாயில் குழந்தையை வரச்செய்ததால்எம பயம் நீக்கும் ஸ்தலமாக கருதப்படுகிறது.

திருக்கோவில் வளாகத்தில்சுந்தரருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பழங்கால சிறப்பு மிக்ககல்வெட்டுகள் திருக்கோவில் பின்புறத்தில் அமைந்துள்ளது.

 நீங்களும்
கொங்கு நாட்டின் 7 சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ பெருங்கருணைநாயகி உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசித்து எம பயம் நீங்கி வாழ்வில் எல்லா   வளமும் நலமும் பெற அந்த இறை துணை வேண்டி நிற்கிறேன் .

நன்றி

Friday, February 1, 2013

திருப்பங்கள் தரும் திருபாம்புரம் வழிபாடு

திருப்பாம்புர தரிசனம் தழழும் மேனியன்
தையல் ஓர்பாகம் அமர்ந்தனன் .
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி - சோற்றுத்துறை ,
கழலும் கோவை உடையவன்காதலிக்கும் இடம் ,
பழனம்,பாம்பணி,பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

 ஸ்ரீ
சுந்தரரின் நாட்டுத்தொகை


 மூலவர் : பாம்புரநாதர்
என்றும்
,ஷேசபுரிஸ்வரர் ,பாம்பீசர் , பாம்புரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் .


அம்பிகை- வண்டு சேர் குழலி
 என்றும் பிரமராம்பிகை ,வண்டார் பூங்குழலி
என அழைக்கப்படுகிறார் .

 ஸ்தல அமைவிடம் :

 கும்பகோணத்தில் இருந்து
காரைக்கால் செல்லும் வழியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி எனும்
ஊரில் இருந்து தென் திசையில் திருப்பாம்புரம் என்னும் அழகிய ஊர்
அமைந்துள்ளது.

 செல்லும் வழி :

1. கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி
வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தின் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி
வரலாம் .மயிலாடுதுறை திருவாரூர் சாலையும் குடந்தைசாலையும் ,காரைக்கால் சாலையும் சந்திக்கும் இடமான கொல்லுமாங்குடி பேராளம் ஆகிய ஊர்களுக்குஅருகே திருபாம்புரத்தை மினி பஸ் மூலம் அடையலாம்.


 ஸ்தல மரம் : வன்னிமரம்

 தீர்த்தம் : ஆதிசேட தீர்த்தம்

 சன்னதியின் சிறப்பு :

இராகு கேது ஏக சரீர சன்னதி

 ஸ்தல சிறப்பு:

காவிரி ஆற்றின் உள்ள பாடல் பெற்ற
ஸ்தலங்களில் 59 வது ஸ்தலம் .திருஞானசம்பந்தரால், திருநாவுக்கரசர் ,
சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

காலம் : 1200 ஆண்டுகள்
பழமையானது .கி.பி 1178முதல் 1218 வரை ஆண்ட 3 ஆம் குலோத்துங்க சோழன் காலத்திய கால்வெட்டே முதல் கல்வெட்டாகும் ,அதற்கு முந்தையகாலம் அறிய இயலாதது .

 ஸ்தல வரலாறு:

சிவனின் சாபம் நீங்க ஆதிசேடன் சிவராத்திரி
முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாம் சாமத்தில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து
வழிபட்டு விமோச்கனம் பெற்றதாக வும் ,திருப்பாம்புரத்தில் வாழும்
பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதால் யாரையும்
தீண்டுவதில்லை.

 ஆதிஷேகட தீர்த்தம் :

 திருக்கோவில் முன்பாக அழகிய
தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இங்கே வரும் பக்தர்கள் குளித்து
ஆனந்தமடைகிறார்கள். ஆச்சர்யம் : திருக்கோவில் உள்ளே இறைவன் இறைவியின் மேல் நல்லபாம்பு சட்டை உரித்தது 2002ல் நடந்த அற்புத நிகழ்வாகும் .

முடிவுரை:

 கடந்த ஆறுமாதத்திற்கு முன்பூ சென்ற அற்புத திருக்கோவிலில்
திருப்பாம்புரமும் ஒன்றாகும் . பல தோஷங்கள் மற்றும் ஜோதிடத்தில்
கூறப்படும் நாகதோஷங்களை நீக்கும் அருமருந்தாக திருப்பாம்புரம்
விளங்குகிறது.

 இராகுவும் கேதும் ஓரே உடலாக விளக்கும் அற்புத பாடல்
பெற்ற ஸ்தலமாகும் . எனது இந்த குடந்தை பயணத்தில் சில மாற்றங்கள் எம்
வாழ்வில் ஏற்பட்டன. திருக்கோவில் உள்ளே கணீர் குரலில் பாடலுடன் பாடி
பூஜிக்கின்ற திருக்கோவில் சிவாச்சாரியாரை பார்த்து அதிசயித்து நின்றேன்
.
 நிறைவான திருக்கோவில் வந்து வணங்கி ஸ்ரீ திருப்பாம்புரநாதர்
அருளைப்பெற்று உய்யுங்கள் . நன்றி

Wednesday, January 30, 2013

கருவூரார் சித்தர்

கருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில்
ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர்
திருக்கோவில் தென்மேற்கு மூலையில் தனி சன்னதி அமைந்துள்ளது.

இவர் தஞ்சை பெரிய கோவில் உள்ளே ஜீவசமாதியாகி உள்ளதாகவும் சில குறிப்புகள்  உள்ளன.அதேபோல கரூர் சிறப்பு மிக்க வெண்ணெய்மலை (நவநீதகிரி) ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் திரு உருவச்சிலையாக கருவூரார் அமர்ந்துள்ளார் .

 இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த இவர் பல அற்புத
சித்துக்களை அறிந்தவர் . பழனி சித்தர் போகரின் சீடராக மாணக்கராக இருந்து
பல சித்துக்கள் அறித்தவர் .

 கருவூரார் செய்த சில அற்புத சித்துக்கள்:

கருவூரார் ஒரு முறை திருநெல்வேலி சென்று நெல்லையப்பரை வணங்கி
நெல்லையப்பா வருக வருகவென அழைக்க ஈசன் வராது போகவே கோபங்கொண்ட கருவூரார் ஈசன் நான் அழைத்து வராததால் இங்கில்லாமல் போகட்டுமென சபித்து நெல்லையை விட்டு வெளியேறினார் .

 ஈசன் அடியார்களை உடனடியாக அழைத்து
கருவூரார் நான் வர காலம் தாழ்த்தியதால் எம்மை சபித்து செல்கிறார் .
வாருங்கள் நாம் அழைத்து வருவோம் எனக்கூறி கருவூரார் முன் அடியார்களுடன் தோன்றி சமாதானம் செய்து ஈசனே காட்சி கொடுத்ததாக வரலாறு ,

பின்
திருவிடைமருதூரில் ஈசனை சென்று வணங்கிய கருவூரார் சித்தருக்கு, சிவன்
காட்சி தந்து கரூர்க்கு வருக என அழைத்ததார் . சிதம்பரம் நடராஜர்
உருவச்சிலை போகரின் ஆணையால் கருவூரார் உருவாக்கியதாகும் . இவர் எழுதிய கெவுன சாஸ்திரம் ,சித்த மருத்துவம் நூல்கள் புகழ்பெற்றது.

மழைவாரத காலத்தில் இவர் வாக்கால் மழை பொழிந்ததாம் . ஒருமுறை சிவபெருமான்திருக்கோவில் கதவு திறக்காதபோது கவிபாடியே திறந்தாராம் . சிவத்தல யாத்திரையாக சென்ற இவர் வராகிரி ,திருக்குருகூர் ,திருச்செந்தூர்
,திருநெல்வேலி ஆகிய ஆடங்களில் பல அற்புதங்கள் செய்துள்ளார் .

 இராஜ இராஜசோழன் தஞ்சைபெரிய கோவில் கட்டியபோது இராஜ இராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில்வடிமைக்க பல ஆலோசனைகளை வழங்கினார் .

 தஞ்சைப்பெரிய கோவில்கட்டிக்கொண்டிருந்த இராஜ இராஜ சோழன் மற்ற சிலரின் ஆலோசனையின் படி கருவூராரின் சில ஆலோசனைகளை மதியாது சில செயல்கள்களை செய்ய மூலவரான
தஞ்சாவூர் பெரிய கோவில் லிங்கத்தை சரியாக பொருத்த முடியாமல் பொறியாளர்கள் அவஷ்தைப்பட,,,

 இராஜ இராஜன் கருவூராரின் அருமையை உணர்ந்து மன்றாடி கேட்டுக்கொள்ள மூலஷ்ஸ்தான கட்டுமான பகுதிக்கு வெற்றிலையை வாயில் மென்றபடி வந்த கருவூரார் சரியாக பிடிக்கும் படி கூறி தன்
வெற்றிலைச்சாற்றை மென்று உமிழ்தாராம் . மூலவர் சிலை ஆடாமல் அசையாமல் பிடித்துக்கொண்டது.

 போகரின் சீடாரான கருவூரார்க்கு இரசவாதக்கலை தெளிவாய்
தெரிந்தற்கு இது ஓர் சான்றாகும் . தஞ்சை பெரிய கோவில் ஆண்டு கி.பி 1000
ஆகும் .

இராஜ இராஜ சோழன் காலத்தே வாழ்ந்த கட்டுமானம் பற்றி அறிந்திராத அந்த காலத்தில் சுற்றிலும் களிமண் பூமியாக உள்ள தஞ்சாவூரில் பெரியகோவில் கட்ட உதவியாக இருந்த ஸ்ரீ மத் கருவூரார் நாம் வணங்கவேண்டியசித்தர் .

 முடிவுரை :

கருவூராரை வணங்க கொங்கு நாட்டில் அற்புத சன்னதி
கருர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவிலில் வந்து வணங்கி விட்டு செல்லுங்கள்


. ஓம் சிவாய நமஹ

Sunday, January 27, 2013

ஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு

                   SRI MASANI AMMAN TEMPLE HISTORY.ANAIMALAI                                                                      


பழங்காலத்தில் நன்னன் என்கிற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார் . அவரைச்சந்திக்க ஒரு துறவி வந்தார் .அவரை வரவேற்று பல உபசரிப்புகள் நன்னன் செய்தாராம்
.
அரசனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்து

" மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார் .
உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன் ,முக்கியமான
ஒன்று இதை உண்டபின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு .
இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்''' .


 மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார் .சுவை நன்றாக இருக்கவே
அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில்ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார் .


 மரம்பெரியதாகி பழம் விடும் நேரம்
வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது .அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார் . இதைக்கேள்லிப்பட்டதுறவி மன்னரிடம் வந்து

''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான்
சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள் . நீங்கள் நினைப்பது போல் அந்த
மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது
. அதை தெய்வீகப்பெண்மணி ஒருவரே சாப்பிடுவார் . நீங்கள் சாப்பிட
நினைத்தால் இந்த தேசம் அழிவுறும் '''

என உரைத்து கிளம்பினார் துறவி. மன்னர்
நன்னன் அதை அலட்சியப்படுத்தி இந்த மாமரத்தில் பழுக்கும் பழத்த
மாம்பழத்தை யாரேனும் சாப்பிட்டால் மரண தண்டணை என அறிவித்தான். தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார் .


அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி ஆற்றில்
குளிக்கச்சென்றார் . அங்குதான் அரசனின் நந்தவனமும் அதிசயமாமரமும்
இருந்தது . தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே
விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார் .

 மற்ற பெண்கள் இது அரசகட்டளை
இதை சாப்பிட்டு விட்டாயே ராஜ தண்டனை கிடைக்குமே என பதறினார்கள் .
பயத்தில் உடனடியாக கிளம்பினார் . தாரணின் அப்பாவிடம் இந்த விஷயத்தை
கூறினார்கள் .

அதற்குள் இந்தவிஷயம் மன்னர் காதுக்கு எட்டியது .காவலாளிகளை
விட்டு தாரணியை கைது செய்து அரண்மனைக்கு கூட்டிச்சென்றார்கள் .குற்றம் சாட்டப்பட்டது .தாரணி அழுது புலம்பினால் அரசரின் அறிவிப்பு அறியாமல்பிழையாகி விட்டது ,மன்னிக்கவேண்டினாள் .

அரசனோ இரக்கில்லாமல் மரணதண்டனையை அறிவித்தான் . ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என்
ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் .

 என்புகழ் ஓங்கும் . உன் ஆட்சி அழியும் என
சூளூரைத்து கொலைகளம் சென்று உயிர் பிரிந்தாள் . அவள் உடல் மயானம்
எடுத்துச்செல்லப்பட்டது .அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து,மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசானி அம்மனாக தொழுதுசென்றார்கள் '

 அரசரால் கொல்லப்பட்ட தாரணி தெய்வீக பெண் அவரே மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி
வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது.

 பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி
அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் . மாசாணி அம்மன் உக்கிர தெய்வம் .

 நீண்டவாக்கில் படுத்திருக்கும் அன்னை.பிற்காலத்தில் கொடுங்கோல் மன்னன் எதிரிகளிடம் இறந்தான் . கன்னி தெய்வத்தை பலியிட்ட இடம்
பிங்கொணம்பாறை என அழைக்கப்படுகிறது.

மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி
பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார் . பில்லி
சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணிஅம்மன வணங்கினால் நலம் பயக்கும்.

உப்பாறு படுகையில் பொள்ளாச்சியில்
இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண   ஸ்ரீமாசாணி அம்மன் திருக்கோவில் அம்பிகையை வந்து வணங்கி தங்கள் வாழ்வில்
வளம் பெறுங்கள் நன்றி,

Saturday, January 26, 2013

ஸ்ரீமாசாணி அம்மன் தரிசனம்

ஸ்ரீ மாசாணி அம்மன் தரிசனம் மூலவர் ஸ்ரீ மாசாணி அம்மன் அமைவிடம் :


பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆனைமலை என்ற ஊரில்இருந்து திருச்சூர் நெடுஞ்சாலையில் ஆனைமலை பிரிவு வந்து சேத்துமடைசெல்லும் வழியில் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .

பெண் தெய்வங்களில் உக்கிர தெய்வமாக தேவதையாக விளங்கும் ஸ்ரீ மாசாணி அம்மன்ஆதிமகாசக்தி அம்சமாக ஈஸ்வரியின் அம்சமாக திகழும் அற்புத தெய்வமாகும் .

திருக்கோவில் மூலவர் அமைப்பு :

 மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில்
காட்சி தருகிறது.

 பெரிய கண்கள் உருவமைப்புடன் 15 அடிக்கு மேலான பெண்
தெய்வம் வானத்தை பார்த்தவாறு படுத்திருக்கிறார் .வாரநாட்களில்
அம்மிகைக்குரிய செவ்வாய் ,வெள்ளி, அமாவசை விசேசநாட்கள் ஆகும் .

வருடவிழா தைமாதம் அமாவசையில் துவங்கி 17நாட்கள் நடைபெறும்

. காலை
6 மணிமுதல் இரவு 8 மணிவரை பூஜை நடந்து கொண்டே இருக்கிறது.

நீதிக்கல் :

செய்வினை,பில்லி. சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ,தமக்கு
எதிரிகளால் ஆபத்து எனில் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் வந்து தமது
எதிரிக்காக மிளகாய் வற்றலை வாங்கி இங்குள்ள உரலில் ஆட்டி நீதிக்கல்லில் தேய்து விட்டு வரேண்டும்.

பின் நினைத்தது நடந்திட்ட பின் அம்பிகேயை குளிர வைக்க தூய நல்லெண்ணெய் காப்பு செய்து அம்பாளை குளிர வைக்கவேண்டும் .
புலிப்பாணி சித்தர் மாசாணி அம்பாளை புகழ் பாடியுள்ளார் .

 உயந்த ராஜகோபுரம் அமைந்துள்ளது. வழியெங்கிலும் கடைகள் இடைவிடாது பக்தர்கள் வருகெயன ஆனைமலை ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில்பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 மாசாணி அம்மன் பற்றி பல ஸ்தல விளக்கங்களுடன் பின்னால்
பகிர்கிறேன் .நன்றி

Thursday, January 24, 2013

சேலத்தில் திருமணிமுத்தாறு படிகையில் ஆட்சி செய்யும் அருள்மிகு சுவர்ணாம்பிகை உடனமர் ஸ்ரீ சுகவனேஷ்வரர் திருக்கோவில் தரிசனம்

அருள்மிகு சுகவனேஷ்வரர் -சுவர்ணாம்பிகை திருக்கோவில் தரிசனம்



மூலவர் :


ஸ்ரீ சுகவனேஸ்வரர் (கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுக பிரம்மரிசி
வழிபட்டதால் சுகவனம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது )

 அம்பாள் :

ஸ்ரீ
சுவர்ணாம்பிகை

 ஸ்தல அமைப்பும் சிறப்பும் :

 பஞ்ச பாண்டவர்களால் வழிபட்ட திருமணி முத்தாறு படுகையில் அமைந்த சுயம்பு லிங்கங்களில் முதலாலதாக சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

 சேலம் நகரின் நடுவே கிழக்கு பார்த்த வண்ணம் 3 இராஜ கோபுரங்களை உடையதோர் அற்புத திருக்கோவிலாகும் .ஸ்தலம் ,மூர்த்தி,தீர்த்தம் ,மூன்றிலும் சிறப்புகொண்டது. சுவாமி சுயம்பாக சற்றே சாய்வாக லிங்க உருவில் காட்சிதருகிறார் .

 முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளதாம் . அம்பிகை
சுவர்ணாம்பிகை சன்னதியும் அருட்பார்வையும் காணற்கரியது. பிரகாரத்தின்
அருகில் ஓர் கிணறு அமைந்துள்ளது .

ஸ்தலவிருட்சம் : பாதிரி மரம்

 ஸ்தலம்
விளக்கும் புத்தகங்கள் :

பாபநாச ஸ்தல புராணம்,மற்றும் அருணகிரி நாதரால்
பாடல் பெற்ற ஸ்தலம் . , சுந்தரர், ஔவையார் ஆகியோர் வழிபட்ட பாடல் பெற்றஸ்தலமாகும் .


 ஸ்ரீ சுகவனேசப்பெருமானின் வேறு பெயர்கள் :


கிளிவண்ணமுடையார் , கிளிவனநாதர், பாபநாசர் ,பட்டீஸ்சுரர் ,நாகீசர்
,மும்முடிநாதர் என்றும் அம்பாள் ஸ்ரீ சுவர்ணாம்பிகை,மரகதவல்லி
,பச்சைவல்லி என்பனவாகும்.

 தீர்த்தக்கிணற்றிக்கு அமண்டுக தீர்த்தம் என்றுபெயர் . இன்றுவரை இக்கிணற்றில் தவளைகள் இல்லை என்பதே ஆச்சர்யமான
செய்தியாகும் .

 திருக்கோவில் காலம் : சுமார் 800ஆண்டுகள்
எனத்தெரிகிறது. கி.பி 1200களில் சுந்தர பாண்டியன் என்பவனால்
திருக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.


பூஜை நேரங்கள் :

காலை 6.00 மணி ,
காலை9.00மணி
உச்சிகால பூஜை 11.30
மாலை 5.30
இரவு 8.30பூஜையென
 5 காலப்பூஜை
சிறப்பாக நடைபெறுகிறது.

ஆண்டுத்திருவிழா : வைகாசி மாதம்

 முடிவுரை:
பிரம்மனால் கிளி தோஸம் பெற்ற சுகமுனிவர் சாபம் நீங்கப் பெற்ற அற்புத
ஸ்தலத்தை நீங்களும் வணங்கினால் பிறவித்தோஸம் விலகி நன்மைகள் நாளும் நடைபெறும் . அற்புத அதிர்வுகள் கொண்ட ஆலயம் .

வந்து வணங்கி விட்டு
கருத்திடுங்கள் , நன்றி

Monday, January 21, 2013

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்

                                       ஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம;



 கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள
நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதியை பற்றி சென்ற பதிவில்
பார்த்தோம் . அந்த பதிவை படிக்காதவர்கள் அதையும் படித்து வரவும் .

 ஸ்ரீ
சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது .

காவிரியின் சீற்றம்
அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை.

 பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .

அடுத்ததாக புதுக்கோட்டை பகுதியில் சதாசிவபிரம்மம் நெற்கதிர் நிலங்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தாராம் . அப்போது வைக்கோல் போர்அடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்க , அடுக்கிக்கொண்டிருந்த வைக்கோல் போர்களுக்கிடையே சதாசிவ பிரம்மம் விழுந்து விட்டாராம் .

 வைக்கோல் போர்
அடிப்பவர் சதாசிவ பிரம்மத்தை கவனிக்காது அவர் மேலேயே வைக்கோல் போரைஅடுக்கி பெரிய வைக்கோல் போர் ஆகி விட்டது.

 சதாசிவ பிரம்மம் கீழே கிடக்க பல அடி உயரத்திற்கு வைக்கோல் போட்டு விட்டனர் .ஒரு வருடமாக பசுக்களுக்கு  வைக்கோல் போட படிப்படியாக குறைந்த வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் எழுந்து நடக்க அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் .

இந்த விஷயம் மந்திரியின் காதுக்கு சென்று பின் அரசன் விஜயரகுநாத தொண்டைமானிடம் சென்றது.

அவரும் சதாசிவ பிரம்ம் இருக்குமிடத்தை வந்து 8 வருடமாக மன்னர் காத்திருந்து பின் மன்னரின் பொறுமையை அறிந்துசதாசிவ பிரமம் மணலிலேமந்திரத்தை எழுதிக்காண்பிக்க அதை மனனம் செய்து அந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் பூஜை செய்யதொடங்கினாராம் .


அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண
சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து

 "வறுமையால் திருப்பதி
செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் .

 தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி
கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம் .

 இப்படி பல அற்புத சித்துக்களை நிகழ்திய ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கடைசியாக நெரூர் வந்து ஜீவசமாதி அடைந்து தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஆசியையும்
நன்மையையும் அளிக்கிறார் .

ஸ்ரீசதாசிவம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில்
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் மானாமதுரை சிவன் கோவில் பின்புறம் ஸ்ரீ சதாசிவர் சூட்சமசரிரமாகவூம் , கராச்சியில் காரணசரீரமாகவும் ,நர்மதா நதி ஓம்காரம் என்ற இடத்தில் அங்கேயும் ஜீவசமாதியானதாக கருதப்படுகிறது.


காசியிலும் ஸ்ரீ சதாசிவம் ஜீவசமாதி ஆகியுள்ளதாக அறியப்படுகிறது.
சித்தர்கள் பலர் பல முகமாக காட்சி கொடுத்து ஒருவரே பல இடங்களில்
ஜீவசமாதியானதாக அறிகிறோம் .

அவ்வகையில் பல அற்புதங்கள் செய்த ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் மட்டும் விதிவிலக்கன்று. வாய்ப்பு கிடைக்கும்
போது தரிசனம் செய்யுங்கள் .

நன்றி

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் (அதிஷ்டானம் )ஜீவ சமாதி

ஓம் ஸ்ரீஸதாசிவ பிரஹ்மணே நம; நம் நாட்டில் பல யோகிகளும்
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் பல பெற்ற புண்ய பூமியாகும்.
கரூர் மாவட்டம் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில்
காவிரிக்கரையின் அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் ஸ்ரீ சதாசிவ
பிரம்மேந்திராள் அவர்களின் அற்புத ஜீவசமாதி அமைந்துள்ளது.

 நெரூர்சதாசிவம் திருக்கோவில் என்று கேட்டால் கருர் பஸ் நிலையத்தில் இருந்தே பஸ்கள் உள்ளன. பரமசிவேந்திராள் என்ற குருநாதர் சிவராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயர் சூட்டி சந்நியாசம் கொடுத்துஅனுப்பி வைக்க குருவின் உபதேசப்படி அதிகம் யாரிடமும் பேசாமல் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார் .

பல அற்புதங்களை சித்துகளை செய்த அற்புதமான மகான் . ஸ்ரீ சதாசிவ பிரம்மம் தமது ஜீவசமாதி அமைக்க சீடர்களான தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்து "குகை அமைத்து சாமக்கிரியைகளால் மறைத்து விடுங்கள்" என்றார் .

அவர் சொன்னமுறைப்படி ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது.ஸ்ரீ சதாசிவ பிரம்மம்அங்கிருந்த சீடர்களை அழைத்து "நான் ஜீவசமாதி ஆக இந்த குகையில்இறங்கிய பின்பு விபூதி,உப்பு,மஞ்கள் ,செங்கற்பொடி போட்டு குகையை மூடிவிடச்சொன்னார் .

பின் 9 ஆம்நாள் எம் சிரசின் மேல் வில்வமரம்
முளைக்குமென்றும் ,1 2 ஆம் நாள் காசியில் இருந்து சிவலிங்கம் வரும் அதை
எம் ஜீவசமாதியில் இருந்து12 அடிக்கு முன்னதாக கிழக்கில் கோவில்
கட்டசொல்லிவிட்டு ஜீவ சமாதி அடைய குகைக்குள் சென்று அமர்ந்து விட்டார் .

சீடர்கள் குருவின் உபதேசம் கேட்டு பின் குகையை மூடிவிட 8 ஆம் நாளில்
வில்வம் துளிர்விட 12 ஆம் நாள் காசியிலிருந்து சாது ஒருவரின் மூலம்
சிவலிங்கமும் வந்து சேர்ந்த அற்புதம் நடந்தது .

 திருக்கோவில் 220ஆண்டுகாலமாக பலரால் மெருகேற்றப்பட்டு ஸ்ரீ சதாசிவபிரம்மத்தின் ஜீவசமாதியுடன் அமைதியாய் இன்றும் வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம்அளித்துக்கொண்டிருக்கிறது.

 சித்தர்களை தேடி சித்தர்களின் ஜீவசமாதிகளை
தேடி பயணிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் அமைதியையும் , இருட்டிலே
பயணிக்கும் வாழ்க்கையை வெளிச்சமாக்கும் அருமையான ஸ்தலம் . ஸ்ரீ
சதாசிவபிரம்மேந்திராளை தேடி வாருங்கள் .

கண்டிப்பாக உங்களுக்கும் ஆசிகள்வழங்க காத்திருக்கிறார் .பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில்   ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் சித்துக்களை பகிர்கிறேன் . நன்றி

Friday, January 18, 2013

ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவ சமாதி

கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் ,சித்தர்கள் வாழ்ந்த
பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊதியூர் மலையில் தவம்
இருந்தார் . பின் ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில் பிரதிஷ்டை
செய்தார் என்றும்

சிலகாலம் வாழ்ந்து தம் சீடரான செட்டி தம்பிரானுக்கு ஆசிர்வாதமளித்து திருப்பதி சென்று ஜீவசமாதியாகி விட்டதாக வரலாறு . கொங்கண
சித்தரின் திருக்கோவிலும் ,பொன் செய்ய ஊதிய பாறைகளின் ஓட்டைகளும்
தற்போதும் உள்ளன.

 இரசவாதக்கலைகளை அறிந்த கொங்கணர் இரும்பை தங்கமாக்கும்
சித்துகளை அறிந்தவர் .

 ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி :

 காங்கோயத்தில்
இருந்து தாராபுரம் (அ)பழனி சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் ஊதியூர் மலைஎன்றும் கொங்கணகிரி , என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவில் அமைந்துள்ள குன்றில் முதலில் வேலாயுதசாமி திருக்கோவில்அமைந்துள்ளது.

நாங்கள் சென்றபோது திருக்கோவில் பூட்டப்பட்டு இருந்தது
.(காலை 6 முதல்10 வரையிலும் மாலை 4 மணி முதல் 6 வரை திறக்கப்படுமாம் )
சற்று தூரம் மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி இரு

பெரிய பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. இங்கே அமாவசை,பெளர்ணமி நாட்களில்நிறைய கூட்டம் வருகிறது .

அருட்சக்தி அற்புதமாய் அமைந்துள்ள
ஜீவசமாதியாகும் . சுமார் 3000 ஏக்கர் மூலிகை வளம் பொருந்திய குன்றாகும்
.பெளர்ணமி நாட்களில் இங்கு வழங்கப்படும் மூலிகைச்சாறு விஷேசமாகும் .
இங்கிருந்து மேலே சென்றால் ஸ்ரீ கொங்கண சித்தரின் திருக்கோவிலை காணலாம் .

ஊதியூர் மலை சிவனும் சித்தர்களும் வாசம் செய்யும் அற்புதமான மலை என்பதை ஆங்காங்கு காணப்படும் வில்வமரங்கள் உறுதி செய்கின்றன. சித்தர்களின் தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பார்க்க,தெளிய அறிய, அற்புதமானஇடம் . அரிய இவ்விடத்தின் சூட்சமங்களையும் விரிவாக தேடலுடன்
சந்திக்கிறேன் நன்றி,

கொடநாடு காட்சி முனையின் அழகு

நீலகிரி மாவட்டத்தில் அழகிய இடங்களில் கொடநாடு காட்சி முனையும் ஒன்றாகும்.சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவை கண்டு களித்துக் கொண்டேசென்றால் கோத்தகிரியில் இருந்து 19 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொடநாடு
காட்சிமுனையை அடையலாம் .

 கொடநாடு வியூ பாயிண்டில் ஹோட்டல் எதுவும்
கிடையாது .சிற்றுண்டி கடை ஒன்றும் மேலே மகளீர் சுய உதவிக் குழுவின்
பல்பொருள் அங்காடி ஒன்றும் உள்ளது. இங்கே நீலகிரி தைலம் டீத்தூள்கள்
கிடைக்கின்றது.

 கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்த்தால் வலப்புறம்
தூரத்தில் பவானி சாகர் அணைக்கட்டு தெரிகிறது. காட்சி முனையின் அருகே
வலப்புறமாக தெரிவது ரங்கசாமி குன்று ஆகும் .நடுவிரல்,
மோதிரவிரல்,ஆட்காட்டி விரல் போல ரங்கசாமி பில்லர் தெரிகிறது.

40வருடங்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக ரங்கசாமி குன்றில் மோதி விமான விபத்து ஒன்று நடந்ததாக இங்குள்ள நன்பர் கூறினார் , ரங்கசாமி குன்றின் கீழே அழகான நீண்ட அருவி ஓடுகிறது . இடப்புறமாக மாயாறு U வடிவில்ஓடுகிறது.

அருகே தெங்குமரஹடா என்னும் கிராமம் அழகாக தெரிகிறது. கொடநாடு
காட்சி முனையின் கீழ் இறங்கி நடந்தால் இன்னோரு வியு பாய்ண்ட் வருகிறது . இங்கே இருந்து பார்த்தால் தெங்குமரஹடா கிராமம் சற்று அருகே தெரிகிறது.


ஊட்டியில் இருந்து 50கி.மீட்டருக்குள்ளே வரும் கொடநாடு காட்சி முனை
பார்க்கவேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும் . கொடநாடு காட்சிமுனை ஈரோடு
மாவட்டத்தின் பல இடங்களை மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் காணலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . நன்றி

Friday, January 11, 2013

நாகதோஷம் நீக்கும் திருநாகேஷ்வரர்

                                    ராகுதோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்
                                                                                                    

" நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம்
நண்ணுவார் கோளும் நாளும்
தீயவேணும் நன்காம் குறிகொண்மினே"

-(திருஞான
சம்பந்தர்)


மூலவர் : செண்பகராண்யேஸ்வர் \

அம்பாள் : கிரிகுஜாம்பாள்
(குன்று முலையம்மை) \

திருநாகேஸ்வரம் முன்காலத்தில் செண்பகப்பூ தோட்டமாக
இருந்தமையால் செண்பகாராண்யம் என்றும்
ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் என
இறைவனை அழைத்தும் , இறைவிக்கு கிரிகுஜாம்பாள் ,பிறையணிவாள் நூதல் அம்மை
என்றும் பொருளுண்டு.


 செல்லும் வழி : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
இருந்து வடகிழக்கே 7 கி.மீட்டர் தொலைவில் காரைக்கால் செல்லும் வழியில்
திருநாகேஸ்வரம் திருக்கோவில் அழகே அமையப்பெற்றுள்ளது.

நவகிரகங்களில்   ஒன்றான ஸ்ரீ ராகு பகவான் இங்குள்ள ஈசனை வழிபட்ட சாப நிவர்த்தி பெற்றதாக
வரலாறு,கெளமர் வழிபட்டு தன் மனைவி அகலியைப் பெற்றதும் பாண்டவர் தாம்
இழந்த நாட்டைப்பெற்றதும் ,திருநாகேஸ்வரத்தில் வணங்கியதால் பலன்
ஏற்பட்டதாம்

 நாகராஜர் திருக்கோவில் :நாகராஜர் தனது தேவியர்களான சிம்ஹி
,சித்ரலேகா உடன் தனி சன்னதியாக தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ரூ 500
கொடுத்தால் இருவர் பாலாபிஷேம் செய்து வரலாம் .

ஞாயிற்றுக்கிழமை 4.30
மணிக்கு திருநாகேஸ்வரத்தில் ராகுகால பூஜை துவங்குகிறது 04.30 மணி முதல்
06 .00 மணி வரை நடைபெறும் .நாகராஜருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது
பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள அற்புதமான விஷயமாகும்

.ஞாயிற்றுக்கிழமை
பாலாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு
பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் ,காலசர்ப்பதோஷம் , ஆகிய பல நாக தோஷங்கள்
நிவர்த்தி ஆகுமென்பது கண்கூடாகும் .

 திருக்கோவில் திறப்பு நேரம் : காலை
5மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம்
திறந்திருக்கிறது. ''

திருக்கோவிலில் சூரியனால் உண்டாக்கபெற்ற சூரிய
தீர்த்தம் ,மற்றும் திரிசூல தீர்த்தம் உட்பட 12 தீர்த்தங்கள்
அமைந்துள்ளது.

முடிவுரை : ஜோதிடம் கூறும் நாகர் சம்பந்தமான அனைத்து
கிரகதோஷங்களையும் திருநாகேஸ்வரம் வந்து ஸ்ரீ நாகநாதர்க்கு பாலபிஷேகம்
செய்தால் நீங்குவது தெளிவான உண்மையாகும் .

 தோஷ காரணங்களால்
திருமணமாகதவர்கள் கூட திருநாகேஷ்வரத்தில் ஞாயிறுக்கிழமை பாலபிஷேகம்
செய்து பின் திருமணஞ்சேரி வந்தால் திருமணம் கைகூடுகிறது .
அற்புதமான
பழங்கால திருக்கோவில் சென்று வாருங்கள் நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...