Monday, November 10, 2014

G.P இராஜன் எனும் விருட்ஷம்

என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத வெளியே வர வழியின்றி மிகக் கொடுரமான தருணத்தில் நிற்கிறேன் . 2014 ஆம் வருடம் மார்ச் மாத துவக்கத்தில் எனது அண்ணன் G.pஇராஜன் போன் செய்து எனக்கு இரத்தப்புற்று நோய் தாக்கியிருக்கிறது என சொன்ன நாளில் இருந்து இன்று வரை நடைப்பிணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

 எனது அண்ணன் எல்.ஐ.சி முகவராக பவானி கிளையில் கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்தார் . எனது குடும்பத்தின்
மூத்த சகோதரனாக என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்திய ஆசான் .
அண்ணனின் நன்பர்கள் சென்னை ,கேரளம் ,வேலூர் , கர்நாடக என பல ஊர்
கூட்டிப்போய் ஆயுர்வேதம் முதல் அலோபதிவரை பார்த்தார்கள் .

 சென்னையிலுள்ள ஒர் தனியார் மருத்துவமனை 40லட்சம் செலவாகுமென பேசியது ! அடையாரில் 25லட்சம் செலவாகும் என்றார்கள் ! எங்கே போவது ? ஏழை எங்கே போவான் ?

எப்படியும் இந்த உயிரைக்காப்பாற்றி விட வேண்டுமென சென்னையிலுள்ள ஓர்மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிட்சை கொடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில்வீட்டிற்கு வந்தார் . அடுத்த இரண்டு நாளில் முகம் வீங்கிய நிலையில் வாய் உட்பகுதியில் புண் ஏற்பட எது சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட வாந்திநிற்காமல் வரவும் என்ன செய்வதென புரியவில்லை !

 இந்த சூழலில் சத்தியமங்கலம் அருகில் புற்று நோய்க்கு ஒர் வைத்தியர் மருந்து கொடுப்பதாக கேள்விப்பட்டு கிளம்பினோம் . அத்தாணியில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் வழியில் காளியூர் பிரிவு என்ற இடத்தில் சரவணா
சித்தவைத்திய சாலை கேள்விப்பட்டு அந்த வைத்தியரிடம் அனுப்பி வைத்தேன் .


எந்த மருந்திலும் 25 நாளாக நிற்காத வாந்தியை அந்த சித்த வைத்தியர்
1நாளில் நாளில் நிறுத்தி சாப்பிட வைத்தார் . 25 நாட்களாக சாப்பிடாத என்
அண்ணன் G.p இராஜன் அன்று முதல் 3 வேளை உணவு சாப்பிட்டார் .படிப்படியாக மருந்தும் சாப்பிட்டு படிப்படியாக குணமாக ஆரம்பித்தார் .

அந்தவைத்தியர்க்கு எனது நன்றிகள் . 


 பின் 6 மாதம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அந்த சித்த மருந்து சாப்பிட படிப்படியாக இரத்த வெள்ளணுக்கள் குறைந்து என குணமாக ஆரம்பித்தார் . ஹீமோதெரபில் கொட்டிய முடி வளர்ந்தது . அவரைப்பார்த்து ஆச்சர்யர்ப்பட்ட நன்பர்கள் பலரும் அப்போது உண்டு .மறுபடி தன் வேலையாக வெளியே கிளம்ப அக்டோபர் முதல் வாரத்தில் நோயின்தாக்கம் ஆரம்பித்தது .

முதல் உள்நாக்கில் புண் வந்து சாப்பிட முடியாமல்
செய்தது . மறுபடி உணவு சாப்பிட முடியாமல் போக சிவப்பணுக்கள் குறைந்து
வெள்ளையணுக்கள் மறுபடி அதிகமாக ஆரம்பிக்க பின் சித்த மருந்து கொடுத்து கேட்காமல் கடைசியாக 15 நாட்கள் சென்னை சென்று ஆங்கில வைத்தியம்பார்த்தும் சிகிட்சை பலன் இன்றி

கடந்த 18.10.14 அன்று காலை 4.15 மணிக்கூ

எனது அண்ணன் G.p இராஜன் இறைவனுடன் கலந்து விட்டார் .


 இரத்த புற்று நோயில் 40வகை இருப்பதாக சொல்கிறார்கள் . எனது அண்ணாவுக்கு இருந்தது அதிகம் பாதிக்ககூடிய புற்று நோய் வகையாம் . ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மஜ்சை ஆப்ரேசன் செய்து மாற்றுவதே சிகிட்சை என்கிறார்கள் . அந்த ஆப்ரேசன் செய்தாலும் சிலகாலமே உயிர்வாழ வாய்ப்பு உள்ளதாம் .


எப்படியாயினும் இரத்தப்புற்று நோயை தற்காலிகமாக தள்ளிப்போடவே மருந்து இருக்கிறது என் வாழ்வில் நேர்ந்த உண்மை . இந்த பதிவின் நோக்கமே
யாரையும் குறை சொல்ல அல்ல . என் வாழ்வில் என் அண்ணாவிற்கு
நேர்ந்தவற்றை உங்களுக்கு தெரிந்து கொள்ளவே இந்த பதிவு . இது போன்ற
குணப்படுத்த முடியாத நோய்களில் பலரும் தினம் செத்துப்போவது ஏற்க முடியாது


இதற்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்க யாரேனும் இந்த பூமியில் அவதரிக்கவேண்டும் . பல ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டு மருந்தில்லா நோய்களைகுணப்படுத்த பல உயர்ந்த மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கவேண்டும் .நான்அன்றாடம் வேண்டி இறஞ்சுகிற சிவபெருமானும் , ஸ்ரீ வெங்கடாசலபதியும்சித்தர்களூம் இதைச்செய்யவேண்டும் .


வாழ்வின் எந்த சுகமும் அனுபவிக்காது, தினமும் காலையில் எழுந்து ஸ்ரீ செல்வ விநாயகரையும் ,ஸ்ரீ கக்குவாய்மாரியம்மனையும் வணங்கிவிட்டே சாப்பிட செல்கிற என் அண்ணன் ,புகை மது பழக்கம் இல்லாதவர் எப்படி இந்த நோய் தாக்கியது என ஆற்றாமை இன்று  வரை தொடர்கிறது . எப்படியும் என் தம்பி என்னைக்காப்பாற்றி விடுவான் என நம்பிய என் அண்ணாவின் ஆத்மாவிற்கு பதில் சொல்ல வழியின்றி வலியில்
தவித்துக்கொண்டிருக்கிறேன் .

 என் இப்போதைய வேண்டுதல் எல்லாம் அவர்விரும்பிச்செல்கிற திருப்பதியிலோ திருவண்ணாமலையிலோ இறைவனின் நிழலில் இளைப்பாறவேண்டும் என்பதே !

 இந்த முக்கிய தருணத்தில் எனக்கும் என்

குடும்பத்தினருக்கும் தோள் கொடுத்த நன்பர்கள் பலருக்கும் நன்றி.

 1.முதலில் திரு. செந்தில்குமார் M.S ராணிமருத்துவமனை ,அந்தியூர் 

 வேண்டும் போது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி அண்ணாவிற்கு பலமுறை இரத்தம் செலுத்தியும் வாழ வைத்தவர் அவர்க்கு என் நன்றிகள்

 2.
அண்ணாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றதும் ஒடி வந்து உதவிய அவரின்
நெருங்கிய நன்பர்கள்

 Tr. Murugan, Devolopment Officer, bhavani branch

Tr,palanisamy lic agent bhavani branch  

Tr,perumal lic agent bhavani branch 

Tr.kulandaisamy siddavaithiyar ,saravana sidda hospital ,kaliyur pirivu,sathyamamangalam,

உட்பட பல நன்பர்கள் பல்வேறு உதவிகள்

செய்தார்கள் ,

எனது நன்பர்கள் பார்த்திபன் நடராஜ் சீனிவாசன் என ஓர் பெரிய
பட்டியலே உள்ளது. அவர்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . இந்த
பதிவை படித்ததும் இந்த பதிவு அவசியமா என பல நட்புகள் கேட்கக்கூடும் .
இரத்தப்புற்று நோய் எந்த அளவு ஓர் குடும்பத்தை பாதிக்குமென
விளக்கியிருக்கிறேன் .

 இன்றைய காலத்தில் புற்றுநோய் ஒர் கொடிய எமனாக
உருவாகி வருகிறது . மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் , அடுத்த வரும்
பதிவுகளில் நோயில்லாமல் மனிதன் வாழ புற்றுநோய் பற்றியும் ஆய்வு செய்துசமர்பிக்கிறேன்.

 இந்த பதிவை படிக்கும் நட்புகள் எனது அண்ணன் G.pஇராஜனுக்காக அவர் ஆத்மா இறையருளுடன் கலக்க ஓர் நொடி வேண்டி கொள்ளுங்கள்.

. நன்றி