Friday, May 24, 2013

தேர்வு என்பது முடிவல்ல

அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு பலருக்கு மகிழ்ச்சியை
அளித்தாலும்,செய்தித் தாள்களில் ஆங்காங்கே தேர்வு முடிவு வெளியானதும்
சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்திற்குரியது. அதற்கு சில காரணங்களை ஆய்வு செய்வோம்

 1. பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு :


படிக்கின்ற எல்லா மாணவர்களும் டாக்டர் ,என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆவல்எல்லா பெற்றோர்களுக்கும் இருந்தாலும் ,அது குழந்தைகளின் படிக்கும்
திறனைப் பொறுத்ததே , வெறுமனே படி படி என வலியுறுத்தாமல,

அதிகபட்சம் மதிப்பெண் எடுக்க தேவையான வழிவகுத்தல்,போன்ற வற்றைச்செய்யலாம் . ஆகஅதிகபட்ச பெற்றோரின் எதிர்பார்ப்பு மதிப்பெண் வாங்காத நிலையில்ஏமாற்றமாவது குழந்தையின் எதிர்காலத்தை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது.


2.சுயமாக வளர விடுங்கள் : 


பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் டாக்டர்
,என்ஜினியர் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர் . ஆனால்
மாணவ,மாணவிகளின் விருப்பம் என்னவாக தான் விரும்புகிறார்கள் என்பதைப் கண்டு அதே படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கை வைப்பது நல்லது


3.       தட்டிக்கொடுங்கள் :


 குறைந்த மதிப்பெண்கள் காலண்டு அரையாண்டு தேர்வில்
எடுத்தாலும் திட்டாமல் நல்ல மதிப்பெண் எடுக்க தட்டிக்கொடுங்கள் . அது
மதிப்பெண்கள் எடுக்க உதவும் .

4..சின்ன சின்ன பரிசுகள் : 

நல்ல மதிப்பெண்எடுத்து வருகின்ற குழந்தைகளுக்கு 
சின்ன சின்ன பரிசுகள் கொடுங்கள் .


5..விளையாட்டு : 


தினமும் மாணவர்கள் சற்று நேரம் விளையாட விடுங்கள் அது
மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்

6.. இறை வழிபாடு :


 அவ்வப்போது மனதை
ரிலாக்ஸ் செய்ய திருக்கோவில் கூட்டிச்செல்லுங்கள் . தன்னம்பிக்கையுடைய
குழந்தையாக உருவாக்குங்கள் .

 மாணவர்களே , 


10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு என்பது 1வருடத்திய தவம் போல அது உங்கள் எதிர்கால வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றாலும் கூட மதிப்பெண் குறைவதால் தற்கொலைக்கு முயற்சிப்பது நமது குடும்பத்தை வெகுவாக பாதிக்கும் . படிக்காத எத்தனையோ பேர் மிகப்பெரிய சாதனையாளர் ஆகி இருக்கிறார்கள் .வாழ்க்கை பயணம் நீண்ட தொலைவு அதில் தேர்வு என்பது முடிவாகாது ..

 இன்றைய உலகின் முதல் பணக்காரர்

பில்கேட்ஸ் 


கூறிய இந்த பொன் வரியை வாசியுங்கள்

 " என்னுடன் படித்த நிறையபடிப்பாளிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மைக்ரோ சாப்ட்நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .மிதமாக படித்த நானோ மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலாளியாக இருக்கிறேன் "

ஆக தேர்வும் படிப்பும் அறிவையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளத்தானே
தவிர அவையே வாழ்வின் முடிவாகது .

தற்கொலைகளை தவிர்த்து

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் . 


நன்றி

Thursday, May 23, 2013

திருமூலரின் எளிமையான வாழ்வியல் வழி

திருமூலர் என்கிற மகா சித்தர் தன் திருமந்திரத்தில் நான்கு வரிகளில்
மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும்,அவற்றை பின் தொடர்பவர்களுக்கு வாழ்வில்
 துன்பங்கள் நீங்கி இன்பம் கிட்டும் என்பதில் ஐய்யமில்லை.

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை,
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

 சரி திருமூலர் என்ன சொல்ல வருகிறார் ?

''யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை'' 


என்றால் கடவுளை வணங்க செல்லும்
ஏதேனும் இலையை கொண்டு செல்லுங்கள்..
 சிவனுக்கு வில்வம் பெருமாளுக்கு துளசி
மாரியம்மன் வேம்பு விநாயகருக்கு அருகம்புல்

அந்த கடவுளுக்குரிய இலைகளை
பூஜைக்காக கொண்டு செல்லுங்கள் என்கிறார் .

இரண்டாவது வரியில்

 "யாவர்க்கு மாம் பசுவிற்கொரு வாயுறை" 


 உலகிலுள்ள தெய்வங்கள் எல்லாம் பசுவின் உடலில்
ஐக்கியமாகியுள்ளது .பல திருக்கோவில்களில் பசுமாட்டிற்கு கோ பூஜை செய்தபின்னரே மூலவர்க்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

 அப்படி சிறப்பு வாய்ந்த பசு மாடு காணும் போது பழம் அல்லது புல் அல்லது அகத்திக்கீரை அளிப்பதுமிகுந்த நன்மையை அளிக்கும் .

மூன்றாவது வரி

"யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி "


 நாம் சாப்பிடும் போது காகம் ,நாய் ,எறும்பு போன்ற
உயிர்களுக்கு உணவிடுதல் .

நான்காவது வரியில்

 " யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரைதானே"


நன்பர்களிடமோ ,புதிய நபர் ,மற்றும் பிறரிடம் பேசுகையில்
இன்சொல் பேசுங்கள் ,இறைவனைப்பற்றியோ , சமுகத்திற்கு நல்லன தருவதைப்பற்றியோபேசுங்கள் . முடிந்தவரை இப்பாடலின் பொருளை வாழ்வில் பயன்படுத்துங்கள்...

இறைவன் உங்களுடன் இருப்பார். நன்றி

Wednesday, May 15, 2013

ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில்,குட்டை தயிர்பாளையம், சித்தோடு

வைணவக்கடவுள்களில் ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானுக்கென தனி இடமுண்டு.தமிழகத்தில்பல ஆஞ்சநேயர் திருக்கோவில் இருப்பினும் தனிச்சிறப்பு கொண்டதாக சித்தோட்டின் அருகே குட்டை தயிர்பாளையத்தில் இருந்து ஸ்ரீ பக்தஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 திருக்கோவில் செல்ல வழி:

ஈரோட்டில்இருந்து கோபி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும், சித்தோட்டில்  இருந்து 4 கி.மீ தொலைவிலும் திருக்கோவில் அமைந்துள்ளது.

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கிய அமைப்பாகும் . திருக்கோவில்
இடப்புறம் சத்தியில் இருந்து ஈரோடு செல்லும் மாநில நெடுஞ்சாலையும்
வலப்புறம் பெரிய நீர்க்குட்டையும் அமைந்துள்ளது.குளிர்சியான இடத்தில்
நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுடன் அழகிய பசுமையான மரங்கள் சூழ
திருக்கோவில் அமைந்துள்ளது .

 மூலவர் :

ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் நின்றநிலையில் வணங்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் .பழங்கால ஆஞ்சநேயர்   திருவுருவமாக திருக்கோவில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் : இலந்தை மரம்

வாரபூஜை:

 திருக்கோவில் தினமும் திறந்திருந்தாலும் சனிக்கிழமை கூட்டம்
அலைமோதுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்ற வைணவ விஷேசநாட்களில் கூட்டம்அலைமோதுகிறது .

திருக்கோவில் சிறப்பு :

பழமையான திருக்கோவில் விஷேச
நாட்களில் பெருமாள் கருடனின் தரிசனம் இத்திருக்கோவிலின் மேலே காணலாம் .


முடிவுரை :

திருக்கோவில் சிறிய அளவே ஆயினும் சக்தி பெரியது. சாந்தமாய்
குளிர்ச்சியாய் அமைந்து அருள்பாலிக்கிற ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானை வந்து
வணங்கி அருள் பெற்றுச்செல்லுங்கள் . நன்றி

Sunday, May 12, 2013

ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் கந்தமலை மாரப்பம்பாளையம்

குன்று தோறும் குமரன் உறையும் இடமென என சான்றோர்களின் கூற்றிற்கு ஏற்ப   ஸ்ரீ முருகப்பெருமானின் பழமையான ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காளிங்கராயன் பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் 4 வது கி.மீட்டரில் மாரப்பம்பாளையம் அருகே அமைந்த பழங்கால மலைக்கோவிலாகும்.


இங்கு முருகப்பெருமான் பழனி ஆண்டவராக அருள்பாளிக்கிறார் . திருக்கோவில் ஊரைத்தள்ளி கரடு முரடான மலையில் அமைந்திருக்கிறது. திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேலே சுமார் 150 கற்களால் அடிக்கி வைக்கப்பட்டபாறையில் நடந்து செல்லவேண்டும் .

 மலையெங்கிலும் ஊஞ்சல் மரங்களால் நிரம்பிஇருக்கிறது. கீழே அழகிய பாழியும் சற்றே வறட்சியை பிரதிபலிக்கிறது.திருக்கோவில் மலைமேலே கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ பழனி ஆண்டவர்அருள்பாலிக்கிறார் .நின்ற திருமேனில் ஸ்ரீ முருகப்பெருமான்அருள்பாலிக்கிறார்.


வாரபூஜை :

 வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் நடைபெறுகிறது .வளர்பிறை
சஷ்டியில்  இங்கு   விஷேசமாக  பூஜை  நடைபெறுகிறது.

 முருகப்பெருமானுக்குரியநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12 முதல் 2க்குள் திருக்கோவில்இப்பகுதியை சேர்ந்த பூசாரியால் திறக்கப்படும் .

 திருக்கோவில் சிறப்பு:

எல்லா கோவில்களில்களைப் போல் இல்லாமல் மரத்தால் செய்யப்பட்ட
கோபுரகலசத்தை பார்க்கையில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் 1000
வருடங்களையாவது கடந்திருக்கும் என்பது புலனாகிறது.

 முடிவுரை:

பழங்காலத்திய ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோவில் படிக்கட்டுகள் மற்றும்
புதுப்பிக்கும் பணிகள் செய்து திருக்கோவிலை விரிவாக்கம் செய்தால் இன்னும்அதிக பக்தர்கள் வருவார்கள் .யாரேனும் ஓர் பக்தர் அதற்காக
படைக்கப்பட்டுருப்பார் .ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் பார்க்க வேண்டிய
ஆலயம்.நன்றி