Tuesday, June 28, 2011

இறைவழிபாட்டில் தீபங்கள் ஏற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்கள்


இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்





இலுப்பை எண்ணெய்- ஆரோக்கியம்,

நல்லெண்ணைய்- எமபயம் போக்கும்
நெய் தீபம்-ஞானம் ஏற்படும் .
விளக்கெண்ணெய் தீபம்- சகல சம்பத்தும் கிட்டும் .

தீபங்கள் அனைத்திற்கும் பருத்தி நூல் திரி ஏற்றுதல் சிறப்பாகும்.

வெண்கல விளக்கில் தீபமேற்றினால் - வீரிய விருத்தி .நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றுவதன் மூலம் எல்லா நன்மைகளும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் சனி ப்ரிதி உண்டாகும்.

இறைவனுக்கு தீபம் ஏற்றுங்கள் எல்லா வளங்களும் பெறுங்கள்.

தோஷப்பரிகாரமும் இறைவனுக்கு இட வேண்டிய தீபங்களின் எண்ணிக்கையும்


ஜாதக தோஷங்கள் நீங்க இறைவனுக்கு ஏற்ற வேண்டிய தீபங்கள் :-



சனிஸ்வர தோஷம் 9 தீபங்கள் ,

துர்க்கை அம்மனுக்கு 9 தீபங்கள்,

ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள் ,

ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள்
,
திருமண தோஷம் நீங்க -21 தீபங்கள்
,
காலசர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள்,

குரு தோஷம் நீங்க -33 தீபங்கள் ,

சர்ப்ப தோஷம்-48 தீபங்கள் ,

புத்திர தோஷம் நீங்க -51 தீபங்கள்


,களஷ்திரதோஸம் நீங்க- 108 தீபங்கள்

Thursday, June 23, 2011

அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம் ,சித்தோடு. ஈரோடு மாவட்டம் Arulmigu MANGALAMPIGAI & MATHESWARAR temple history chithode ,erode district






அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம்



ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் (chithode) அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும் .சித்தோடு நான்கு ரோடு சந்திப்பில் சித்தோட்டில் இருந்து பவானி செல்லும் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும்.இங்கு மூலவராக மாதேஸ்வரர் அமைந்துள்ளார் .அருகே மங்களாம்பிகை சன்னதி உள்ளது.


இங்கு குரு,லிங்கபத்மர் ,பிரம்மா,சனிஸ்வரர், துர்க்கை அம்மன்,காலைபைரவர் சன்னதிகள் உள்ளது. சிவராத்திரி பிரதோஷ பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகின்றது.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு காலை 11.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கோவில் அமைவிடம் சிறியதாக இருப்பினும் அழகாக இருக்கிறது.


ஈரோட்டில் இருந்து 8 கி.மிட்டர் தொலைவில் இருக்கும் சித்தோட்டிற்கு நீங்களும் வந்து

அருள்மிகு மாதேஸ்வரர் ,மங்களாம்பிகை

(arulmigu matheswarar & mangalampigai temple)

அருள்பெற்று செல்லுங்கள் .

நன்றி

அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில் ,காஞ்சிக்கோவில் பெருந்துறை வட்டம். arulmigu SEEDEVI ammpal thirukkovil. kanjikovil , perundurai taluk






அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் (erode district) பெருந்துறை வட்டம் (perundurai taluk)காஞ்சிக்கோவிலில் (kanjikovil) எனும் ஊரில் அமைந்துள்ள அற்புத ஆலயமாகும் . காஞ்சிக் கோவிலுக்கு ஈரோட்டில் இருந்து சுமார் 16 கி.மீட்டரும் சித்தோட்டில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத ஆலயமாகும். ஆலய முகப்பில் பெரிய அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது.

வருடம் ஒரு முறை குண்டத்திருவிழா நடைபெறுகிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால் கொடிமரம் வணங்கி விட்டு சிம்ம வாகனம் தரிசித்து மூலவரான சீதேவியை அழகிய தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி வீரமாத்தி ,குப்பண்ணசாமி ,முனியப்பன் ஆகிய சன்னதிகள் தரிசனம் செய்யலாம்.

ஸ்தல விருட்சமாக இலந்தை மரம் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அருகில் பக்தர்கள் தண்ணீர் வசதிக்காக திருக்கோவில் உள்ளே கிணறு உள்ளது. பெரிய குதிரை வாகனம் உள்நுழையும் போது அழகாய் நம்மை வரவேற்கிறது.

பழங்கால கோவில் தரிசனம் நிறைவாக இருக்கிறது. திருக்கோவில் மண்டபம் கட்ட சக்தி மசாலா குழுமத்தினர் பெருளுதவி அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

சீதேவி அம்பாள் தரிசனம் பெற காஞ்சிக்கோவில் வந்து செல்லுங்கள்.

வளங்கள் கூடட்டும் .
மேலும் தகவல்களுடன் இவ் இடுகை நீட்டிக்கப்படும்.
நன்றி

Tuesday, June 21, 2011

அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில், தொப்பபாளையம் ,குருவரெட்டியூர். ARULMIGU IRUSI AMMAN TEMPLE HISTORY ,THOPPA PALAYAM (guruvareddiyur )




அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில்


ஈரோடு (erode ) மாவட்டம் பவானி வட்டம் (bhavani taluk )அம்மாபேட்டையில் (ammapet )இருந்து 10கி.மீட்டர் தொலைவில் குருவரெட்டியூரில் (guruvareddiyur)இருந்த 1கி.மீட்டர் தொலைவில் தொப்பபாளையம் (thoppapalayam)எனும் சிற்றூரின் வனத்தில் அமைந்துள்ளது.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது, இங்குள்ள வனத்தில் இருசியம்மன் மூலவராக அமைந்து பக்தர்களுக்கு அருள் தரும் அம்பிகையாக அமைந்துள்ளது ஓர் சிறப்பாகும்.

இருசியம்மன் அந்தியூரில் (anthiyur) அமைந்துள்ள சின்ன குருநாதசாமிக்கும் வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) அமைந்திருக்கும் பெரிய குருநாதசாமிக்கும் சகோதரி முறையிட்டு அழைப்பார்கள்.

தொப்பபாளையத்தில் அமைந்துள்ள இருசியம்மன் கோவிலில் மல்லியம்மன் ,வீரகாரகன்,வீரபத்திரன் இடும்பன் ஆகிய சிலைகள் தரிசனம் பெறலாம். வைகாசி மாதத்தில் வருடம் ஒரு முறை வனத்தில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அப்போது தொப்பபாளையத்தில் இருந்து இருசியம்மனுக்கு மகா தேர் கட்டி வனத்திற்கு அழைத்து வருவதுண்டு.

இரட்டை தேரில் குருவரெட்டியூர் பகுதி மக்களை அழைத்து ஓரு தேரை இழுக்க வைத்து வனத்திற்கு இருசியம்மனை காலம் காலமாக நடந்து வரும் மரபாகும்.மற்றொரு தேர் தொப்பபாளையம் ஊர் மக்கள் இழுத்து வந்து வனத்தில் இருசியம்மனை அலங்கரித்து பூஜை நடைபெறுகிறது. இக்கோவில் பூச்சாட்டின் போது தொப்ப பாளையம் வனத்தில் உள்ள எமதர்மராஜாவுக்கும் பூச்சாட்டுதல் மற்றும் விழா தொடங்கும்.


அருள்மிகு இருசியம்மனுக்கு வார பூஜையாக வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெறும். வனத்தில் கட்டுவர்த்தனை பூஜையாக ஞாயிறு மதியம் 12.00மணி அளவில் நடைபெறுகிறது. தொப்பபாளையம் வாருங்கள்

அருள்மிகு இருசியம்மன் அருள் பெற்று எல்லா வளமும்

நலமும் பெற வாழ்த்துக்கள்

நட்புடன் குரு.பழ.மாதேசு

by.guru.pala.mathesu

Saturday, June 18, 2011

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில், பவானி Arulmigu palani ahandavar thirukkovil. Bhavani




முருகர் துதிப்பாடல் ;

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு,
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் ,
செந்தமிழ்தநூல் விரித்தோனை விளங்கு,
வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்,
கார்மயில் வாகனைச் சாந்துணைப் போதும் மறவா தவர்கொரு தாழ்வில்லையே..!

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மத்தியில் பவானி அஞ்சல் அலுவலகம் அருகிலும் ராணா திருமண மண்டபம் அருகில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகிலும் பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முருகருக்கு என பவானி நகரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.கோவில் நுழைவாயிலில் வலப்புறமுள்ள ஆனைமுகத்தோன் கணபதியை வணங்கி விட்டு இடப்புறமுள்ள ஐயப்பனை வணங்கி திருக்கோவில் உள்ளே சென்றால் வெளிப்பிரகாரத்தில் அழகிய கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரம் சென்றால் வலப்புறம் அருள்மிகு பொன்னம்பலவாணரை தரிசித்து இடப்புறம் சிவகாமி அம்மாள் திரு உருவங்களை தரிசித்து திருக்கோவில் மூலவரான அருள்மிகு பழனி ஆண்டவரின் தரிசனம் கிட்டுகிறது.



நின்றவாறு வேலுடன் காணப்படும் முருகப்பெருமான் அழகு கம்பீரமானது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் அற்புதமான ஆலயமாக பழனி ஆண்டவர் தரிசனம் இருக்கும் என்பது திண்ணம்.

திருக்கோவிலின் உள்ளே வீரமுத்துக்குமாரசாமி, பிரம்மா, இடும்பன் துர்க்கை, நவநாயகர்கள் காலபைரவர் என திருக்கோவில் சுற்றி வரும் போது தரிசனம் செய்யலாம். தமிழக அறங்காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்படும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பெளர்ணமி, கிருத்திகை ,அமாவசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பார்க்க வேண்டிய ஆலயமாகும்.

கூடுதுறை பவானிக்கு வரும்போது தரிசித்து விட்டு மெயில் செய்யுங்ஙள்.

நன்றி

Sunday, June 12, 2011

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள் erode district important places,temples,dam ,tourist places





ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள்

1.அருள்மிகு சங்கமேஷ்வரர் ஆலயம் கூடுதுறை பவானி
2.அருள்மிகு வேதகீரிஷ்வரர் ஆலயம் ஊராட்சிக்கோட்டை
3.அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்,பண்ணாரி சத்தியமங்கலம்
4.சமணர் கோவில் விஜயமங்கலம்
5. வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் அதைச்சுற்றியுள்ள கோவில்கள்
6. அருள்மிகு சென்னிமலை முருகர் திருக்கோவில் (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம் ,அருணகிரியார் பாடிய ஸ்தலம்,பிண்ணாக்கு சித்தர் குகை உள்ள இடம்)
7.சீனாபுரம் முருகர் கோவில்
8. துடுப்பதி பெருமாள் கோவில்
9. பாலமலை சித்தேஷ்வரர் திருக்கோவில்
10.அருள்மிகு நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் (சாவடி பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள அகத்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்)
11.தம்பிக்கலை அய்யன் திருக்கோவில்
12. திண்டல் முருகர் கோவில்
13.கொடிமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில்
14. பாரியூர் கொண்டத்து காளியம்மன் ,அமர பரணிஷ்வரர் திருக்கோவில்
15.பவளமலை முருகர் கோவில்
16. வட்டமலை முருகன் கோவில்
17. திங்களுர் அப்பிச்சிமார் மடம் ( புஷ்ப நந்த தீர்த்தங்கரர் சமணக்கோவில்)
18.அருள்மலை முருகன் திருக்கோவில் திங்களூர் ( நஞ்சைய புலவரால் 1,000 திருப்புகழ் பாடிய இடம் )
19.அருள்மிகு நாட்டராயன் திருக்கோவில் ,வள்ளியரச்சல்
20.ஆதிநாதர் சமணக்கோவில், மமுட்டித்தோப்பு
21 அருள்மிகு தவளகிரி முருகன் கோவில் ,சத்தியமங்கலம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வெண் குன்று
22. சிவன்மலை முருகர் திருக்கோவில்
23.அந்தியூர் குருநாதசாமி திருக்கோவில்

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் , &அணைகள் :

1. பவானிசாகர் அணைக்கட்டு (மண்ணால் கட்டப்பட்ட அணை )
2.கொடிவேரி அணைக்கட்டு
3. குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு
4. வரட்டுப்பள்ளம் அணை
5.வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
6.பழமங்கலம் நடுகல்லில் பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல்
7.ஈரோடு அண்ணா ,பெரியார் நினைவகம்
8.ஈரோடு வ.உ.சி பூங்கா& அரசு அருங்காட்சியகம்
9.ஒடா நிலை தீரன் சின்னமலை நினைவு மண்டபம்
10.சமண முனிவர் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டின் இசைக்கல்வெட்டுள்ள அறச்சலூர் மலை 11 காலிங்கராயன் கி.பி 1282 ல் கட்டிய காலிங்கராயன் அணைக்கட்டு

Sunday, June 5, 2011

ரஜினி (RAJINI) என்றோர் மந்திரச்சொல்

ரஜினி என்றொரு மந்திரச்சொல் சுறுசுறுப்பின் இலக்கணம் . கோடிக்கணக்கில் பணம் இருந்தும் ,உடைகளில் பழக்கவழக்கங்களில் எளிமை. இப்படி ரஜினிகாந்த் ( RAJINIGANTH) பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய செய்தி. ரஜினிகாந்த்க்கு என்னவாயிற்று ..! என ரஜினிகாந்த் ரசிகர்களும், ஆன்மீகவாதிகளும் பெரியோர்களும் ,மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை சற்றே அசைபோடுகையில் ஈஸ்வரர் மேல் அளவுகடந்த பக்தியை சற்றே கூர்ந்து பார்த்தால் அறிய முடியும். .திருவண்ணாமலை என்றால் அண்ணாமலையாரையும் உண்ணாமலையம்மன், ரமண மகரிசி ஆகியோரைப்பற்றி மட்டுமே தெரிந்திருந்த தமிழக மக்களுக்கு அண்ணாமலையாரின் சூட்சம சக்தியை ,கிரிவலத்தின் மேன்மையை ,கிரிவலத்தில் நடந்துபோக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்காக கிரிவலப்பாதையில் மின் விளக்கிட்டு கொடுத்த அகல்விளக்கு திரு. ரஜினிகாந்த் ஆவார். அண்மையில் நடந்த திருவண்ணாமலை தீபம் கார்த்திகை 2010 ல் அண்ணாமலையாருக்காக ஏதேனும் செய்து தர வேண்டும் என விரும்பி ராட்சத ஒளிவிளக்குகள் வசதி செய்து திருவண்ணாமலையின் உள்பிரகாரங்கள் கோபுரங்கள் ,வீதிகளை அழகாக்கியவர் நடிகர் ரஜினிகாந்த். திருவண்ணாமலையின் பெருமைகளை யோகிராம் சுரத்குமார் அவர்களைப்பற்றி நிறைய சொல்லிருக்கின்ற அடிக்கடி வந்து செல்கின்ற எழுத்துச்சித்தர் பாலகுமாரன், இளையராஜா ஆகியோரும் பாரட்டிற்குரியவர்களே. ரஜினி அவர்களின் ஒயாத உழைப்பிற்கு ஓய்வு தேவை. அதன் பொருட்டே அவர் உடல் நிலையில் சற்றே பாதிப்பு . அண்ணாமலையாரின் அருளால் அவர் இந்த சிறுபிணியில் இருந்து மீண்டு (ம்) வருவார். நல்லதொரு ஒய்வுக்குபின் ரஜினிகாந்த் அவர்களால் ஆன்மீகத்திற்கும் ,பொதுவாழ்விற்கும், ரசிகர்களுக்கும் தமிழகத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். நல்லா குணமாகிட்டு சீக்கிரம் வாங்க தலைவா ...!

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில் தொப்ப பாளையம் ( thoppa palayam )








அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து 10 கி.மீ ல் உள்ள குருவரெட்டியூருக்கு மேற்கே 2 கி.மீட்டரில் உள்ள தொப்பபாளையம் எனும் ஊரின் வனத்தில் அமைந்துள்ளது.இங்கு மூலவராக எமதர்மராஜா அமைந்துள்ளார். இக்கோவிலை ஏமராசா என்றும் எமராசா என்றும் இப்பகுதியில் அழைக்கின்றனர்.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது. கோவிலின் ஸ்தலமரமாக 700 ஆண்டு பழமையான புளியமரம் அமைந்துள்ளது.இதன் அருகே வன்னி மரமும்,ஆலமரமும் மற்றும் பல மரங்களுடன் அமைதியான சூழழில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஏமதர்மராஜா கோவிலின் உள்ளே இருசியம்மன் ,இடும்பன் வீரகாரகன் குருநாதசாமி, மல்லியம்மன் ,ஐயனாரப்பன் சன்னதிகள் உள்ளது.முக அமைப்பில் இது குருநாதசாமி கோவில் போன்ற அமைப்பு உள்ளதால் இது குருநாத சாமியின் சார்புடைய கோவிலாக கருதலாம்.இங்கு பேய் பிடித்து அவதிப்படுபவர்களுக்கும் செய்வினை ,எதிரிகள் தொல்லைகளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு 8.00மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது .வருடத்தின் ஜீன் மாதத்தின் முதல் வாரத்தில் சார்பு கோவிலான இருசியம்மன் கோவில் உடன் எமதர்மராஜா கோவிலும் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.அமாவசை அன்று மதியம் 1200 வரும் பக்தர்களுக்காக கற்பூர ஆராதனைபூஜை செய்யப்படுகிறது.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிலை,பாக்கு பழம் இரும்பு விழங்கு ஆரியவைகள் தலா 1 மற்றும் பெற்று கட்டுவர்த்தனை பூஜை செய்கிறார்கள்.இங்கு பச்சை பூஜை நம் காரியம் நிறைவேற வேண்டி, வேண்டுதல் நடந்தவர்களுக்கும், சாந்திபூஜை என்பது நமக்கு துன்பம் செய்யும் எதிரிகளை அமைதிப்படுத்தும் பூஜையாக வரும் பக்தர்களுக்காக செய்யப்படுகிறது.

கை,கால் வராமல் படுத்த படுக்கையாக கிடந்த நோயளிகள் கூட இங்கு வந்து சரியானதுண்டு.

நீங்களும் வந்து வணங்கி விட்டு உங்கள் கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, June 4, 2011

அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் .பாலமலை அடிவாரம் கரடிப்பட்டியூர் ,குருவரெட்டியூர்









பாலும் தெளிதேனும் பாகும்பருப்புமிவை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்க கரிமுகத்து தூமானியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும்தா -

ஔவையார்


அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில்,

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை வழியாக குருவரெட்டியூரில் இருந்து கரடிப்பட்டியூர் சென்று அங்கிருந்து பாலமலை சித்தேஷ்வரர் மலைக்கு செல்லும் அடிவாரத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

பாலமலையின் இயற்கை சாரலில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயமும் பிரமாண்ட அரசமரமும் அழகானது,சுத்தமான காற்றும் இயற்கையின் தாலாட்டும் மிக்க ஓர் அருமையான ஆலயமாகும்.

கோவில் பின்புறம் இடப்பக்கமாக பாம்பு புற்று உள்ளது. புரட்டாசி மாதத்தில் சித்தேஷ்வரரை வழிபட பாலமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த அடிவார சித்தி விநாயகரை தரிசனம் செய்தும் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம்.

புரட்டாசி 3வது,4வது சனிக்கிழமைகளில் சித்தி விநாயகருக்கு பெரும்பூஜை செய்து அன்னதானத்தை சில ஆன்றோர்கள் செய்வது வழக்கம். குருவரெட்டியூரில் இருந்து ( 3கி.மீ ) அவ்வப்போது வந்து பக்தர்கள் சித்தி விநாயகரை வழிபடுவதுண்டு.

அருகில் கரடிப்பட்டியூர் ஏரி உள்ளது. மற்ற நாட்களில் கூட்டம் இருக்காது என்றாலும் அமைதியான அழகான மலைப்பாங்கான தூய்மையான இடத்தில் இருக்கும் சித்திவிநாயகரை ,அருகே சுதகையில் உள்ள அடிவார சித்தேஷ்வரரையும் வணங்குகள்,

உங்கள் காரியம் " சித்தி " அடையும் நம்புங்கள்.

Friday, June 3, 2011

குருவரெட்டியூர் (Guruvareddiyur)




GURUVAREDDIYUR VILLAGE ,


ANTHIYUR TALUK ,ERODE DISTRICT  


குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR) எனும் இலிப்பிலி கிராமம் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியமாகும்.

வடகிழக்கில் பாலமலை எனும் சித்தேஷ்வரமலையும் கிழக்கில் அம்மாபேட்டையும் (10கி.மீ) தெற்கில் பூனாச்சி (5கி.மீ) மேற்கில் அந்தியூர் வனப்பகுதியும் வெள்ளித்திருப்பூர்(7கி.மீ) வடக்கில் கொளத்தூர் (30கி.மீ) என எல்லைப்பகுதிகளாக கொண்ட சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒர் அழகிய ஊராகும்.

குருவரெட்டியூரில் (guruvareddiyur) கக்குவாய் மாரியம்மன் செல்வ விநாயகர் ,ஈஷ்வரன் கோவில் ,சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் ஊரின் முகப்பில் உள்ள அக்னி மாரியம்மன் கோவில்,நாகர்கோவில்,மதுரைவீரன் ஆகிய திருக்கோவில்கள், குறிப்பிடத்தக்கதாகும். இங்கு முதலியார்,ரெட்டியார்,கொங்கு வெள்ளாளக்கவுண்டர்கள், படையாட்சி கவுண்டர்கள் வேட்டுவக் கவுண்டர்கள் இனத்தைச்சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி (GURUVAREDDIYUR G .H. S.SCHO0L) பழமை வாய்ந்த புகழ்பெற்ற இருபாலர் பயிலும் பள்ளியாகும்.கண்ணாமூச்சி,கொளத்தூர் செல்லும் வழியில் குருவரெட்டியூர் அரசு மருத்துவமனை உள்ளது. விரிவாக்கப்படும்.

குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR)அருகில் பொரவி பாளையத்தில்(PORAVIPALAYAM) பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவிலும் ( 3 கி.மீ ) தொப்பபாளையத்தில்(THOPPAPALAYAM) உள்ள ஏமராசா,இருசியம்மன் (2கி.மீ),வெள்ளித்திருப்பூர் (VELLITHTHIRUPUR) அருகிலுள்ள பளிங்கிஷ்வரர் ஆலயம் (5கி.மீ),மற்றும் கோனார்பாளையத்திலுள்ள (konarpalayam)கருப்பணசாமி,ஆஞ்சநேயர் கோவில்ஆகிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை.


 GURUVAREDDIYUR ERODE DISTRICT


அருகிலுள்ள பாலமலை அடிவார சித்தி விநாயகர் கோவில்,

7 மலை தாண்டியுள்ள சித்தேஷ்வரர் மலையும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...