Saturday, August 23, 2014

ஸ்ரீ சுரராஜ் சித்தர் ஜீவசமாதி ,பாரியூர்

சிவ தேடலும் சித்தர்களை தேடிய பயணமும் இனிமையானது . தம்மை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எந்த அலட்டலும் இல்லாத ஜீவன் முக்தர்கள் பலரும் வாழ்ந்த புண்ணிய பூமி இது . நவகோடி சித்தர்கள் நம் பாரத மண்ணில் வாழ்த்தார்களென்ற குறிப்புகள் சித்தர்கள் புத்தகங்களில் காண்கிறோம் .

                   
                        ஸ்ரீசுரராஜ் சித்தர்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டியபாளையத்திலிருந்து அத்தாணி செல்லும்
வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கொண்டத்து காளியம்மன்
திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது .

 இத்திருக்கோவில் 1500
ஆண்டுகால பழமையானது என புராணங்கள் கூறுகின்றது . பழங்கால திருக்கோவிலை வடிவமைத்து ஸ்ரீ சுரராஜ் சித்தர் என்பவர் வாழ்ந்து வந்ததாராம் , மந்திர சாஸ்திரங்களில் பல அற்புதம் செய்து காட்டிய சித்தராவார் .

 இவருக்கு ஸ்ரீகொண்டத்துக்காளி அம்மன் காட்சி கொடுத்ததாக ஓர் குறிப்பு உண்டு .திருக்கோவில் அருகில் பட்டாரி என்னுமிடத்தில் ஸ்ரீ சுரராஜ் சித்தர்
ஜீவசமாதி அமைந்துள்ளது . சித்தர் பழங்காலத்தியவர் என்பதால் அவர் பற்றிய
அதிக குறிப்புகளோ வம்சவழிச்செய்திகளோ இல்லை என்பது வருத்தமே . இப்பகுதியைசேர்ந்த விபரமறிந்த நன்பர்கள் கருத்துரையில் விளக்கலாம் .

செல்லும் வழி: 


பாரியூர் கொண்டத்து காளியம் திருக்கோவில் பூக்கடை பகுதி கடைகளுக்கு
பின்புறம் ஸ்ரீ சுரராஜ் சித்தர் திருக்கோவில் சிறிய அளவில் அமைந்துள்ளது
. பூக்கடையில் சித்தர் கோவில் என கேட்டால் சொல்வார்கள் .

 சித்தர்ஜீவசமாதி அருகே நாகலிங்கமரம் பெரிய அளவில் பூத்துக்குலுங்க,
நெற்பயிர்கள் சூழ்ந்த அழகிய இடத்திலுள்ள ஸ்ரீ சுரராஜ் சித்தர் ஜீவசமாதி
காண வேண்டிய ஜீவசமாதிகளில் ஒன்று . பிரிதொரு சித்தருடன் உங்களை
சந்திக்கிறேன் .

 நன்றி

Friday, August 1, 2014

ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவில் .சத்தியமங்கலம்

அண்மையில் சத்தியமங்கலம் சென்றிருந்தேன் . எண்ணிடலங்கா சிவாலயங்கள் இருப்பினும் அவைகள் நம்மால் கண்டு செல்ல முடிவதில்லை என்றோர் வருத்தம் எப்போதும் நாம் இப்போது பகிர்கிற சத்தியமங்கலம் ஸ்ரீ பவானீஷ்வரர் ஆலயம்  தேடிப்பார்த்த போது கூட பதிவாக இல்லையே என வருத்தப்பட்டேன் .


சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கி.மீ அத்தாணி சாலையில்
பவானி ஆற்றுப்பாலத்தை கடந்ததும் அழகிய ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலைஅடையலாம் . பவானி ஆற்றுப்படுகையில் அமைந்த அழகிய சிவாலயங்களில் ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவில் ஒன்றாகும் . கிழக்கு நோக்கிய அழகிய சிவாலயஅமைப்பு மற்றும் எப்போதும் வற்றாது ஓடுகிற பவானி ஆறும் அழகுக்கு அழகுசேர்க்கிற ஒன்றாகும் .

சுயம்புவாக அன்றி ரிசிகளால் தேவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட சிவலிங்கமாகவே தோன்றுகிறது .
 அம்பிகைக்கு ஸ்ரீ சங்கரிஎன்பதே திருநாமம் .

திருக்கோவில் முகப்பில் உள்ள பஞ்சமுக விநாயகர்
சன்னதி இதுவரை காணாத சிவாலய அமைப்பிலுள்ள விநாயகராவார் . வில்வ வனமாகஇருந்த அமைப்பே பிற்காலத்தில் சிவாலயமாக மாறியுள்ளதோ என ஓர் அமைப்பு .


வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ முருகப்பெருமானின் சன்னதியும் பார்க்க
வேண்டிய அமைப்பாகும் . புதிய சிவாலயங்கள் தேடி வழிபடுபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சிறப்பு மிகு ஆலயமாகும் . வாய்ப்பு கிடைக்கையில் வந்து தரிசித்து செல்லுங்கள் .


 ஸ்ரீ சங்கரி உடனமர் பவானீஷ்வரர் அருள் பெற
விழைகிறேன் . ஓம் சிவ சிவ ஓம்