Tuesday, September 10, 2013

தேடிக்கொண்டிருக்கிறேன் நாம் தொலைத்து விட்ட ஓலைச்சுவடிகளும் ,அரிய புத்தகங்களையும்

கடினமான பணிகளுக்களுக்கிடையே ஆன்மிக தேடலில் சிவாலயங்கள் , சித்தர்கள் ஜீவசமாதி , சித்தர்களின் அரிய புத்தகங்கள் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வும் தொடர்கிறது . தற்போது ஒர் சித்த வைத்தியரிடம் அவ்வப்போது சித்த வைத்தியம் கற்று வருகிறேன் .

அவ்வகையில் பல சித்தர்களின் நூல்கள்வெளிவந்து பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன அவைகளை சேகரித்தும் வருகிறேன.;

ஓலைச்சுவடி 


நம் முன்னோர்களான சித்தர்கள் எல்லாநோய்களுக்கும் மருந்துகளை ஓலைச்சுவடிகளிலும் பல அரிய புத்தகங்களிலும்கூறி விட்டனர் . பரிபாஷைகளான பல புத்தகங்கள் மறைத்தும்
அருளிச்சென்றுவிட்டனர் .

 சில ஓலைச்சுவடிகள் புத்தகங்கள் ஆகி விட்டன . சில நூல்கள் எல்லாம் காலப்போக்கில் சிலரிடம் மட்டுமே வம்ஷா வழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது . சில ஓலைச்சுவடிகள் சில நன்பர்கள் புரியாமல்
வைத்திருக்கிறார்கள் .

சிலருடைய வீட்டில் பயன்படாமல் பழைய மரப்பெட்டியில்
உறங்கிக்கொண்டு இருக்கிறது . யாருக்கும் பயனில்லாமல் அரிய புத்தகமோ
ஒலைச்சுவடிகளோ இருப்பதாலேயே நம் சித்த மருத்துவம் அழித்து ஆங்கிலேயர்கள் மருத்தவத்தில் மோகங்கொண்டு தீர்க்க முடியாத சில வியாதிகளை எடுத்துக்காட்டாக சக்கரை வியாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க கஷ்டப்படுகிறோம் .

சிலருக்கு சித்த வைத்திய மருந்துகள் தன் சந்ததிக்கு
சொல்லாமல் மரித்தும் விட்டனர் . இப்போதைய நம் வேண்டுதல்கள் எல்லாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் . மக்கள் நலமுடன்
இருக்கவேண்டும் .

 உங்களிடமோ ,உங்கள் நன்பர்களிடோமோ பழங்கால
ஓலைச்சுவடிகளோ சித்தர்கள் பற்றியும் சித்த மருத்தும்
,மருத்துவம்பற்றியும் அரிய நூல்கள் இருக்குமாயின் எனக்கு ஓர் நகல்
அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன் .

எம்மால் முடிந்த தொகை அனுப்பி வைக்கிறேன் . அதிக பணம் அளிக்க முடியாத நிலையால் எம் நிதித்துறை பழுதடைந்துள்ளது . எமது தேடலின் பெரிய முயற்சியில் எமக்கு தேவையான சில
புத்தகங்கள் கிடைத்தால் மகிழ்வுறுவேன் .


எம் தேடலுக்கு உதவ விரும்புகிற நன்பர்கள் புத்தகங்களை என் முகவரிக்கு அனுப்பலாம் '

 ப.மாதஸ்வரன்
 த/ பெ   பழனிச்சாமி
 755 -அரசமரத்து வீதி ,
குருவரெட்டியூர் அஞ்சல் 638504,
பவானிவட்டம்
 ஈரோடு மாவட்டம் .

 மெயில் செய்யலாம் .

palamathesu@gmail.com

மற்றும்

pala.mathesu@ymail.com 

 தொடர்பு எண்    ;

9750155005சித்தர்களின் ஆசிர்வாதமிருப்பின் அரிய புத்தகங்கள் கிடைக்குமென
நம்புகிறேன் . இ மெயில் மூலமாக ஒலைச்சுவடி நகல் விபரங்கள் கிடைக்குமெனஎதிர்நோக்கி ,

நட்புடனும் ஆவலுடனும் குரு.பழ.மாதேசு.

ஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி

நீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்தில் சற்றே ஓய்வெடுத்து மறுபடியும் உற்சாகமாக கிளம்பி இருக்கிறேன்.


 இதற்கு உதவியாக பிள்ளையார் சுழியிட்டு இந்த பிளாக்கை உருவாக்கி தந்த என் மனம் கவர் நன்பர் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டியபாளையத்தில் நன்பர் வெங்கடேஷ் உதவியால் ஓர் அற்புத ஜீவசமாதியை கண்டுபெருமகிழ்வுற்றேன் .


                                 ஸ்ரீ ஆறுமுகசித்தர் ஜீவசமாதி ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது .

அதன் வழியாக சென்றால் துரையப்பா காம்பிளக்ஸ் பின்புறம் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் ஜீவசமாதியான ஸ்ரீ குகை நமச்சிவாயரை அல்லது குகநாதரை குருவாக கொண்டு பூஜித்து வந்த ஸ்ரீ ஆறுமுக சித்தர் தாந்தீரிக வல்லுனராக இருந்தவர் .

ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் இவரின் வம்சாவழிக்கோவிலாகும் . ஸ்ரீ
ஆறுமுக சித்தர் ஜீவசமாதி நெரிசல் மிக்க நகரில் அமைதியாய்
அமைந்திருக்கிறது .

எம் அனுபவத்தில் சில ஜீவசமாதிகள் கண்டுற்ற போதிலும்
அதிக ஈர்ப்புடைய மறுபடி செல்லத்தூண்டுகிற அற்புத இடம் .

 விஷேசநாட்கள் :

 பெளர்ணமி நாளில் காலைமுதல் இரவு 7.30மணி வரை
திறக்கப்பட்டிருக்கும் . அன்று விஷேச பூஜைகள் நடைபெறுகிறது . மற்ற
நாட்களில் மாலை 05.30 07.30 மணி வரை திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் ..

நம் ஆர்வமெல்லாம் ஸ்ரீ ஆறுமுகசித்தரின் ஜீவசமாதியை எல்லோரும்
கண்டுற்று வணங்கி நல்வாழ்வு பெற வேண்டுமென்பதே . மேலும் ஸ்ரீ ஆறுமுக
சித்தர் ஜீவசமாதி பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் , வம்சாவழியினர்
விபரங்கள் அனுப்பினால் கட்டுரை விருவாக்கப்படும் .

தற்காலிக விபரங்கள்அவ்வளவே , மறுபடியும் ஒர் அற்புத பதிவில் உங்களை சந்திக்கிறேன் .ஜீவசமாதியை தரிசிக்க வேண்டுவோர் விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம் .இப்பதிவை காண வந்த உங்களுக்கு ஸ்ரீ ஆறுமுக சித்தரின் அருளாசி கிடைக்கவேண்டி விரும்புகிறேன் .

 பதிவை படித்து கருத்துரையிடுக்கள் நன்றி .

ஒம்சிவ சிவ ஓம்