Sunday, June 30, 2013

ஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்கோவில் கருங்கல் பாளையம் ஈரோடு

ஸ்ரீ சுந்தராம்பிகைஉடனமர் அருள்மிகு சோழிஷ்வரர் திருக்கோவில் ஈரோட்டில்இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில்அமைந்துள்ளது. சுமார் ஈரோட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது .


 சிறப்பு : 


காசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிற திருக்கோவில் அருகே ருத்ரபூமி எனப்படுகிற பிரமீடு மயானம்அமைந்துள்ளதால் இது விஷேசமாக கருதப்படுகிறது.


 இறைவன் :      ஸ்ரீ சோழிஷ்வரர்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்காலத்திய லிங்கமாகும்

 இறைவி :  ஸ்ரீசுந்தராம்பிகை  ஈசனின் முகத்தில் தோன்றிய கிரகங்கள் இந்திரன்,அக்னி,எமன் .நிருருதி வருணன் வாயு குபேரன் , ஈசானன் ,சூரியன்,சந்திரன் பத்து திக்கு பாலகர்கள்களுக்கும் தீபம் வைத்து வழிபட்டால்முன்வினை தோஷம் , ஊழ்வினை, வம்சவிருத்தி , ஆகியவை நீங்கி நல் வாழ்வுபெறுவது உறுதியாகும் .


 அமாவாசை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகுந்த விஷேசமாகும் . சிவன் அல்லாது ,இங்கே ஸ்ரீ லட்சுமி நாராயணன் தனிச்சன்னதியில் அஷ்ட லட்சுமிகளுடன் வீற்றிருக்கிறார் . ஸ்ரீகஜலட்சுமி தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் , நவகிரகங்கள் ,தட்சிணாமூர்த்தி , பெரிய விநாயகர் ,நாயன்மார்கள் , என சிவாலயத்தின்
அமைப்பில் ஒருங்கே அமையப்பெற்றது .

ஸ்தலமரம் : மாமரம் 

இந்த மரத்தில் ஒருபகுதி கற்பூர சுவையுடனும் மறுபுறம் இனிப்புச்சுவையும் உடையதுகாணற்கரியது.

திருக்கோவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வில் இருப்பதால் யாரால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என அறிய இயலாவிடினும் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது . திருக்கோவில் சுற்றி வில்வம் உட்பட பலஆன்மீக மரங்கள் நிறைந்துள்ளது .


திருக்கோவில் அமைப்பு : 


திருக்கோவில் மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார் .எதிரே வடக்கிருந்து தெற்காக காவிரி ஆறு ஓடுகிறது. திருக்கோவில் வலப்புறம் மயானம் என்னும்  சுடுகாடு அமைந்துள்ளது. காவிரி ஆற்றிப்படுகையில்
பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஷ்வரருக்கு அடுத்து காவிரியின் படுகையில்
அமைந்த சிவாலயமாகும் .

 திருக்கோவில் முகப்பில் கொடிமரம் ஸ்ரீ
நந்தியம்பெருமான் , மூலவரான சிவலிங்கமாகி ஸ்ரீ சோழிஷ்வரர்
அருள்பாலிக்கிறார் . ஸ்ரீ சுந்தராம்பிகை தெற்கு பார்த்து இருக்கிறார் .
இது ஓர் விஷேச அமைப்பாகும் .

பூஜைகள் : 

காலை 6 .00 முதல் 11.00வரையிலும் மாலை 4.00 முதல் 7. 00 மணி வரையிலும் திறக்கப்பட்டு இருக்கும் . சோமவாரமான திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

முடிவுரை :காவிரிக்கரையில் எழில் மிகுந்த சூழலில் அமைந்த சிவாலயமாகும் . ஏதேனும்
ஓர் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள் .

Friday, June 28, 2013

ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திருச்சிராப்பள்ளி


        SRIRANGAM SRI RANGANATHA SWAMY TEMPLE  TRICHY

" நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப்
 பால்விரிந்து அகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் ,
 பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த,
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் ,
 திருவுமர் மார்பன் கிடந்த வண்ணம் "
                                                                                                                 -சிலப்பதிகாரம்.

 திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் புகழ் பெற்ற 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி தமிழகத்தின்
மத்திய பகுதியான ஸ்ரீ ரங்கத்திலிருந்து அருள்பாலிக்கிறார் .
மகாவிஷ்ணுவிக்கென அமைக்கபட்டுள்ள திவ்யதேச திருக்கோவில்களில்
முதன்மையானதாகும் .

திருக்கோவில் உருவான விதம் :

திருப்பாற்கடலில்
தோன்றிய திருவரங்கம் கோவில் விமானத்தை பிரம்மன் பல காலம் பூஜை செய்துவந்தார் . பின் இப்பூசையை சூரியன் அதன் பின் சூரிய வம்சத்தில் வந்த
இட்சுவாகு மன்னர் இந்த விமானத்தைஅயோத்திக்குவழிபடகொண்டுவந்தான்.

பின் இக்குலத்தில் பெருமாளின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமர் தன்
முடிசூட்டு விழாவிற்கு வந்த விபிஷணன் பக்திகண்டு அவர்க்கு அளித்தார் .
விழா முடித்து காவிரிக்கரை வழியே இலங்கைக்கு பயணித்த களைப்பினால்
காவிரிக்கரையில் விமானத்தை இறக்கி வைக்க அவ்விமானம் அங்கேயே நிலை கொண்டது '.

பின் பலமுறை முயற்சித்தும் விமானத்தை தூக்கமுடியாமல் கவலைப்பட
இதைக்கேள்விப்பட்ட விபிஷணர்க்கு ஆறுதல் சொல்லி அரங்கநாதர்
காவிரிக்கரையில் தங்கவே விரும்புகிறார். அதனால் ஸ்ரீ ரங்கநாதர்க்கு
திருக்கோவில் எழுப்பலாம் என்று தமது கனவைக்கூற, விபிஷ்ணர் விருப்பம்
போலவே உன் நாடான தென்திசையில் இலங்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதிகூறினார் .

முதலில் தர்மவர்ம சோழனால் அவ்விமானத்தை சுற்றி திருக்கோவில்
எழுப்பபட்டது . பின்காலத்தில் காவிரி வெள்ளத்தினால் திருக்கோவில்
அடித்துச்செல்ல தர்மவர்ம சோழர் பரம்பரையில் வந்த கிள்ளிவளவன் ஒரு கிளியை பார்க்க மகாவிஷ்ணுவின் ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் இருந்த இடத்தை காட்டியது.

அங்கு திருக்கோவில் கட்ட ஆரம்பிக்க பின் கனவில் இறைவனே காட்சி தந்து
தற்போது ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைவிடத்தை சுட்டிக்காட்டியதாக வரலாறு. சோழர்களால் கட்டப்பெற்ற அழகிய ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் பூலோகவைகுண்டம் என அழைக்கபடுகிறது.

 மூலவர் :ஸ்ரீ அரங்கநாதஸ்சுவாமி


திருக்கோவிலில் ஸ்ரீ அரங்கநாதர் பள்ளி கொண்ட உருவமாய் ஸ்ரீ
மகாலட்சுமியுடன் ஆதிசேடன் படுக்கையில் திருபாற்கடலில் காட்சி
அளிப்பதைபோல் அருள்பாலிக்கிறார் .

 திருக்கோவில் வரலாறு :


1000ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம்
நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில்
ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. 156 ஏக்கர் பரப்பில் அமைந்த
மிகப்பெரிய திருக்கோவிலாகும் .இந்தியாவிலேயே 7 பிரகாரங்களை கொண்ட
திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் மட்டுமே என்ற பெருமையை பெற்றுள்ளது .
கோபுரங்கள் 21 ஆகும் தீர்த்தங்கள் 9 இருக்கின்றன.
s
 ஸ்தல விருட்சம்:புன்னை மரம்

 மங்களாசாசனம் : ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற
திருக்கோவிலாகும் .

ராஜகோபுரத்தின் உயரம் 236 அடியாகும் .ஸ்ரீ தொண்டாரடிப்
பொடி ஆழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் . ஸ்ரீ
ராமனுஜர் இங்கு வாழ்ந்து முக்தியடைந்த சான்றோர்களில் ஒருவராவார் .


முடிவுரை :

 காலை 6.15 மணிக்கு விஷேசமான பூஜையாக குதிரை ,பசு, யானையுடன்
துவங்குகிறது ஸ்ரீ ரங்கத்தில் இப்பூஜை விஷேசமானது . கடந்த வாரத்தில் ஸ்ரீ
ரங்கப்பெருமானை இந்த பூஜையில் கலந்து கொண்டது மகிழ்வான ஓர் நிகழ்வு .
வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு முறை வணங்கிய அதே அருமையான நினைவுகளுடன் இறைவழிபாடு செய்தேன் . ஸ்ரீ ரங்கப்பெருமான் பற்றிய இப்பதிவில் பகிர்ந்துசிறிதளவே !

 மிகப்பெரிய சூட்சமங்கள் கொண்ட திருக்கோவில் தம்மை
நம்பியவர்கள் வாழ்வில் உயர்த்துகின்ற ஸ்ரீ ரங்கநாத பெருமான I வந்துவணங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிடுங்கள் .

நன்றி

Friday, June 14, 2013

பாம்பாட்டி சித்தரின் சித்துகள்

பாம்பாட்டி சித்தர் முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .பாம்பாட்டி
சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்.

கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ
சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி
கீழே படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில்
அமைந்துள்ளது . இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி
என்றும் கூறுவது ஆய்வுக்குரியது .

 பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு . மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும் அதன் வழியே பாம்பாட்டி தினம் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.

 சர்ப்ப ரூபத்தில் சித்தர் நடமாடுவதாகவும் அந்த சர்ப்பத்திற்கு சில பக்தர்கள்
பால் இட்டு பாதுகாப்பதாகவும் அந்த சார்பத்தையே பாம்பாட்டி சித்தராக
வழிபடுவோரும் உண்டு. பாம்பாட்டி சித்தர் பாடல் , சித்தாரூடம் நூலை
எழுதியவராவார் .மனிதர்களின் மனதை பாம்பாக ஒப்பிட்டு பாடல்கள் புனைந்தவர். குண்டலினியோகம் , கூடு விட்டு கூடு பாயும் சித்தி பல அஷ்டமாசித்துக்கள் அறிந்தவர் .

இளமைக்காலம் :

பாம்பாட்டி சித்தர் இளமைக்காலத்தில் பாம்பு பிடிப்பது, விஷமெடுப்பது,
என பல காடுகளில் திரிந்து தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலே ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.

இரவு நிசியில் அடந்த காட்டில் பாம்புக்காக காத்திருந்த பாம்பாட்டி சித்தருக்கு திடிரென வெளிச்சத்துடன் தெய்வீக வாசனையுடன் ஒருவர் நிற்க..!

 ஐயா தாங்கள் யார் என வேண்ட?

பாம்பாட்டியாரே நான் சட்டை முனி சித்தர் தாங்கள் இந்த காட்டில் இருட்டில் எதை தேடுகிறீர்கள் எனக்கேட்க !அதற்கு பாம்பாட்டியாரோ ஐயா நான் நவரத்தின மாணிக்ககல் உடைய பாம்பை தேடி
வந்தேன் எனக்கூற சட்டை முனி சித்தர் சிரித்தார் .

'' அதை விடவிலைமதிப்புடைய பாம்பு குண்டலினி சக்தி என்ற பெயரில் உன் உடலில் ஓடுகிறது, அதைக் கண்டுபிடித்தாயா?

 அப்படியா ?

என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி

''எமக்கு அதை காண அருள்வீரா''

 எனக்கேட்க , குண்டலினி ,கூடு விட்டு கூடுபாய்தல் ,பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி மறைந்தார் சட்டைமுனி சித்தர் .தன் கடுமையான பயிற்சியால் பணத்தை தேடுவதை விட்டொழிந்து உலகில் யோகங்களை தேடி வெற்றிகண்டார் .பல சித்துகளை அற்புதங்களை நிகழ்தினார் . இவரை வணங்குபவர்களுக்கு ராகு கேது மற்றும்
சர்ப்பதோஷ நிவர்த்தியாகும்

. முடிவரை:

 மருதமலையில் யோக சமாதியானார் பாம்பாட்டி சித்தர் மற்றும் 7000 கூற்றுப்படி இவர் ஜீவசமாதியானது மருதமலையே என உணர்த்துகிறது . ஒரே சித்தர் 8 இடங்கள் வரை ஜீவசமாதி ஆகமுடியும் என்ற கருத்திற்கேற்ப,,

துவாரகை , விருத்தாச்சலம் (பழமலை) சங்கரன் கோவில் மேற்கு கோபுர வாசல்அருகில் புளியாங்குடி செல்லும் வழியில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதிபீடம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியாகி உள்ளார் என்ற கருத்தை ஆய்வு செய்துஉணர வேண்டி உள்ளது .

 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கு இறைசக்தி போல் சித்தர்களையும் மனமுருக வேண்டினால் வந்து நம் குறை தீர்ப்பார்கள் . ஸ்ரீபாம்பாட்டி சித்தரின் பாடல்களுடன் பின் வரும் பதிவில் பார்ப்போம்..

நன்றிகளாயிரம்

Sunday, June 9, 2013

மருதமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோவில்

       
sri subramaniyar thirukovil maruthamalai coimbatore  

 நீண்ட நாட்களாகவே கோவையில் உள்ள பழமையான முருகர் கோவிலுக்கு சென்றுபதிவிட வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இதற்கு முன்பல முறை சென்று இருந்தாலும் தற்போது புதிதாய் பொலிவாய் அழகுபடுத்தியமருதமலை திருக்கோவில் காலங்கள் பல கடந்த அற்புதம்..  .

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுமார் 700அடி உயரத்தில் மலைக்குன்றின் மையத்தில்அமைந்த திருக்கோவிலாகும் . கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற முருகர்கோவில்களில் முதன்மையானது. கோவை நகருக்கு வடமேற்கு எல்லையாக மருதமலை
அமைந்துள்ளது.

 கோவையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளமலைமேல் அமர்ந்திருக்கிற மருதமலை முருகப்பெருமான் ஆலயம் . பாரதியார்பல்கலைகழகம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் , சட்டக்கல்லூரி என  மருதமலை செல்லும் ரோடு முக்கியமான ஒன்றாகும் .

 அடிவாரத்தில் இறங்கி நடக்க அடிவார முன்மண்டபத்தில் இருந்து இடது புறம் தென்கிழக்கேஅமையப்பெற்றுள்ள வள்ளியம்மன் ஆலயம் இங்கு வள்ளியம்மன் கிழக்குமுகமாகஅருள்பாலிக்கிறார் , அதன்பின்னாக மலைப்பகுதியின் முகப்பு முன்மண்டபம் அமைந்துள்ளது .பின் நடந்து சென்றால் எங்குமில்லாத விஷேசமாக தான் தோன்றி
விநாயகர் சுயம்பு மூர்த்தியாக படிக்கட்டுப்பாதையில் சற்று தூரத்தில்
அமர்ந்து அருள்பாலிக்கிறார் . பழங்காலத்தில் கொங்கு நாடு 24 பிரிவுகளாக
பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஓர் பிரிவான ஆறைநாட்டின் எல்லையாக மருதமலைஇருந்தது சுமார் 1000ஆண்டுகள் வரலாறு ..

.படிக்கட்டுப்பாதையில் சான்டோ சின்னப்ப தேவரால் சில இளைப்பாறும்
மண்டபங்கள் கடந்து சென்றால் இடும்பர் சன்னதியை அடைந்து வணங்கி நின்றால் திருக்கோவில் அருகே வந்து விட்ட உணர்வு நம்மில் எழுகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 840 படிகள் உள்ளன..

 ஆங்காங்கே இருளர்கள் மலைவாழ் மக்களின்குடியிருப்புகள் கடந்து மருதமலை திருக்கோவில் முகப்பில் உள்ள

 "பஞ்சவிருட்ஷ விநாயகர் " சன்னதி . 


எங்கும் இல்லாத இந்த விநாயகரின் பின்புறம்
அரசமரம்,ஆலமரம் ,வேம்பு, வக்கணை ,நுணா ஆகிய 5 மரங்கள் இருப்பது மிகுந்தவிஷேச அமைப்பாகும் ..அதனால் பஞ்சபூத விருட்சம் என இம்மரங்கள்
அழைக்கப்படுகிறது . இவ்விடம் அரசுமரமேடை என்றும் கூறப்படுகிறது ,
சுமார் 30நிமிடங்களில் திருக்கோவிலை நடந்து சென்று விடலாம் .
நடக்கமுடியாதவர்களாக அறங்காவலர் குழுவால் பஸ்கள் இயக்கப்படுகிறது


திருக்கோவில் அமைப்பு : 


 மருதமலை கிழக்கு பார்த்த திருக்கோவிலாகும்
ராஜகோபுரம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு அழகாய் விரிவாக்கம் செய்து
படிக்கட்டுகள் அழகாக அமைக்கப்படுள்ளது. கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால்ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி அழகின் உருவேஅருள்பாலிக்கிறார் .

 திருக்கோவில் மூலஸ்தானத்திற்கும் பாம்பாட்டி
சித்தர் குகைக்கும் வழி இருப்பதாகவும் அதில் சித்தர் தினமும் இறைவனை
வணங்கி வருவதாக ஐதீகம் .வேண்டுவார் வேண்டும் வரம் அருளும்
முருகப்பெருமான் நின்ற நிலையில் கோவை மக்களின் துயர்
துடைத்துக்கொண்டிருக்கிறார்.

பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வந்து அருள் பெருகின்றனர் . மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியை வணங்கிபின் வெளியே வந்தால் ஸ்ரீ பட்டீஷ்வரர் சன்னதி அமைந்துள்ளது . இங்குஇருந்து சற்று தூரத்தில் கீழ்நோக்கி நடந்தால் பாம்பாட்டி சித்தரின் தவக்குகை திருச்சன்னதி அமைந்துள்ளது அடுத்த பதிவில் பாம்பாட்டி சித்தர்வருவார் .

 பாம்பாட்டி சித்தர் குகைக்கு செல்லும் வழியில் கன்னிமார்
திருக்கோவிலும் அமையப்பெற்றுள்ளது .சுற்றி வர மரகதாம்பிகை சன்னதியைதரிசிக்கலாம் . அதன்பின் நவகிரகம் , சிறிய ஸ்ரீ வரதராஜபெருமாள்
சன்னதியும் வணங்கவும் , அழகின் உருவமும் பேரமைதியும் கொண்டதால்
கோவைமாவட்ட ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாக மருதமலை அமைந்துள்ளது.


பாடல் பெற்ற ஸ்தலம் : 


ஸ்ரீ அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்
.ஸ்ரீ கச்சியப்ப முனிவர் , ஸ்ரீமத்குமரகுருதாச சாமிகள் ஆகியோரால் பாடல்
பெற்ற ஸ்தலமாகும் .

மருதமலை :


 மருதமரங்கள் நிறைந்த காரணத்தால் மருதமலை
எனப் பெயர்காரணம் வந்ததாக கருதப்படுகிறது . ஸ்ரீ சுப்பிரமணியர்க்கு
இங்கே மருதமலையான் , மருதாசலம் ,மருதன் என்ற திருநாமங்கள் உண்டு . கோவைமாவட்ட மக்கள் பலர்க்கும் மருதாசலம் மருதன் பெயர் உண்டு என்பதிலேயேமுருகரின் அருட்பார்வை புரியும் .

அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டிஸ்தலத்தில் மருதமலை பற்றிய கல்வெட்டுகள் கி.பி 1150ன் கல்வெட்டுகள்
இருப்பதைக்காணலாம் .


தீர்த்தங்கள் : 


பழங்காலத்தில் மருத தீர்த்தம் ,கந்த தீர்த்தம் , ஆகிய
தீர்த்தங்கள் இருந்ததாக காணப்படுகிறது. மருதமலையில் பல மூலிகைகள்
இருந்ததாம் , இரவில் ஒளிரும் ஜோதிபுற்கள் ,நாகதாளி ,நாக நந்தா ஆகியன
பழங்காலத்திருந்ததாம்.

 ஸ்தல விருட்ஷம் : 


மருதமரம்

விஷேச நாட்கள் : 


எல்லா நாட்களிலிம் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது .
சித்திரை வருடப்பிறப்பு, வைகாசிவிசாகம் . சூரசம்ஹாரத்திருவிழா ,
கார்த்திகை தீபவிழா, தைப்பூச நாட்களில் மிகுந்த விஷேச நாட்களாகும் .


முடிவுரை : 


கொங்கு நாட்டில் மருதமலை தரிசிக்க வேண்டிய ஆலயம் .
வாய்ப்பு கிடைக்கையில் சென்று ஸ்ரீ சுப்பிரமணியரையும் பாம்பாட்டி சித்தரை
வணங்கி விட்டு வாருங்கள் . அவர் உங்கள் இன்னல்களை தீர்ப்பார் . நன்றிகள்
பல

Tuesday, June 4, 2013

பிறந்த நட்சத்திரங்களுக்கேற்ற விருட்சப்பரிகாரம்

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் விருட்ஷசாஸ்திரம் என்ற நூலில் நாம்
பிறந்த நட்சத்திரங்களையும் அதற்கு ஏற்றார் போல் நாம் நடவேண்டிய
மரங்களையும் வகைப்படுத்தி உள்ளனர் .

 மரங்கள் விலை மதிப்பற்றவை.அவைகள் வெளியிடும் ஆக்சிஜன மனிதனின் சுவாசத்திற்கு பயன்படுகிறது அப்படியெனில் அந்த மரங்களை நடுவது எவ்வளவு உயர்வான புண்ணியம் தரும் ஆகவே மரம் நடுவோம்..சரி நம் நட்சத்திரத்திற்கேற்ற விருட்ஷத்தின் வகையினை பார்ப்போம் .


1.அசுவினி- எட்டி
2. பரணி -நெல்லி
3.கார்த்திகை -அத்தி
4.ரோகிணி -நாவல்
5.மிருகசீரிடம் -கருங்காலி
6. திருவாதிரை -செங்கருங்காலி
7. புனர்பூசம்-மூங்கில்
8.பூசம் -அரசு
9.ஆயில்யம் -புன்னை
10.மகம் -ஆலமரம்
11.பூரம்-புரசமரம் (பலாசு )
12.உத்திராடம்-அலரி இலந்தை
13.அஸ்தம் -அத்தி
14.சித்திரை -வில்வம்
15.சுவாதி -மருது
16.விசாகம் -விளாமரம்
17.அனுசம்-மகிழம்
18.கேட்டை - பிராய்
19.மூலம் -மாமரம்
20.பூராடம் -வஞ்சி
21.உத்திரம் -பலா
22.திருவோணம் -எருக்கு
23. அவிட்டம் -வன்னி
24.சதயம்--கடம்புமரம்
25.பூரட்டாதி -மாமரம்

26.உத்திரட்டாதி=   veapamaram

27. ரேவதி -இலுப்பை
ஆகியனவாகும் .

நட்சத்திரம் அறியாதவர்கள் வேம்பு நடலாம் அல்லது மழையை
பூமியை நோக்கி இழுக்கிற அத்தி,ஆலமரம் ,அரசமரங்களை நட்டு பராமரியுங்கள் .சமுக நலமும் அடுத்தவர்களுக்காக நாம்
 செய்யும் அன்பே ஆகும் .
அன்பே சிவம்
. நன்றி

Monday, June 3, 2013

ஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் .தென் காளகஸ்தி ,பட்டைய காளிபாளையம் ,மராப்பம்பாளையம்

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் புகழும் பழமையும் வாய்ந்த
சிவாலயங்களில் "தென் காளகஸ்தி " என்ற சிறப்புடன் விளங்குகின்ற
திருக்கோவிலாகும் . பவானி வட்டம் பட்டையகாளிபாளையம் என்ற அழகிய ஊரில்திருக்கோவில் அமைந்துள்ளது. செல்லும் வழி :


ஈரோட்டில் இருந்து கோபி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீட்டர் கவுந்தப்பாடிக்கு அடுத்த தாக வரும் மாரப்பம் பாளையம் பிரிவில் இருந்து இடப்பக்கம் திரும்பி சற்று தூரம் நடந்தால் பட்டைய காளிபாளையம் என்ற ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது ..

சிவபெருமான் இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . ஆந்திராவில்
உள்ள காளகஸ்திரி கோவிலுக்கு இணையாக போற்றப்படுகிற இந்த
திருக்களாத்தீஷ்வரர் திருக்கோவில் ராகு கேது பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.


மூலவர் : 


ஸ்ரீ திருக்காளத்திஸ்வரர்

 அம்பாள் : 


ஸ்ரீஞானப்பூங்கோதை

திருக்கோவில் வளாகம் ஸ்ரீ கண்ணப்பநாயனார் மடாலயம் என
சிறப்பிக்கப்படுகிறது .

 திருக்கோவில் சிறப்புகள் : 


18 சித்தர்களில்  ஒருவரான சட்டை முனி சித்தர் அவதரித்த ஸ்தலமாக கூறப்படுகிறது .காளகஸ்தியில் இருந்து வந்த சிவலிங்கமாகும் . திருக்காளகஸ்தி போலவே மூலவர்  சிவபெருமானுக்கு முன்பாக வராக சிலை  அமைந்திருப்பது மிகுந்த விஷேசமாகும் .

வாயு ஸ்தலமாக போற்றப்படுகிறது . மூலவர்க்கு பின்னால் உள்ள 27 விளக்கு
கொண்ட ஆவுடை அமைப்பு இங்கு காணப்படுவதும் விஷேசமான ஒன்றாகும்
,உச்சிக்காற்றில் மைய விளக்கு ஆடாது அசையாது காணப்படுவதும்
விஷேசமானதாகும் .


 ஸ்ரீ கண்ணப்பநாயனார் : 


திருக்கோவிலில் ஸ்ரீ கண்ணப்பநாயனாருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பெரிய புராணம் கூறுகிற 63 நாயன்மார்களில் கண்ணப்பநாயனாரும் ஒருவராவார் . இவருக்கு சிவன் காளகஸ்தியில் காட்சி கொடுத்து புராண வரலாறாகும் .

ஆந்திரமாநிலத்த ஆண்ட வேடுவர் குல அரசர்கள் திருக்கச்சராயர், பூலவராயர், காவலராயர் வழி வந்தவேடுவர் குல பெருமக்கள் பவானி பகுதியில் குடிவந்திருந்தனர் .

அப்பரம்பரையில் வந்த ஆன்மீக பெருமக்கள் சுமார் 900 வருடங்களுக்கு முன்
ஓடத்துறை கிராமம் பட்டையக்காளி பாளையம் ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் திருக்கோவில் எழுப்பியும் ,ஸ்ரீ கண்ணப்ப நாயனார் மடத்தினை வழிபட்டும் உருவாக்கிய அற்புத சிவாலயமாகும் . திருக்கோவில் வளாகத்தில் 15,16 ஆம் நூற்றாண்டுகல்வெட்டு அமைந்துள்ளது குறிப்பித்தக்கது .


பூஜை நேரம் : 


தினமும் ஒருகால பூஜை காலை 7 மணியில் 8 மணிவரை நடைபெறுகிறது.
அம்மாவசை.பெளர்ணமி,பிரதோஷ நாட்களில் விஷேசமாக நடைபெறுகிறது.

 வழிபாட்டின்பலன் :


 திருக்காளத்தீஷ்வரரை 63 நெய் தீபமிட்டு வணங்குபவர்களுக்கு
திருமணத்தடை, புத்திபாக்கியமின்மை ,காலசர்ப்ப தோஷம் நீங்கி ,ராகு கேது
தோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டுமென்பது ஐதீகம் .

                                    திருக்கோவில் அமைப்பு :எல்லா சிவாலயங்களைப் போலவே முகப்பில் அரசமரத்தடி விநாயகர் ,கொடிமரம்,பின்  மூலவர் ஸ்ரீ திருக்காளத்தீசரை வணங்கினால் பின் தனிச்சன்னதியாக ஸ்ரீ ஞானப்பூங்கோதை ,வணங்கி திருக்கோவில் சுற்றி வருகையில் ஸ்ரீகணபதி,ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீ துர்க்கை , ஸ்ரீசண்டிகேஷ்வரர் ,நவகிரகங்கள் , ஸ்ரீ காலபைரவர் என சிவாயத்தின் ஆகம விதிகளுடன் அழகேஅமைந்துள்ளது.


முடிவுரை :


 கொங்கு நாட்டின் புகழ் மிக்க ஆலயங்கள் உண்டு. அவற்றில் சில நுட்பமான கண்ணுக்கு தெரியாத சிவாலயங்கள் உள்ளன . அவ்வகையில்
காண வேண்டிய ஆலயம். பழங்காலத் தொடர்புடைய பழமையான ஆலயம் . கண்டு ரசித்து வணங்கி கருத்துரையிடுங்கள் . ஓம் சிவ சிவ ஓம் .நன்றி