க‌ட்டுரைக‌ள்

மரம் வளர்ப்போம்

      மரம் வளர்ப்போம்: குளோபல் வார்மிங், சுற்றுப்புறசூழல் சீர்கேடு,காற்று மாசு, தட்ப வெட்ப நிலை மாற்றம், இப்படியெல்லாம் ஒரு காலத்தில் நானும் பேசிக் கொண்டிருந்தவன் தான் சரி நமக்கென்ன இந்த சமுகத்தின் மேல் இவ்வளவு அக்கறை ? ரோட்டில் பழங்கோவில்களில் அந்த படிப்பறிவு இல்லாத காலத்திலியே நிறைய செய்திருக்கும் போது நாமும் செய்யலாமே,.! அப்படி யோசித்துதான் மரம் நட வேண்டும் என எண்ணம் உருவானது. ஒரு வளர்ந்த புங்கன் மரம் 1 டன் ஏ.சி காற்றை கொடுப்பதாக ஒரு கட்டுரையில் படித்தேன் முதல் கட்டமாக புங்கன் மரக்கன்றுகள் வளர்கக ஆசைப்பட்டு 20
விதைகள் எடுத்து வந்து செடியாக தயார் செய்து என் நன்பர்களுடன் நானும் சேர்ந்த நட்டேன்.அவை என் உயரத்திற்கு வளர்ந்து,மரமாகி உள்ளது. பின்னர் ஒரு முறை அரசமர விதைகள் எடுத்து அக்கன்றுகளை சித்தேஷ்வரமலை செல்லும் போது 20 அரச மரங்கள் கொண்டு சென்று நட்டேன். அரச மரத்தில் உச்சியில் சிவனும். நடுமரத்தில் பெருமாளும் தரைப்பகுதியில் பிரம்மாவும் அங்கம் வகிப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் சொல்கிறார்கள் ,இக்கட்டுரையின் நோக்கமே இதைப் படித்த நீங்களும் ஒரு மரம் உங்கள் பிறந்த நாளில் இந்த சமுகத்தை உயர்த்த பாடுபடுவோம்.! செய்வீர்களா? மேலும் உப தகவல்களுடன் இக்கட்டுரையை விரிவு செய்யலாம் . நன்றி.